Saturday, November 1, 2008

வயது முதிர்ந்த பூக்கள்

மொக்கை பதிவு போடலாமின்னு தான் வந்தேன் .. அப்பறம் பாருங்க திடீர் ஞானோதயம் வந்து சின்ன கதை எழுதிட்டேன் :) ஹி ஹி

-------------------------------------------------------------------------------------------------


"காமாட்சி !!
காமாட்சி !! "

வீட்டினுள் நுழையும்போதே மனைவியின் பெயரை கூப்பிட்டுகொண்டே வருவது தான் சோமசேகரின் வழக்கம்.
வாங்கி வந்த பூமாலையை சுவாமி படங்களுக்கு போட்டுக்கொண்டே பேசலானார்.

"இந்த பூக்களை வாங்கறதுக்கு காசு கொடுத்து மாளலை, என்னமா விலைவாசி ஏறி போயிருக்கு...... அட நம்ம ராமசாமியை பார்த்தேன் மா... அவனும் காய்கறி வாங்க கடைக்கு வந்திருந்தான்.. அவன் பெரிய பையன் அடுத்த மாதம் US போறானாம்.. அங்க நடைமுரைஎல்லாம் என்ன ஏதுன்னு கேட்டுட்டு இருந்தான்.... நான் நம்ம சீனு போன் நம்பரை தந்துட்டு வந்தேன்.... இரண்டு வருஷ அக்ரீமென்ட் போலிருக்கு... என்ன அக்ரீமென்ட் போட்டு என்ன பயன், அங்க போகிற பசங்க அங்கேயே இருந்துடனும்ன்னு தான் விரும்புறாங்க. இது இந்த மடபயலுக்கு புரியல ... பெருமையா பேசிட்டிருக்கான்"

"அவன சொல்லி என்ன தப்பு நானும் ஆறு வருஷத்துக்கு முன்னாடி இப்படித்தானே இருந்தேன்"

தொலைபேசி அழைத்தது .....

"நீ இரு காமு நான் எடுக்கறேன்"

"ஹலோ"

"அப்பா நான் தான் .. நல்லா இருக்கீங்களா??"

"சீனுவா... நானும் அம்மாவும் நல்லா இருக்கோம் .. நீங்க எல்லாரும் சவுக்கியமா இருக்கீங்களா"

"நல்லா இருக்கோம்பா, உங்க உடம்பு எப்படி இருக்கு .. மாத்திரையெல்லாம்
சாப்பிடுறீங்களா ?"

"அட அத விடு... என் பேரன் இருக்கானா அவன பேச சொல்லுப்பா"

"அவன் தூங்கிட்டான், இப்ப மணி 11:30 ... அடுத்த தடவ கண்டிப்பா பேசவைக்கறேனப்பா"

"என்ன டா நீ வாரத்துக்கு ஒரு முறை தான் பேசற அப்பவாது எல்லாரும் பேலாமில்லையா?? நீ இத்தன நேரமா ஏன் தூங்காம இருக்க ??"

"வேலையெல்லாம் இப்ப தான் முடிஞ்சுது... பத்மா ஆபீஸ் வேலையா காலிபோர்னியா போயிருக்கா , இரண்டு நாள்ல வந்துடுவா வந்ததும் பேச சொல்றேன்"

"சரிப்பா ....."

"நீண்ட உடம்பை பாத்துக்கோங்கப்பா.. நான் அப்பறம் பேசறேன்"

"சரிப்பா .. நீயும் பாத்துக்க"

வருத்தத்துடன் ரிசீவரை வைத்து விட்டு ஈசி சேரில் சாய்ந்தார்..

"பாத்தியா காமு அவ்வளவு தான் இரத்த பந்தம்... நீ இறந்து போனபோதே அவன் கடமையை செய்யறதுக்கு வரமுடியாம நாலு நாள் கழிச்சு தான் வந்தான்... எனக்கு மட்டும் எல்லாம் பண்ணிடபோரானா என்ன... எனகென்ன விதியோ !!"

"என் நண்பன் அய்யாசாமி இருக்கற முதியோர் இல்லத்துக்கு போயிடலாமா காமு ??"

போட்டோ மேல் போட்டிருந்த மலர்மாலை சோமசேகரின் காலருகில் விழுந்தது.

கண்ணாடியை போட்டுக்கொண்டு அய்யாசாமியின் மொபைல் நம்பரை தேடினார்.

Tuesday, September 30, 2008

பத்து வயதில் ....

"முரளி, இனிமேல் நீ School க்கு வரவேமாட்டியா டா"

"வரமாட்டேன் டா"...."எனக்கு எங்கேயும் வேலை கிடைக்கலையே, அதுவே கஷ்டமா இருக்கு"

"நீ வேலைக்கெல்லாம் போக வேணாம் டா, school க்கே வந்து சேர்ந்துடு டா"

"வீட்டுல காசே இல்லையே டா விமல் , எங்க அப்பா இருந்த வரைக்கும் நானும் என் தங்கச்சி பாப்பாவும் நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்னு சொல்லுவாரு, அப்பா செத்துபோனப்ப, "அப்பா செத்து போய்ட்டாரு முரளி, அவரு சம்பாதிச்சதால, நாம சாப்பிட்டுகிட்டு ஒண்டு குடித்தனம் பண்ணினோம் ..இனிமேல் காசு கொண்டுவர அப்பா இல்லையே டா...." அம்மா என்ன கட்டிபிடிச்சு அழுதத நீயே பார்த்தியே டா"

"உங்க அம்மா தான் வீட்டு வேலைக்கு போறாங்களே டா, நீயும் தங்கச்சி பாப்பாவும் school க்கு வந்துடுங்க"

"அம்மாவுக்கு வர சம்பளம் சாப்பாட்டுக்கு தான்டா போதுமானதா இருக்கும் ..வீட்டு வாடகையெல்லாம் அம்மா கடன் சொல்லிருக்கு....."

