Friday, August 29, 2008

சுகமான வலி ..





அசராமல் பேசியே உன் நினைவுகளின்

பாரத்தை என்னிடம் விட்டுச்செல்கிறாய் !!



அசந்திடும் வேலையிலும் பாரத்தை

சுமக்கின்றேன் சுகமான வலியோடு !!


Thursday, August 28, 2008

எங்க கிட்டயே வா ...

Hero: அப்படியா பண்ணினான் அவன், அவனுக்கு தெனாவட்டு அதிகமாஆகிடுச்சு அதான் இப்படி எல்லாம் பண்ணிட்டு திரியறான். நான் யாருனு ஒரு காட்டு காட்டினா தெரியும்.


Heroine: வேணாம் விடு, இத பெரிய பிரச்சனையா போய் சண்டையெல்லாம் போடாத . அப்பறம் உன்ன எதாவது பண்ணிடபோறான்


Hero: உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சுருக்கா? இந்த ஏரியா ல நான் எப்படி பட்டவன்னு உனக்கே தெரியும். தெரிஞ்ச நீயா இப்படி பேசற.


Heroine: எனக்கு தெரியாதா உன்ன பத்தி. ஆனா அவன் இந்த ஏரியா வுக்கு புதுசு, அவனுக்கு எப்படி உன்ன பத்தி தெரியும். அதோட அவன் GYM வேற வைச்சு நடத்தறான். ஆள் பலம் உன்ன விட அதிகம் அதனால தான் சொல்றேன். எனக்கு நீ முக்கியம், ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற.


Hero: நா சொல்றது எதையும் நீ கேக்காத, ஆனா நீ சொல்றத மட்டும் நா கேக்கனுமா? உன்ன அவன் இருக்கற பக்கம் போகாத, அவன் ஒரு மாதிரினு போன வாரமே சொன்னேன். பின்ன ஏன் போன?


Heroine: Lousie தான் கூப்பிட்டா, அந்த Bakery க்கு போகலாம்னு. நீ திட்டுவ போகவேணாம்னு சொன்னேன் அவ தான் Compell பண்ணி கூட்டிட்டு போய்ட்டா.


Hero: அவனோட Bakery னு தெரிந்தே போயிருக்க நீ. இனிமேல் அவளோட சேராத

Hero Friend Entry......


Friend: என்ன டா மச்சான் கடுப்பா இருக்க? உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா sister?


Hero: அவன் அடங்கமாட்டான் போல டா, இன்னைக்கு என் ஆளு மேலையே கை வெச்சுருக்கான்..


Friend: என்ன டா மாப்ள சொல்ற? யாருடா நம்ம sister மேலேயே கை வெச்சது? கதை கேட்டுட்டு இருக்கியா நீ, நான் போய் நம்ம பசங்கள கூட்டிட்டு வரேன். யாரா இருந்தாலும் போட்டுடலாம் இன்னைக்கு.


Hero: அந்த Flat ல புதுசா வந்துருக்கானே அவன் தான். Gym வெச்சுருந்தா பாயந்துடுவோமா நாம. Blood Boil ஆகுது மச்சி, நம்ம ராமு ஆளு மேல கைய வைச்சதுக்கே அவன போட்டுருக்கணும். தப்பு பண்ணிடோம் டா.


Heroine: வேணாம் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.


Hero: நீ வீட்டுக்கு போ. நாங்க பாத்துகறோம்.


Heroine: இல்ல ..


Hero: கெளம்பு னு சொல்றேன் ல. போ


Friend: இப்ப ஒன்னும் கெட்டுப்போகல டா. நீ tension ஆகாத மாப்ள இன்னைக்கு நாமா அவனா னு பாத்துடலாம். நான் போய் நம்ம பசங்கள கூட்டிட்டு வரேன், நீ வேணும்னா சொல்லு பக்கத்து ஏரியா பசங்களையும் support க்கு கூப்பிடுக்கலாம்.


Hero: ச்சிஅவனுக்கு நம்ம பசங்களே போதும் டா. ஏண்டா இவன் ஆளு மேல கைய வைச்சோம்னு அவன் நெனச்சு நெனச்சு feel பண்ணனும். உயிர மட்டும் உடம்புல விடனும் டா.


Friend: நீ இங்கேயே இரு, பசங்களோட வரேன்


Hero: ம் சரி சீக்கிரம் வா


.............................


Friend: வந்துடோம் டா. வா இப்ப போகலாம். அவன் Bakery a close பண்ணுற நேரம். இப்ப போனா correct a இருக்கும்.


அனைவரும் படைஎடுத்து Bakery முன் போய் நின்றனர்.


Bakery Owner: ச்சி நாய்களா, மிச்சம் மீதி தின்றதுக்குனே வந்துடுதுங்க, அந்த குச்சியை எடுமா. காலைல ரெண்டு நாய விரட்டினா, சாயுங்காலம் இத்தனை வந்து நிக்குது. இந்த area ல நாய்கள் தொல்லை இவ்வளவு அதிகமா இருக்கே. தே ச்சி ஓடுங்க !!!

Monday, August 25, 2008

காதலெனும் கடலில் ..

மனம் போல் மாங்கல்யம் என்கிற பழமொழியின் முழு அர்த்தம் தெரியாது ஆனால் தனக்கு அமைந்த மன வாழ்க்கையை எண்ணி பூரித்துப்போயிருந்தாள் வாணி. திருமணம் முடிந்து நான்கு நாட்களாகி விட்டது. இரண்டு நாட்கள் பிறந்த வீட்டிலும் இரண்டு நாட்கள் புகுந்த வீட்டிலும் கழித்தாகி விட்டது. இனி கணவரோடு மும்பை செல்ல வேண்டியது தான்.

பிறந்து, வளர்ந்து, படித்து, வேலை பார்த்த சென்னையை விட்டு செல்ல வேண்டும். இதை நினைக்கும் போதே சிறு கவிதை தோன்றிற்று வாணிக்கு.

என் வீடு, என் அறை,
என் கட்டில், என் அலமாரி,
என் நாய்குட்டி, எத்தனை மமதை
உன் ஒற்றை உறவுக்காக அத்தனையையும்
விட்டுவிட்டு வா என்கிறாயே !!
இளவரசியாக இருந்த என்னை
ராணியாக வாழ கூப்பிடுகிறாய்
இது புரியவில்லையே இந்த பேதைக்கு !!

அப்பாவின் அறிவுரை, அம்மாவின் கண்ணீர், தம்பியின் சந்தோஷ தழுவல், நாய்குட்டியுடன் கடைசி நேர கொஞ்சல், எல்லாம் முடிந்து கிளம்புகிற நேரம் வந்திற்று. அனைத்து உறவினர்களின் வாழ்த்து பெற்று ரயிலில், இனி கணவன் தான் எல்லாம் என்று ஏறினாள்.

கணவனிடம் பேச தோன்றவில்லை அவளுக்கு, கண்கள் கலங்கியது, வாழ்கையில் இது வரை அனுபவித்திடாது ஒரு வெறுமையை உணர்ந்தாள். "வாணி ! என்ன மா ஆச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்க.." மதன் கேட்க..
"ம்ம் ஒண்ணுமில்ல " என்று மூழ்கிய சிந்தனையிலிருந்து வெளிப்பட்டாள்.

