மனித நேயம்னா என்ன, ஒருதருகொருத்தர் அனுசரணையா இருக்கணும், நம்மளால முடிஞ்சவரைக்கும் அடுத்தவங்களுக்கு உதவி பண்ணலாம்.. சின்ன வயசுல School ல Miss "Moral of the story, should be kind to everyone, etc., etc.,"சொல்லறப்ப மண்டைய மண்டைய ஆட்டிட்டு...இப்ப எப்படி எல்லாருமே சுயநலமா இருகாங்க ...
அதுக்காக இருக்கற வேலைய விட்டுட்டு சமூக சேவை பண்றதுக்கு கூப்பிடல, இயந்திரம் மாதிரி ஓடிகிட்டிடுருக்க வாழ்கையில மனித நேயத்த ஒரு புள்ளியா சேர்த்துக்கலாமில்லையா?
என்னோட கேள்வி, நம்ம சமுதாயத்துல மனித நேயம் இருகிறதா இல்லையா ?
இது கொஞ்ச நாளாகவே என் மனசுல இருக்கிற உறுத்தலான கேள்வி .. நேற்று நடந்த ஒரு சம்பவம் இப்படி எழுதற வரைக்கும் கொண்டு வந்து விட்டிருக்கு.
பொதுவாகவே தாம்பரம் - வேளச்சேரி ரொம்பவே Busy ஆன route ..அதுவும் காலைல சொல்லவே தேவையில்ல அவ்வளவு பரபரப்பா எல்லாரும் வேகமா நடந்துட்டு இருப்பாங்க (ரயில்வே station க்கு உள்ள போறவங்களா இருக்கட்டும் இல்ல வெளிய வரவங்களா இருக்கட்டும் எல்லாருமே அப்படிதான்.. இவங்களோட நடந்து வரதுனால நமக்கு வேலை இருக்கோ இல்லையோ நாமளும் வேகமா நடந்து தான் ஆகணும்) ரயில்வே station e இப்படினா பஸ் ஸ்டாண்ட பத்தி சொல்லவே வேணாம்.
இந்த வேலைக்குபோகிற கூடத்தில 22-30 வயதுள்ளவங்க தான் அதிகம்.
நேத்து அதிசயமா தாம்பரம் - திநகர் (சொகுசு பேருந்து)பஸ் ரொம்பவே Free a வந்தது. Ladies seat இல் இரண்டே பேர் தான் என்னையும் சேர்த்து. Gents seats கொஞ்ச நேரத்துல full ஆகிடுச்சு. Bus Terminus ல இருந்து கிளம்பின அப்பறம் 2 Physically challenged persons ஏறினாங்க, (தமிழ்ல தனித்திறன் கொண்டவர்கள், இவர்கள் கண்கள் இருந்து கண்ணிலாதவர்கள் ) ஒருத்தர் யாரோட உதவியுமில்லாம என் பக்கத்துல வந்து உட்கார்ந்து கொண்டார், மற்றொருவர் Gents side seats ல போய் தொட்டு பார்த்து seats எல்லாம் full என்று அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.
பக்கத்துல conductor tickets கொடுத்துட்டு இருந்ததால அவர் ladies seat ல உட்கார வைப்பாரென்று பார்த்தேன், இல்ல வேற யாரவது எழுந்து அவருக்கு இடம் கொடுப்பாங்க என்று நினைத்தேன் அதுவுமில்ல, எல்லாரும் எப்படி இத பாத்துட்டு சும்மா இருகாங்க? இல்ல இருக்க முடியுது. இது ஒரு சின்ன உதவி தானே ஏன் அவருக்கு உதவி பண்ணனும்னு யாருக்கும் தோனல ? இத 2 நிமிடம் பார்த்த என் மனது இப்படி உறுத்துதே? அந்த பஸ் ல 15 பேராவது அவரை பார்திருபாங்க, அவங்க யாருக்கும் உறுத்தலையா?
நான் அவரை போய் கூட்டிட்டு வந்து என்னோட seat ல உட்காரவெச்சுட்டேன்.
அவங்ககிட்ட தன்னம்பிக்கை நம்ம எல்லாரையும் விட நிறையவே இருக்கு, நாம உதவி பன்னனும்னோ இல்ல எழுந்து இடம் கொடுக்கனும்னோ அவங்க எதிர்பார்கலை. சந்தோஷமா ஒரு மணி நேரம் கூட நின்னுகிட்டே travel பண்ணுவாங்க, ஆனா "அவங்களுக்கு இடம் தரலாமா வேணாமா, நாம இன்னும் ஒரு மணி நேரம் போகணுமே, கூட்டதில எப்படி நின்னுட்டு போறது, சரி வேற யாரவது எழுந்து இடம் கொடுப்பாங்க" என்று இந்த மன உருத்தலோடtravel பண்ணுகிற மனிதர்கள் தான் "ஊனமுற்றவர்கள்".
அவங்களை ஒப்பிட்டு பார்த்தா நமக்கு தான் ஆயிரம் குறைகள் இருக்கிறது. "முதியோர்/ஊனமுற்றோர்" இப்படி அவங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தருவதற்கு மனதிற்குள் இத்தனை போராட்டமா இல்லை அத்தனை சுயநலமா ?
நான் வருகிற மற்றொரு route லையும் இப்படி தான் நடக்குது. கணவன், மனைவி இரண்டு பேருமே தனித்திறன் கொண்டவர்கள் தான் (நான் முதலிலேயே கூறியது போல கண்கள் இருந்தும் கண்ணிலாதவர்கள்), Daily ஒரே bus ல தான் parrys வரைக்கும் போவாங்க. அவங்க ஏறினதும் 1st seat ல உட்கார்ந்திருகிரவங்களோட முகம் எப்படி மாறும் தெரியுமா? என்னமோ இவங்க சொத்தை அவங்களுக்கு தாரைவார்க்கிற மாதிரி, எழுந்து இடம் விடுவாங்க...இப்படி பட்டவங்க கூட பரவாயில்லை அவங்க ஏறுவதை பார்த்தே தூங்குவது போல நடிப்பாங்க, சீ எத்தனை கேவலம்.
சக மனிதனோட உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாத ஒருவன் அல்லது புரிந்து கொண்டு சுயநலத்திற்காக மட்டுமே வாழ்கிற ஒருவனை எப்படிங்க ஆறு அறிவுள்ள மனிதன்னு சொல்ல முடியும். விழுந்து விழுந்து சமூக சேவை பண்ண வேணாம் ஆறறிவுள்ள மனிதனா இருக்கலாமே!!
7 years ago