"ஹ்ம்ம் தங்கச்சி என்னடா பண்ணுது"

"நம்ம maths miss வீட்டுல வேலை பார்க்குது "

"அதுக்கு வேலையே தெரியாதேடா"

"ஆமாடா பாவம், miss school க்கு போனதும் அவங்க குழந்தைய பார்த்துக்கிற வேலை "...."நான் தான் டா சும்மா இருக்கேன்....அப்பா லாரி ஓட்டின கம்பெனியில இரண்டு நாள் தான் டா வேலைக்கு போனேன் முதலாளி என்ன நல்லா நடத்தினாரு ..என்ன ஆச்சுன்னே தெரியல திடீர்னு கூப்பிட்டு நாளைல இருந்து வேலைக்கு வராதப்பான்னு சொல்லிட்டார்"

"..."

"நாளைக்கு அம்மா, அண்ணாச்சி மளிகை கடையில சேர்த்து விடறேன்னு சொல்லிச்சு டா"

"எந்த கடைடா?"

"முருகர் கோவிலுக்கு பக்கத்தில இருக்கே அந்த கடை"

"சரிடா அடுத்த வாரம் 1st term test இருக்கு, prepare பண்ணனும் நான் வீட்டுக்கு போறேன்"

"உன்கூட போட்டி போட நான்தான் இல்லையே அப்பறம் என்னடா நீ தான் 1st rank எடுப்ப :) போய் நல்லா படி"

நண்பனிடமிருந்து சோகமாய் விடைபெற்று வீட்டிற்கு சென்றான்.


விமலின் அப்பா அப்பொழுது தான் Duty முடிந்து வந்திருந்தார். மெதுவாய் அவர் அருகில் சென்றான்,

"என்ன விமல், முரளியை பார்த்தியா இன்னைக்கு"

"ஆமாப்பா"

"சொல்லு, எதையோ சொல்ல நினைக்கிற மாதிரி இருக்கு"

"அந்த Transport owner கிட்ட சொன்ன மாதிரி, முருகன் கோவில் பக்கத்தில இருக்கிற annachi கடயிலையும்முரளியை வேலைக்கு வைக்க வேணாமின்னு சொல்லணும்பா"

"முரளி அங்க வேலைக்கு போகபோறானா?"

"ஆமா நாளைக்கு அவன் அம்மா அந்த கடையில சேர்க்கபோறாங்க"

"இங்க பாரு விமல், நீ கஷ்டபடுறது எனக்கு புரியுது. அதுக்காக அவன் எங்கேயெல்லாம் வேலைக்கு போகிறானோ அங்க போய் என்னோட sub-inspector அதிகாரத்தை வைச்சு பேச முடியாது. இந்த ஊரில எத்தனையோ factory, company னு சின்ன பசங்கள வேலைக்கு வெச்சிருக்காங்க. நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் இதை ஒழிக்க முடியல. சின்ன குழந்தைங்க அவங்க வீட்டு கஷ்டத்திற்காக தான் வேலைக்கு போறாங்களே தவிர, அவங்களா விருப்பப்பட்டு போகல. ஏன் உன் நண்பன் முரளி கூட அதுக்காக தான போறான்..."சரி நான் இதுக்கு ஒரு வழி சொல்றேன் கேட்கறியா?"

"சொல்லுங்கப்பா"

"எனக்கு தெரிஞ்ச அமைப்பின் மூலமா முரளி அப்பறம் அவன் தங்கையோட படிப்பு செலவுக்கு ஏற்பாடு பண்ணிடலாம். அது தவிர இருக்கிற செலவுகள நான் பார்த்துகிறேன்"..."உன் முரளி உன்கூட school க்கு வருவான், அப்பறம் நீங்க ரெண்டு பேரும் போட்டி போட்டு படிக்கலாம்"

"நிஜமாவா சொல்றீங்கப்பா :)"

"ஆமா விமல், இது நானும் உன் அம்மாவும் சேர்ந்து எடுத்த முடிவு தான், school விட்டு வந்ததும் உன்கிட்ட சொல்லனும்னு இருந்தோம், முரளியோட அம்மாவை நாளைக்கு கூட்டிட்டு வா இதை பத்தி சொல்லிடலாம்"

"இப்பவே கூட்டிட்டு வரேன், சொல்லிடுங்க" என்று நிற்காமல் முரளியின் வீட்டிற்கு ஓடினான் விமல்.

சமுதாய சீர்கேடுகளை ஒவ்வொரு தனி மனித முயற்சியின் மூலம் திறுத்தலாம் என்கிற சிறு நம்பிக்கை தான் இச்சிறுகதை