"என்ன வாணி எல்லாரையும் விட்டுட்டு புது ஊர், புது இடத்துக்கு போகபோறோமேனு நினைச்சுட்டு இருக்கியா. எனக்கு புரியுது உனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு. எல்லாம் கொஞ்ச நாள்ல சரி ஆயிடும், U can take your own time. உடனே Job search பண்ணனும்னு அவசியம் இல்ல, உனக்கு அங்க நல்ல set ஆன அப்பறம் பாத்தா போதும். "

வாணி அவன் கண்களையே பார்த்து அவன் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தாள்.

"என்ன வாணி, நான் இருக்கேன் மா உனக்கு.. நீ எதுக்காகவும் கவலைப்படகூடாது" என்று கூறி அவள் வலது கரத்தை இருக்க பிடித்துக்கொண்டான். அத்தனை ஆறுதலான வார்த்தைகள், லேசாக புன்னகைத்து அவன் தோல் மேல் சாய்ந்து கொண்டாள்.

மதன் மிகவும் அமைதியானவன், அதிர்ந்து கூட பேசமாட்டான். தான் ME முடித்தவன் MNC யில் Director ஆக பணிபுரிகிறோம் என்ற தோரணை ஏதும் இல்லாமல் எளிமையாகவே தோன்றினான். அதனாலேயோ என்னவோ வாணியின் அப்பாவிற்கு மதனை பார்த்ததும் பிடித்துவிட்டது.

மற்றவர்களைப்போல் கல்யாணத்திற்கு முன்பு கைபேசியில் மணிக்கணக்கில் பேசியது கிடையாது, பேச நேரமும் கிடைக்கவில்லை. வாணியின் அப்பா பதினைந்தே நாட்களில் திருமனத்தேதி குறித்து விட்டார் . தடபுடலாக திருமணம் நடந்தது.சென்ற மாதம் வரை மதனுடன் தன் வாழ்கை இணையப்போகிறது என்று வாணி நினைத்துப்பார்கவில்லை.

"மதன் நீங்க கவிதை எழுதுவீங்களா?" என சட்டென்று மதனை கேட்டாள்

" :) என்ன திடீர்னு கேக்கற?"

"இல்ல நா சும்மா நேரம் கிடைக்கும் போதுஏதாவது எழுதுவேன் அதான் கேட்டேன்"
"அப்படியா !! எனக்கு கவிதை கதை எதுவும் எழுதத்தெரியாது", என்று புன்னகைத்தான்

மும்பை - ...................

திங்கட்கிழமை காலை,புதிதாக கட்டப்பட்டிருந்த 2HBK flat ட்டில் புதுக்குடித்தனம், Packers and Movers மூலம் வந்த பொருட்கள் பாதி பிரித்தும் பிரிக்காமலும் இருந்தது.மதன் அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தான். வாணி அப்போது தான் எழுந்தாள்.....

"Ready ஆயிடீங்களா மதன்?"
"ஆமா வாணி உனக்கு Breakfast வாங்கி வெச்சுருக்கேன், சாப்பிட்டு rest எடு. அப்பறம் நீ இதெல்லாம் தனியா arrange பண்ணிட்டு இருக்காத. Evening சீக்கிரம் வந்துடுவேன், நா வந்தப்பறம் பாத்துக்கலாம், Mess ல lunch சொல்லிருக்கேன் வந்துடும், ஒரு சின்ன பையன் தான் கொண்டு வருவான் பாத்துக்க"

"சரி evening எப்ப வருவீங்க?"

"ஹ்ம்ம் 4 மணிக்குள்ள வந்துடுவேன், சொல்ல மறந்துட்டேன் அந்த பெரிய Box open பண்ணாத, அதெல்லாம் என் room ல இருந்து vacate பண்ண things , நா வந்து arrange பண்றேன்"

"ஹ்ம்ம் ok, Good day!!"
அருகே வந்து அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான், Take care da என்று கூறிவிட்டு கிளம்பினான்

அன்று -

உன்னை நேருக்கு நேர் காண கண்கள் தயங்கின
கடைக்கண்ணே தக்க உதவியாய் இருந்தது
உன்னிடம் பேச வார்த்தைகள் வரவில்லை
வெறும் காற்றின் உச்சரிப்பை வைத்தே அர்த்தம் கண்டாய்
நாணம் என் சீலையுடன் என்னை சேர்த்து கட்டிக்கொண்டது !!

இன்று -

இரண்டு கண்களும் ஒன்றை ஒன்று ஆட்கொண்டது
ஈருடல் ஓருயிர் என்பதன் அர்த்தம் புரிந்தது
பேச வார்த்தைகள் தெரிந்தும் - இது
பேசுவதற்கான நேரம் இல்லையென உணர்ந்தேன்
எனக்குள் இருந்த நாணம் எடுபடாமல் போய்விட்டதே !!

தன்னை நினைத்து சிரித்துக்கொண்டே படுக்கையில் சாய்ந்தாள்

எவ்வளவு நேரம் தான் படுத்துக்கொண்டிருப்பது என்று வாணி Packing பொருட்களை அடுக்கிவைத்தாள். பெண்களுக்கே உரித்தான ஆர்வம் மதன் எந்த பெட்டியை திறக்க வேண்டாம் என்று கூறினானோ அதை திறப்பதற்காக பெட்டியை இறக்கி Dining table மீது வைத்தாள். Packing மிகவும் strong ஆக இருந்ததால் தன்னிடமிருந்த கத்திரிக்கோலால் அதை பிரிக்க முடியவில்லை. கத்தியை தேடிப்பிடித்து packing labels ஐ கிழித்தாள். தலையணை அளவிற்கு நிறைய புத்தகங்கள். எல்லா புத்தகங்களையும் study room யில் உள்ள கண்ணாடி அலமாரியில் அடுக்கிவைத்தாள். இரண்டு tennis bat கள், சுவாமி படங்கள், சில project files .. எல்லாவற்றையும் சீர் படுத்தினாள். பிறகு தான் அந்த பெட்டியின் அடியில் ஒரு Briefcase இருப்பதை பார்த்தாள். அதை வெளியே எடுத்து வைத்து விட்டு அந்த இடத்தை சுத்தப்படுத்தினாள்.

மறுபடியும் தான் புத்தகங்களை அடுக்கி வைத்த அலமாரியை பார்த்து, மதன் இதன் பார்த்தால் சந்தோஷப்படுவான் என்று பெருமிதம் கொண்டாள்.திரும்பவும் வந்து Dining table லில் இருந்த Briefcase ஐ திறந்தாள்.

இரண்டு பெரிய கவர்கள் இருந்தன . முதல் கவரை பிரித்ததில் அதில் உள்ள அனைத்தும் Love Greeting Cards, சுமார் நூற்றி ஐம்பது கார்டுகள் இருக்கும், அத்தனையும் காதலை வெளிப்படுத்தும் வகையிராக்கள். ஒன்றும் புரியவில்லை வாணிக்கு இடிந்து போய் உட்கார்ந்திருந்தாள். எல்லாவற்றிலும் "என் அன்பு கலைக்கு" என்ற தலைப்பும் தேதியும் இருந்தது. ஏழு வருடங்களுக்கு முன்பிருந்து சேகரித்த கார்டுகள் ,கடந்த பதினைந்து நாட்கள் வரை தேடியிட்டிருந்தது. வாணியின் கண்கள் கலங்கின. கண்ணீரால் எல்லாமே மங்கலாய் தெரிந்தது.

"மதன் ஒரு பெண்ணை காதலித்திருக்கிறானா?"

"யாரையாவது Love பண்ணிருகீங்களா மதன் னு கேட்டதுக்கு, உன்னைத்தவிர வேற யாரும் என் மனதில் இல்லை வாணி என்று கூறினானே" ச்சே எத்தனை பொய்யான வார்த்தைகள். பதினைந்து நாட்களுக்கு முன்பு வரையுள்ள கார்டை பார்த்தால்அந்த பெண்ணின் நினைவோடு தான் தன்னை திருமணம் முடித்திருக்கிறான். ஏன் இப்பொழுது கூட அவளின் நினைவுகளோடு தான் இருக்கிறான்."

"கடவுளே எனக்கு ஏன் இப்படி நடக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லயே. இத்தனை பொய்யான மனிதனோடு வாழ்க்கையா? வேண்டவே வேண்டாம் எல்லாம் முடிந்தது. இப்பொழுதாவது இவனைப்பற்றி தெரிந்ததே." வாழ்க்கையை மீட்டுக்கொண்டு கிளம்ப வேண்டியது தான் என்று முடிவெடுத்தாள்.

மற்றொரு கவரையும் பிரித்தாள், மூன்று பெரிய Diary கள் இருந்தன. "என் கலைமகளுக்கு சமர்ப்பணம்" என்ற தலைப்பு வேறு . உள்ளே முழுக்க முழுக்க கவிதைகள். இதுவும் பொய் ,கவிதையே எழுதத்தெரியாது என்றானே. வாழ்க்கையே தேவையில்லை என்றாகி விட்டது இனி என்ன ஆராய்ச்சி. எல்லாவற்றையும் தூக்கிஎறிந்து எழுந்தாள்.

மதன் அலுவகத்திலிருந்து கிளம்பினான். வாணியின் அப்பாவிடமிருந்து அழைப்பு வந்தது.

"எப்படியிருக்கீங்க மாப்ள, வாணி எப்படியிருக்கா?"

"நாங்க நல்லாயிருக்கோம் மாமா, வீட்ல எல்லாரும் நல்லாயிருக்காங்களா?"

"எங்களுக்கென்ன தம்பி நல்லாயிருக்கோம், நீங்க வாணி கிட்ட சொல்லிடீங்களா மாப்ள, நா அத பத்தி கேக்கறதுக்காக தான் போன் பண்ணினேன்."

"இல்ல மாமா இன்னைக்கு தான் சொல்லபோறேன். அதுக்காக தான் office லருந்து சீக்கிரமாவே கிளம்பறேன்"

"அப்படியா, நீங்க அவ காலேஜ் சீனியர் , அவளுக்கு தெரியாமலே ஏழு வருஷமா தன்னையே நினைச்சுட்டு இருந்தவரை கல்யாணம் பண்ணிருக்கோம்னு தெரிஞ்சா அவளுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் அத வாணி சொல்லி நா கேக்கணும் தம்பி "

" :) சரி மாமா அவ கிட்ட சொன்னதும் நானே உங்களுக்கு போன் பண்றேன், போதுமா"

" என்ன தம்பி நீங்க, நா கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லலாம்னு சொன்னேன், நீங்க வேணாம்னு சொல்லிடீங்க.. இப்ப சொல்லிருபீங்கனு பார்த்தா...இன்னைக்கு சொல்லிடுங்க தம்பி"

"இல்ல மாமா கண்டிப்பா சொல்றேன்"

தன் வாணிக்கு இன்ப அதிர்ச்சியை தரப்போவதை நினைத்துக்கொண்டே காரில் சென்றான்.

வீடு பூட்டியிருந்தது, கீழ் வீட்டு மாமி சாவியை கொந்துவந்து தந்தார்கள்.

"ஏன்பா உன் ஆத்துகாரிக்கும் நோக்கும் ஏதாவது பிரச்சனையா? கையில பெட்டியோட மூக்க சிந்திண்டே வந்து சாவியை தந்துட்டு போனா."

"என்ன மாமி சொல்றீங்க காலைல நல்லா தான இருந்தா என்கிட்டே எதுவும் சொல்லலையே"

"நா எவ்வளவோ கேட்டு பாத்தேன், நீ வந்ததுக்கு அப்பறம் போகச்சொன்னேன், எதையும் கேக்ற மனநிலையில அவ இல்ல. அவ தோப்பனாருக்கு inform பண்ணிடு.நான் வரேன்"

"ஆயிரத்தெட்டு குழப்பங்களோடு வீட்டினுள் நுழைந்தான். "

" Briefcase லிருந்து வெளியே கிடந்த கார்டுகளையும் கவிதை புத்தங்களையும் பார்த்ததும் புரிந்து வீட்டது மதனுக்கு.

ஏழு வருடங்களாக புதைத்து
வைத்திருந்த புதையல் !!
வெளிப்படுத்தினால் நீ துண்பப்படுவாயோ
என்று மனதிற்குள் பூட்டிவைத்திருந்தேன்!!
நான் துண்பப்பட்டால் பரவாயில்லை என்று !!
புதையல் வெளிப்பட்டால்
கட்டியணைத்துக்கொள்வாய் என நினைத்தேன் !!
என்னை தனியே விட்டுச்சென்று கொன்றாயே !!
வாணியும் நீ தான், என் கலைமகளும் நீ தான்,
என் ஊன் உயிர் அனைத்தும் நீ தான்
புரியவில்லையா உனக்கு ?

தன் கவிதையை கண்ணீரால் எழுதினான். இன்று வாங்கி வந்த கார்டில் "என் அன்பு வாணிக்கு" என தேதியிட்டு அதன் மீது தலை சாயித்துக்கொண்டான்.


மயக்கத்திலிருந்து எழுவது போல கண்களை திறந்தான் மதன். நெடுநேரம் ஆகிவிட்டதோ வாணியின் அப்பாவிற்கு போன் பண்ணனுமே என எழுந்தான் .

அருகே வாணி !!?!!

இது கனவா? நினைவா?

"வாணி ? வந்துட்டியா....."

கண்களில் நீர் பெருக ஓடி வந்து மதனை கட்டிகொண்டாள்.."மன்னிச்சுடுங்க மதன் .. அப்பா சொன்ன அப்பறம் தான் எனக்கு புரிந்தது, Im so sorry..I hurted u alot..என்ன மன்னிச்சுடுங்க please"

"அன்பின் மலையின் அருகே
மடுகாகிப் போனேன் !!
விலை மதிக்க முடியாத மாணிக்கத்தை
இழக்க இருந்தேன் !!
ஈடு இணையில்லாத பொக்கிஷத்தை
உதாசினப்படுத்தி விட்டேன் !!
சிறு பிள்ளையின் தவறை தாய்
மன்னிப்பதில்லையா !!
காதல் கடலை கானல் நீராய்க்கூட
உணராமல் போனேன் !!
உன் அன்பிற்கு அடிமையாக வந்துள்ளேன்
ஏற்றுக்கொள்வாயா ??"


இந்த கவிதையுடன் நம் கதையும் முடிந்தது ...

"Love is not a business nor a give and take policy... Its like Bank account..whatever u deposit, one day u will get with interest"

இதைத் தான் இவ்வளவு நேரமாக சொல்ல வந்தேன் .. புரிந்திருந்தால் சரி .. பொறுமையாக படித்த தங்களுக்கும், தங்கள் நேரத்திற்கும் நன்றி !!

Friday, August 22, 2008

மனித நேயம் இருக்கிறதா? இல்லையா?

மனித நேயம்னா என்ன, ஒருதருகொருத்தர் அனுசரணையா இருக்கணும், நம்மளால முடிஞ்சவரைக்கும் அடுத்தவங்களுக்கு உதவி பண்ணலாம்.. சின்ன வயசுல School ல Miss "Moral of the story, should be kind to everyone, etc., etc.,"சொல்லறப்ப மண்டைய மண்டைய ஆட்டிட்டு...இப்ப எப்படி எல்லாருமே சுயநலமா இருகாங்க ...


அதுக்காக இருக்கற வேலைய விட்டுட்டு சமூக சேவை பண்றதுக்கு கூப்பிடல, இயந்திரம் மாதிரி ஓடிகிட்டிடுருக்க வாழ்கையில மனித நேயத்த ஒரு புள்ளியா சேர்த்துக்கலாமில்லையா?
என்னோட கேள்வி, நம்ம சமுதாயத்துல மனித நேயம் இருகிறதா இல்லையா ?

இது கொஞ்ச நாளாகவே என் மனசுல இருக்கிற உறுத்தலான கேள்வி .. நேற்று நடந்த ஒரு சம்பவம் இப்படி எழுதற வரைக்கும் கொண்டு வந்து விட்டிருக்கு.

பொதுவாகவே தாம்பரம் - வேளச்சேரி ரொம்பவே Busy ஆன route ..அதுவும் காலைல சொல்லவே தேவையில்ல அவ்வளவு பரபரப்பா எல்லாரும் வேகமா நடந்துட்டு இருப்பாங்க (ரயில்வே station க்கு உள்ள போறவங்களா இருக்கட்டும் இல்ல வெளிய வரவங்களா இருக்கட்டும் எல்லாருமே அப்படிதான்.. இவங்களோட நடந்து வரதுனால நமக்கு வேலை இருக்கோ இல்லையோ நாமளும் வேகமா நடந்து தான் ஆகணும்) ரயில்வே station e இப்படினா பஸ் ஸ்டாண்ட பத்தி சொல்லவே வேணாம்.


இந்த வேலைக்குபோகிற கூடத்தில 22-30 வயதுள்ளவங்க தான் அதிகம்.

நேத்து அதிசயமா தாம்பரம் - திநகர் (சொகுசு பேருந்து)பஸ் ரொம்பவே Free a வந்தது. Ladies seat இல் இரண்டே பேர் தான் என்னையும் சேர்த்து. Gents seats கொஞ்ச நேரத்துல full ஆகிடுச்சு. Bus Terminus ல இருந்து கிளம்பின அப்பறம் 2 Physically challenged persons ஏறினாங்க, (தமிழ்ல தனித்திறன் கொண்டவர்கள், இவர்கள் கண்கள் இருந்து கண்ணிலாதவர்கள் ) ஒருத்தர் யாரோட உதவியுமில்லாம என் பக்கத்துல வந்து உட்கார்ந்து கொண்டார், மற்றொருவர் Gents side seats ல போய் தொட்டு பார்த்து seats எல்லாம் full என்று அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.


பக்கத்துல conductor tickets கொடுத்துட்டு இருந்ததால அவர் ladies seat ல உட்கார வைப்பாரென்று பார்த்தேன், இல்ல வேற யாரவது எழுந்து அவருக்கு இடம் கொடுப்பாங்க என்று நினைத்தேன் அதுவுமில்ல, எல்லாரும் எப்படி இத பாத்துட்டு சும்மா இருகாங்க? இல்ல இருக்க முடியுது. இது ஒரு சின்ன உதவி தானே ஏன் அவருக்கு உதவி பண்ணனும்னு யாருக்கும் தோனல ? இத 2 நிமிடம் பார்த்த என் மனது இப்படி உறுத்துதே? அந்த பஸ் ல 15 பேராவது அவரை பார்திருபாங்க, அவங்க யாருக்கும் உறுத்தலையா?

நான் அவரை போய் கூட்டிட்டு வந்து என்னோட seat ல உட்காரவெச்சுட்டேன்.


அவங்ககிட்ட தன்னம்பிக்கை நம்ம எல்லாரையும் விட நிறையவே இருக்கு, நாம உதவி பன்னனும்னோ இல்ல எழுந்து இடம் கொடுக்கனும்னோ அவங்க எதிர்பார்கலை. சந்தோஷமா ஒரு மணி நேரம் கூட நின்னுகிட்டே travel பண்ணுவாங்க, ஆனா "அவங்களுக்கு இடம் தரலாமா வேணாமா, நாம இன்னும் ஒரு மணி நேரம் போகணுமே, கூட்டதில எப்படி நின்னுட்டு போறது, சரி வேற யாரவது எழுந்து இடம் கொடுப்பாங்க" என்று இந்த மன உருத்தலோடtravel பண்ணுகிற மனிதர்கள் தான் "ஊனமுற்றவர்கள்".
அவங்களை ஒப்பிட்டு பார்த்தா நமக்கு தான் ஆயிரம் குறைகள் இருக்கிறது. "முதியோர்/ஊனமுற்றோர்" இப்படி அவங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தருவதற்கு மனதிற்குள் இத்தனை போராட்டமா இல்லை அத்தனை சுயநலமா ?


நான் வருகிற மற்றொரு route லையும் இப்படி தான் நடக்குது. கணவன், மனைவி இரண்டு பேருமே தனித்திறன் கொண்டவர்கள் தான் (நான் முதலிலேயே கூறியது போல கண்கள் இருந்தும் கண்ணிலாதவர்கள்), Daily ஒரே bus ல தான் parrys வரைக்கும் போவாங்க. அவங்க ஏறினதும் 1st seat ல உட்கார்ந்திருகிரவங்களோட முகம் எப்படி மாறும் தெரியுமா? என்னமோ இவங்க சொத்தை அவங்களுக்கு தாரைவார்க்கிற மாதிரி, எழுந்து இடம் விடுவாங்க...இப்படி பட்டவங்க கூட பரவாயில்லை அவங்க ஏறுவதை பார்த்தே தூங்குவது போல நடிப்பாங்க, சீ எத்தனை கேவலம்.


சக மனிதனோட உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாத ஒருவன் அல்லது புரிந்து கொண்டு சுயநலத்திற்காக மட்டுமே வாழ்கிற ஒருவனை எப்படிங்க ஆறு அறிவுள்ள மனிதன்னு சொல்ல முடியும். விழுந்து விழுந்து சமூக சேவை பண்ண வேணாம் ஆறறிவுள்ள மனிதனா இருக்கலாமே!!

Tuesday, August 12, 2008

ம‌ன‌மே நீ ப‌ரிமாற‌த்தானோ! - மழைக்காலம் II



மழைகாலம் இடுகையை படிச்சுட்டு இத படிங்க... அப்பறம் புரியலைனா அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல..

படிச்சுட்டு நல்ல தலைப்பு தந்துட்டு போங்க..

எவ்வளவு நேரம் தான் இந்த விட்டத்தையே பார்த்துக்கொண்டிருப்பது, உன்னை காணாத ஒவ்வொரு நொடியும் யுகம் போலல்லவா உள்ளது. அந்த வலியை அனுபவித்துப்பார்த்தால் தானே புரிகிறது.

தோழி ஒருத்தி அவளுடைய காதலனை ஒரு நாள் காணாது புலம்பியபோது, "இதுல என்னடி இருக்கு நாளைக்கு தான் அவன பார்க்கப்போறியே ஏன் சும்மா புலம்பிகிட்டு இருக்க" என்று இந்த வாய் தானே கூறிற்று. அந்தந்த கஷ்டம் அவங்கவங்களுக்கு வந்தாதானே தெரியும்.

எக்காலத்து பெண்ணானால் என்ன தமிழ் பெண்ணுக்குரிய அச்சமும் நாணமும் இருக்கத்தானே செய்கிறது. நாளை அவனை காணப்போகிறேன் என நினைத்து சந்ஷோஷப்படுவதா, இல்லை இடையில் இன்னும் 24 மணி நேரம் உள்ளதே என்று வேதனைப்படுவதா. இந்த வானமும் எனக்காக கண்ணீர் சிந்துகிறதே.


பார்வையாலே பேசிக்கொண்டிருந்த பிரிவயே தாங்கிக்கொள்ள முடியவில்லயே..ஹ்ம்ம்

கைப்பேசி அழைத்து கவனத்தை திருப்பியது.

Sharon calling ....

சொல்லு Sharon ...

How u feel now, r u alright? ya, Im alright but need some rest, will get back to work 2mw. .

இன்னிக்கு காலைல உன் ஆளு வந்து நீ எங்க 3 days ஆ காணோம்னு கேட்டான்...

hey என்னடி சொல்ற நெஜமாவா...என்னால நம்பவே முடியல ...

ஆமா believe me... நான் சொன்னேன் ல ரெண்டு நாளா அவன் முகமே சரில்லை .. he was expecting u னு ... நீ தான் நம்பலை...

பின்ன என்னடி, அவன் மத்த பசங்கள மாதிரி இல்ல, பக்கத்துல எத்தனை பொண்ணுங்க இருந்தாலும் திரும்பிகூட பார்க்கமாட்டான். நாம தான் ஒரு மாசமா பார்த்துட்டு இருக்கோமே

சரி .. நீ என்ன சொன்ன ..

உனக்கு நாளைக்கு கல்யாணம் so லீவ் ல இருக்கனு பொய் சொன்னேன் ..

hey stupid gal, y did u lied him?..

பின்ன என்னடி எப்பவும் என்னப்பார்த்து ஏலனமாவே look விடறான், அதான் அப்படி சொன்னேன். அதோட உனக்கு கல்யாணம்னு சொன்னா அவன் reaction
எப்படி இருக்கும்னு test பண்றதுக்காகத்தான் அப்படி பொய் சொன்னேன். பாவம் நான் சொன்னதும் அவன் face ரொம்பவே dull ஆகிடுச்சு


அப்படியா !!

ம்ம் ஆமா ..

என்னடி இப்படி பண்ணிட்ட... ??

அதெல்லாம் ஒன்னும் ஆகாது, நீ இதையே நினைச்சுட்டு இருக்காத ... take rest நாளைக்கு பாக்கலாம்.

ஹ்ம்ம் சரி ..BYE

அவளுக்கு என்ன, நினக்காதே என்று கூறிவிடுவாள், தவிப்பது இங்கு நான் தானே.

இவளிடம் வந்து என்னைப்பற்றி கேட்டானா :) நம்பவே முடியவில்லையே. நிச்சயமாக அவனுடைய மனதில் எனக்கு இடம் இருக்கிறது. இது கனவொன்றும் இல்லையே??


நேற்று நடந்தது போல் இருக்கிறது. CAB க்காக நான் காத்துகொண்டிருக்கும்போது, எங்கிருந்தோ கைபேசியில் பேசிக்கொண்டே வந்தான் . அருகில் வருகிறான், இதுநாள் வரை தூரத்தில் பார்த்தவனை இன்றைக்கு தான் அருகில் பார்கிறேன். என்னால் பார்வையை திருப்ப முடியவில்லை. தீர்கமான நடை, எளிமையான உடை, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் எண்ணம். நான் பார்ப்பதைக்கூட அவன் கவனிக்க வில்லை, கைபேசியின் உரையாடலிலே அத்தனை கவனம் .

திடீரென அவன் கால் தடுக்கிற்று, தன்னிலை அறியாமல் "பாத்து" என்று கூறி விட்டேன். அப்படியா அவனுடன் ஒன்றி விட்டேன்??. நான் கூறியது அவன் காதுகளில் விழுந்திருக்கும், சட்டென்று என்னை பார்த்தான், என்ன முழுமையான பார்வை. அந்த பார்வைலிருந்து என் கண்களை என்னால் மீட்க முடியவில்லை.


போதும் பார்க்காதே ! என்று உள்மனது கூறியும் கண்கள் கேட்க மறுக்கின்றன. என்னுள் ஏதோ மாற்றம் நிகழ்வதை நான் உணர்ந்தேன். CAB horn அடித்ததால் வேறு வழியின்றி திரும்பினேன். கால்கள் CAB ஐ நோக்கி சென்றாலும் கண்களை அங்கேயே விட்டுச்செல்கின்ற உணர்வு. எனக்கும் அவனுக்கும் ஏதோ புனர்ஜென்மத்து உறவு இருப்பது போல தோன்றியது.



அன்றிலிருந்து தினமும் அவனை பார்ப்பது தானாக அமைந்த சந்தர்ப்பம் என்றல்லவா நினைத்தேன்.

நாளைக்கு அவனை பார்க்க முடியுமா தெரியவில்லயே இந்த Sharon வேறு பெரிய குண்டைத்தூக்கி போட்டிருக்கிறாள்.

மறுபடியும் அதே விட்டம் .....

Saturday, August 9, 2008

மழைக்காலம் ....


நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் என்னுடன் சேர்ந்து உன்னை பார்பதற்காக ஒற்றை காலில் நிற்கின்றன. என்னுடைய CAB 8 மணிக்குத்தான் என்றாலும், உன்னை பார்ப்பதற்கென்றே 7 மணிக்கே stopping க்கு வந்துவிடுகிறேனே. என்ன ஆயிற்று எனக்கு, 10 நாட்களுக்கு முன் நீ பார்த்த பார்வைக்கு இவ்வளவு சக்தியா. கல்லூரியில் நண்பர்கள்கூறிய போது கேலி செய்தேன், நூற்றுகணக்கில் கவிதைகளை படித்தும் நம்பவில்லை, முதல் பார்வை முதல் காதல் என்பதெல்லாம் திரைப்படத்தில் commercial க்காக மட்டுமே உபயோகிக்கிறார்கள் என்று நினைத்தேன். அத்தனையும் பொய்யடா அனுபவித்து பாரடா என்று மின்னல் பார்வையை வீசினாயே. ஆயிரம் megawatt இந்த சில 100 கிராமேயுள்ள சின்ன இருதயம் தாங்குமா என்று நினத்துப்பார்தாயா !!

கவி பாட எனக்கு தெரியாது. என்னை கவிஞனாக்கி விடுவாயோ? என்னுள் நிகழும் இந்த மாற்றம் என்னை எங்கு கொண்டு செல்லும் என்று தெரியவில்லை ஆனால் இதனை அனுபவிக்கத்தோன்றுகிறது.
பெண்ணுக்குள் இத்தனை நளினமா,
Oh Gaaadd!! gashhh!! என்னும் பெண்களிலிருந்து தனித்து நிற்கிறாயே, இந்த மென்பொருள் மாயை உன்னை பிடிக்கவில்லையா??

கண்டமேனிக்கு அலையாத வகுடெடுத்து வாரிய கூந்தல், மிக நேர்த்தியான உடை, மெல்லிய புன்னகை, Friday Casual wear அன்று கூட எந்த ஆர்ப்பாடமுமில்லாத ஜீன், குர்த்தா......... கட்டிப்போட்டுவிட்டாய் என்னை.

இத்தனை நாட்கள் எப்படி உன்னை பார்க்காமல் போனேன். ஆமாம் 2-3 வருடமாக இரவு பகல் என்று பாராமல் கணினி கணினி என்று அதன் பின்னால் தானே சுற்றிக்கொண்டிருந்தேன், அன்றைக்கு நான் கால் இடரும்போது "பாத்து" என்று நீ கூறாமல் போயிருந்தால் இதுநாள் வரை சத்தியமாக உன்னை பார்த்திருக்க மாட்டேன். பெரிய மாற்றத்தை என்னுள் ஏற்படுத்திவிட்டாய். என்ன வண்ணமயமான 10 நாட்கள். ஞாயிற்றுக்கிழமைக்காக காத்துக்கிடந்த காலங்கள் போக, உன்னை காணமுடயாத ஞாயிற்றுக்கிழமையை பிடிக்கவில்லை இப்பொழுது.



அதிகாலை வானம், மலைச்சாரல் , மண் வாசனை , சாலையோர பூக்கள் , பூக்களில் படிந்திருக்கும் பனித்துளி , இந்த காளானைக்கூட ரசிக்க வைத்து விட்டாயே :)

ஏன் நீ இன்னும் வரவில்லை , உனக்கு துணையாக ஆனால் உனக்கு நேர்மாறான இந்த ultra modern girl வந்துவிட்டாளே. இன்றைக்கு நீ வரமாட்டாயோ, உன்னை காணமல் எப்படி என் நாள் தொடங்கப்போகிறது.
அவளுடைய cab சென்று விட்டது. இந்த நாள் என்னைபொருத்தவரை கருப்பு நாள்.



நாளைக்கு தானே பார்க்க முடியும், கடிகார முள் நகருவேனா என்று அடம் பிடிக்கிறது.



..........




மூன்று நாட்களாகிவிட்டதே அவளுக்கு என்ன ஆயிற்று.. அவள் தோழியிடம் கேட்கலாமா, அவள் என்ன நினைப்பாள். என்ன நினைத்துக்கொண்டால் நமக்கென்ன கேட்டுவிடலாம்

அருகில் கூட செல்லவில்லை அனால் அவளின் செண்டின் நெடி ஆளையே தூக்கியது... English ல வேற பேசணும்..

Excuse me...


yeah !!


What happened to you friend? I am not able to see her for past 3 days


Do u know her?


...


She is on leave..she gonna get married man !! tomorrow is her wedding..

நெஞ்சு முட்டியது வார்த்தைகள் வரவில்லை...ஊமையாகி நின்றேன்..எனக்கு சொந்தாமான நினைவுகளில் அவளை வைத்திருந்ததால் அவள் எனக்கே சொந்தம் என்று நினைத்துவிட்டேன்

who r U?


.......


hallooo cud u hear me??

அவளிடமிருந்து விலகி நடந்தேன்.

Oh Gaadd....this guy must be mad !!

இயந்திர வாழ்கையிலிருந்து என்னை விலக்கி, பெண்மையையும் இயற்கையையும் ரசிக்க கற்றுகொடுத்தவள், என்னுள் வேதியல் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு , வேறொருவனுக்கு சொந்தமாகப்போகிறாள் கொடுத்துவைத்தவன்.

மெல்லிய காற்று என்னை வருடி ஆறுதல் தந்தது, இயற்கையை ரசிக்கத்தான் கற்றுக்கொண்டேனே :)



Thursday, August 7, 2008

நிவேதா

நிவேதா school விட்டு வந்ததும் அவள் வீட்டில் இருக்கும் நேரத்தை விட காதர் மாமா வீட்டில் இருக்கும் நேரம் தான் அதிகம். வீட்டுப்பாடம் எழுதுவதிலிருந்து பரீட்சைக்கு படிப்பது வரை அவர் வீட்டில் தான். மற்ற காலனி குழந்தைகளுக்கு காதரை பார்த்தாலே பயம் தொற்றிகொள்ளும். சவரம் செய்யாத தாடி, சுருக்கமான சட்டை, மிரட்சியான பார்வையுடன் இருப்பவனை பார்த்தால் எந்த குழந்தைக்கு தான் பயம் வராது. ஏன் அந்த காலனியில் உள்ள பெரியவர்களே காதரை விநோதமாகத்தான் பார்பார்கள். 24-25 வயதேயுள்ள இளைஞன் எங்கே போகிறான் என்ன செய்கிறான் என்று யாருக்குமே தெரியாது. அவன் தங்கிருக்கும் ஒற்றை அறையில் நிவேதா போகும்போது மட்டும் தான் விளக்கு கூட எரியும்.

நிவேதா மட்டும் எப்படி அவனுடன் பழகுகிறாள் என்று அனைவருமே ஆச்சரியபட்டுபோவார்கள். ஆரம்பத்தில் நிவேதாவின் அம்மா மிகவும் பயந்தது காதர் வீடிற்கு போகதே என்று கூறியதும் உண்டு, ஆனால் அவள் அப்பா தான் சின்ன குழந்தையை இந்த விஷயத்திற்கெல்லாம் கண்டிக்காதே அவள் இஷ்டம் போல விடு என்று கூறிவிட்டார்.

காதரை பொருத்தவரை தன் இருண்டு போன வாழ்வில் சிறு மெழ்குவர்த்தியாய் நிவேதா தோன்றினாள். அப்படி என்ன தான் பேசுவார்கள் இருவரும், நிவேதா தன் பள்ளிக்கூடம் மற்றும் வீட்டில் நிகழ்ந்த அத்தனை சம்பவங்களையும் ஒன்று விடாமல் காதரிடம் கூறி விடுவாள். மாமா இன்னைக்கு என்ன ஆச்சு தெரியுமா.... என்று அவள் ஆரம்பித்தால் 2 மணி நேரம் வரை பேசிக்கொண்டே தான் இருப்பாள். இந்த குழந்தை தன்னிடம் இப்படி ஒட்டிகொண்டதை நினைத்து காதரே ஆச்சரியப்பட்டதுண்டு.

இரண்டாம் வகுப்பு படிக்கும் நிவேதா படிப்பிலும் விளையாட்டிலும் வெகு சுட்டி. அவள் போட்டிகளில் வெற்றி பெற்றதை காதரிடம் கூறும்போது, தானே வெற்றிபெற்றதைப்போல் காதர் பெருமிதம் கொள்வான்.

அன்றும் அப்படித்தான் சுதந்திர தினத்தை யொட்டி நடந்த ஓவியப்போட்டியுலும் பேச்சுப்போடியிலும் தான் முதலிடம் பெற்றதை காதரிடம் கூற வேகமாக பள்ளியிலிருந்து ஓடி வந்தாள், வாசலில் தன் அம்மா நிற்பதையும் பொருட்படுத்தாது காதர் வீட்டை நோக்கி ஓடினாள், அந்த பிஞ்சு முகத்தில் பெருத்த ஏமாற்றம், காதர் வீடு பூட்டியிருந்தது. சோர்ந்து போய் தன் அம்மாவிடம் வந்தாள் "என்ன மா காதர் மாமா வீடு பூடியிருக்கு, நான் painting and speech competition லையும் first வந்ததை சொல்லலாம்னு பார்த்தா அவர் இல்ல, எங்க போயிருக்காருன்னு உனக்கு தெரியுமா?" , "தெரியல மா அவர் வந்ததும் சொல்லிக்கலாம் இப்ப வீட்டுக்கு போகலாம் வா" என்று தூக்கிக்கொண்டாள். தொடர்ந்து அவள் வெற்றி பெற்றதைப்பற்றி அம்மா கேட்ட கேள்விகளுக்கு சிரத்தயே இல்லாமல் பதில் கூறிக்கொண்டே போனாள்.

அரை மணி நேரத்திற்கு ஒருமுறை தன் வீட்டு வாசலிலிருந்து காதரின் பூட்டிய வீட்டை எட்டிபார்த்துக்கொண்டே இருந்தாள். 8 மணி போல காதர் வீடு திறந்திருந்ததை கண்டு சந்தோஷம் பொங்க தன் புத்தக பையை தூக்கிக்கொண்டு காதர் வீட்டிற்கு ஓடினாள்

"எங்க மாமா போய்டீங்க இவ்வளவு நேரமா உங்களுக்காக தான் காத்துட்டிருந்தேன், ஏன் மாமா சோகமா இருக்கீங்க என்ன அச்சு"



"ஒன்னும் இல்ல மா, நீ சொல்லு"

"மாமா Independence day celeberation காக நடந்த நான் painting and speech competition ல நான் தான் en class ல first"

"அப்படியா டா very good"

"ஆமா அப்பறம் இந்த test notes அ பாருங்க, I got above 90 in all 5 subjects, I think this time also I'll get first rank"

"எனக்கு தெரியுமே என் நிவி குட்டி படு smart girl னு"

" painting and speech competition prizes நாளைக்கு நடக்கபோற independence day celeberation ல தரப்போறாங்க, இந்த முறையாவது நான் prize வாங்கறத பார்க்க நீங்க வரணும் மாமா please மாட்டேனு சொல்லிடாதீங்க" ....."Y மாமா you are looking so dull யாரவது திட்டினாங்களா"

"ஆமா மா எனக்கு தந்த வேலைய நான் ஒழுங்கா செய்யல னு என் முதலாளி திட்டிடாரு"

"அச்சோ அப்படியா சரி நீங்க feel பண்ணாதீங்க மாமா நான் இருக்கேன் ல" .. "நான் speech competition la பேசினத உங்க கிட்ட பேசி காட்டறேன் நீங்க relax ஆகுங்க, சரியா ?" என்று கூறிவிட்டு நிவேதா பேசிக்கொண்டிருந்தாள்

காதரின் காதில் ஏதும் விழவில்லை, வேறு ஏதோ சிந்தனைகள் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. நிவேதா பேசிமுடித்ததை கூட அவன் கவனிக்க வில்லை. எப்படி பேசினேன் மாமா என்று அவள் கேட்டதிற்கு, "நல்ல பேசின மா" என்று மட்டும் முடித்துக்கொண்டான்.


நிவேதா தன் புத்தகபையில் test notes ஐ அடுக்கிகொண்டிருந்தாள். காதர் ஏதோ யோசனையிலிருந்து விடுபட்டவன் போல, "நிவி நாளைக்கு நானும் உன்னோட school க்கு வரேன் மா"

"ஹையா !! நிஜமாகவா மாமா"

"ம் ஆமா bag a இங்கேயே வெச்சுட்டுப்போ நான் notes அ அடுக்கி வெச்சுடறேன், time பாரு late ஆகிடுச்சு நீ போய் சாப்பிட்டு தூங்கு"

"Jolly என் friends கிட்ட உங்கள introduce பண்ணி வைக்கறேன் , நாளைக்கு காலைல பாக்கலாம், Good Night மாமா"

மறுநாள் காதர் கூறியது போலவே நிவேதாவுடன் பள்ளிக்கூடத்திற்கு சென்றான். அன்று நிவேதா வானத்தில் பறந்து கொண்டிருந்தாள், சரியாக 9 மணிக்கு விழா ஆரம்பமானது. அந்த வட்டாரத்திலே இது பெரி பள்ளி என்பதால் அந்த ஊர் MLA சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். பரிசு வாங்குபவர்களுக்காக ஒதுக்க பட்டிருந்த இடத்தில் நிவேதா அமர்ந்திருந்தாள். அங்கிருந்து காதரை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு காதரை அங்கு காணவிலலை, வேகமாக வீடிற்கு வநதான்.

அவனுடைய கைப்பேசி அழைத்தது, " என்ன காதர் வேலைய முடிச்சுட்டியா?"

"ம்"
"உனக்கு எப்படி டா school bag la BOMB வைக்கற idea வந்துது"
"......"
"எப்படியோ வேலைய சரியா செய்துட்ட , இனிமேல் நீ அங்கே இருந்தால் ஆபத்து, நம்ம கார் அனுப்பறேன் உடனடியா இங்க வந்திடு"

"சரி" அவன் இணைப்பை துண்டித்ததும் பெரிய வெடி சத்தம் கேட்டது..

நிவேதாவின் சத்தம் ஓய்ந்திருக்கும்... முதன் முறையாக தனக்கு கண்ணீர் வருவதை உணர்ந்து அதை துடைத்துக்கொண்டு புறப்பட்டான்..

"நீங்க feel பண்ணாதீங்க மாமா நான் இருக்கேன் ல" என்று நிவேதா கூறியதை தவறாய் அர்த்தம் பண்ணிக்கொண்டானே !!!

ADVANCE INDEPENDENCE DAY WISHES

Tuesday, August 5, 2008

ரிலாக்ஸ் ப்ளீஸ் ....

பன்றியை பன்னி னு சொல்லும்போது ஏன்
நின்றியை நன்னி னு சொல்லகூடாது......

(ஹி ஹி ....:))

Monday, August 4, 2008

Headsets - Mobiles



Bus, Train எங்கே பார்த்தாலும் 10 க்கு 6 பேர் தங்களது Ipod, Mp3 players, Musicplayer Mobile, FM Mobile ஏதாவது ஒன்றில் காதில் Headset ஐ மாட்டிக்கொண்டு இருப்பார்கள். அதிலும் இப்பொழுது ஆண்களை விட பெண்களே அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

Bus, Train, Bike, car, auto, share-auto, ... என்று பாரபட்சமில்லாமல் எதில் சென்றாலும் காதில் headphone ஐ மாட்டிக்கொண்டு அலையும் மக்களை பார்க்கலாம். (நடக்கும் போது கூட விட்டுவைக்க மாட்டாங்க .......யாருப்பா இத கண்டுபிடிச்சது)

நான் தான் train ல பார்க்கிறேனே..... இந்த கையிலHandbag அந்த கையில Lunchbag என்று தூக்கிகொண்டு Train வந்ததும் அவசரம் அவசரமாக ஓடி வந்து ஏறுவார்கள் அரக்கபரக்க ஜன்னலோர seat இருக்கிறதா என்று பார்த்து விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அமருவார்கள் .... அந்த அவசரம் கொஞ்சம் கூட குறையாமல் handbag ஐ திறந்து Headset ஐ எடுத்து Mobile இல் connect பண்ணி காதில் மாட்டிகொள்வர்.......(ஒரு நிமிஷத்த கூட waste பண்ண மாட்டாங்களாம்)..
அதான் இருக்கவே இருக்கே Suryan FM ல ஆரமிச்சு ஏதேதோ FM னு 10 stations a tune பண்ணி ஒரு பாட்டையும் உருப்படியா கேட்கிறது கிடையாது...


கொஞ்ச காலத்துக்கு முன்னாடி (அட headset நம்ம மக்களோட ஒன்றி போறதுக்கு முன்னாடிங்க.....) train ல யாரவது ஒருத்தவங்க paper வாங்கிட்டு வருவாங்க ... அதை அவங்க படிக்கறாங்களோ இல்லையோ அந்த compartment ல பாதி பேர் கடன் கேட்டு தங்களோட அறிவை வளர்த்துக்குவாங்க ... இப்ப அந்த scene லாம் romba romba rare ங்க ...

இப்படி தான் அன்னைக்கு ஒரு நாள் நான் AJAX (இது stopping பேருங்க) போற Shareauto ல உட்காந்திருந்தேன், ஒரு பொண்ணு காதுல headset ஓட வேகமா வந்தா auto-Driver கிட்ட ஏதோ கேட்டுவிட்டு ஏறி என்னருகே அமர்ந்துகொண்டாள்...நான் முன்பே கூறியது போல இருக்கற எல்லா station ஐயும் tune பண்ணி tune பண்ணி பாட்டு கேட்டுக்கொண்டே வந்தாள்...30 நிமிடம் கடந்திருக்கும்.........பீச் ரோட்டில் ஆட்டோ வேகமாக சென்று கொண்டிருந்தது ...திடீரென அந்த பெண் ரொம்பவும் பரப்பானாள் சுற்றி சுற்றி பார்த்தாள்................"Driver இது AGASTHIYA போற auto இல்லையா" (அட இதுவும் stopping பேருதாங்க ...North Chennai ல இருக்கறவங்களுக்கு பரீட்சையமான stoppings......தெரியாதவர்களுக்கு AJAX , திருவொற்றியூரில் உள்ளது .. AGASTHIYA புது வண்ணாரபேட்டையில் உள்ளது)



கதை கெட்டுது போ ... நான் AGATHIYA போகுமா னு தான கேட்டேன் என்று அந்த பெண் கேட்க ... நான் AJAX போகுதுனுதானமா சொன்னேன், நீ தான் மா தப்பா கேட்டுட்டு ஏறிட்ட என்று Driver கூற (Unmailaye idhuku naan saatchinga ....) asusual சண்டை கொஞ்சம் பெருசாகிவிட்டது..கடைசியில் Driver, அட என்னமா நீ ஆட்டோவ விட்டு கீழ எறங்குமா பெருசா காதுல என்னத்தையோ (Headset) மாடிக்கவேண்டியது, எதையும் காதுல வாங்காம ஏறிட்டு எங்க உயிரை வாங்கவேண்டியது, எரங்கித்தோல மா இருக்கவங்களை வீட்டுக்கு கொண்டு சேக்கவேனமா...இப்பொழுது டிரைவரோடு 3-4 பயணிகளும் சேர்ந்து
கொண்டு அந்த பெண்ணை திட்ட, வேறு வழி இல்லாமல் முனகிக்கொண்டே இறங்கினாள்...........பிறகென்ன அடுத்த 10-15 நிமிடங்களுக்கு ஆளாளுக்கு அவளையே திட்டி கொண்டு வந்தார்கள்.....இதெல்லாம் தேவை தானா !!!!!!

TV, CD, DVD னு வந்த பிறகு ... வானொலியை யாரும் சீண்டவே இல்லை..
வானொலியில் வரும் பல நல்ல நிகழ்சிகளையும் யாரும் பொருட்படுத்தவில்லை..அதன் இருப்பிடம் மங்கிக்கொண்டே வந்தது.... FM ரேடியோ facility உடன் Mobiles வந்த பிறகு மீண்டும் வானொலி புத்துயிர் பெற்றிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதே...ஆனா நம்ம ஆளுங்க இருக்காங்களே எதுவாக இருந்தாலும் கொஞ்சம் Over Dose ஆ தான் எடுத்துப்பாங்க....

நீ ipod ல பாட்டு கேட்டா, நான் FM பாட்டு கேட்டுட்டு போறேன்....நீ மட்டும் தான் skip பண்ணுவியா நானும்அடுத்த station tune பண்ணுவேன்....இதுல Musicplayer oda Mobile வெச்சுருக்கவனெல்லாம் Basic Model வெச்சுருக்கவன பாது ஒரு அலட்சியமான look விடுவான் பாருங்க (நேர்ல chance கிடைச்சா பாருங்க அப்பதான் அந்த feel புரியும் உங்களுக்கு)...
இவ்வளவு சிக்கலுக்கு மேல தினமும் 2 மணி நேரத்திற்கு மேல் headset இல் பாட்டு கேட்டாலோ இல்லை mobile இல் கடலை வறுத்து கொண்டிருந்தாலோ செவிப்பறை (அதாங்க EARDRUM) பாதிப்படையுமாம். 30 வயதுக்கு மேல் காது கேட்கும் திறம் குறைந்துகொண்டே வருமாம்....
ஹ்ம்ம் இதெல்லாம் தெரிந்தும் daily நான்கு மணி நேரம் headset a மாட்டிகிட்டு தாங்க அலையறேன்...புதுப்பாட்டு பழையபாட்டுனு எதையும் விட்டு வைக்கறதில்ல.....Mobile ல load பண்ணின songs கேட்டு போரடிச்சுடுச்சனுனா FM பக்கம் போய் அங்கேயும் எந்த station ஐயும் விட்டு வைக்கறதில்ல..ஆனா இன்னும் எந்த auto-driver கிட்டயும் திட்டு வாங்கலைங்க....
யவரேனும் இந்த பாகங்களை அறிந்து இந்த பழக்கத்திலிருந்து விடுபட்டிருந்தால் அந்த முறையை சற்று விளக்கவும் .....

Friday, August 1, 2008

Vapurdha means....



வபூர்தா என்றால் என்ன ஏதாவது specific meaning இருக்கிறதா என்று ஒரே Fans தொல்லை (நம்பவில்லையா சரி விடுங்க, உண்மைய என்றைக்கு தான் இந்த நாடு நம்பிஇருக்கு.....)



வபூர்தா என்றால்"Granter of Beautifull appearence"... துர்க்கை அம்மனின் 108 பெயர்களில் ஒன்று ... இதில் இருந்து என் உண்மையான பெயர் துர்கா என்று கண்டுபிடித்துவிட்டீர்களா ...

சரி நாம கொஞ்சம் வித்யாசமா வலைபதிவுக்கு பெயர் வைக்கலாமே னு try பண்ணேன்....



ஒரு கூட்டம் நான் என்ன சொன்னாலும் நம்பாது...



அவங்களுக்காக இந்த சுட்டி ... http://www.123durgapuja.com/108-durga-names/