மொக்கை பதிவு போடலாமின்னு தான் வந்தேன் .. அப்பறம் பாருங்க திடீர் ஞானோதயம் வந்து சின்ன கதை எழுதிட்டேன் :) ஹி ஹி
-------------------------------------------------------------------------------------------------
"காமாட்சி !!
காமாட்சி !! "
வீட்டினுள் நுழையும்போதே மனைவியின் பெயரை கூப்பிட்டுகொண்டே வருவது தான் சோமசேகரின் வழக்கம்.
வாங்கி வந்த பூமாலையை சுவாமி படங்களுக்கு போட்டுக்கொண்டே பேசலானார்.
"இந்த பூக்களை வாங்கறதுக்கு காசு கொடுத்து மாளலை, என்னமா விலைவாசி ஏறி போயிருக்கு...... அட நம்ம ராமசாமியை பார்த்தேன் மா... அவனும் காய்கறி வாங்க கடைக்கு வந்திருந்தான்.. அவன் பெரிய பையன் அடுத்த மாதம் US போறானாம்.. அங்க நடைமுரைஎல்லாம் என்ன ஏதுன்னு கேட்டுட்டு இருந்தான்.... நான் நம்ம சீனு போன் நம்பரை தந்துட்டு வந்தேன்.... இரண்டு வருஷ அக்ரீமென்ட் போலிருக்கு... என்ன அக்ரீமென்ட் போட்டு என்ன பயன், அங்க போகிற பசங்க அங்கேயே இருந்துடனும்ன்னு தான் விரும்புறாங்க. இது இந்த மடபயலுக்கு புரியல ... பெருமையா பேசிட்டிருக்கான்"
"அவன சொல்லி என்ன தப்பு நானும் ஆறு வருஷத்துக்கு முன்னாடி இப்படித்தானே இருந்தேன்"
தொலைபேசி அழைத்தது .....
"நீ இரு காமு நான் எடுக்கறேன்"
"ஹலோ"
"அப்பா நான் தான் .. நல்லா இருக்கீங்களா??"
"சீனுவா... நானும் அம்மாவும் நல்லா இருக்கோம் .. நீங்க எல்லாரும் சவுக்கியமா இருக்கீங்களா"
"நல்லா இருக்கோம்பா, உங்க உடம்பு எப்படி இருக்கு .. மாத்திரையெல்லாம்
சாப்பிடுறீங்களா ?"
"அட அத விடு... என் பேரன் இருக்கானா அவன பேச சொல்லுப்பா"
"அவன் தூங்கிட்டான், இப்ப மணி 11:30 ... அடுத்த தடவ கண்டிப்பா பேசவைக்கறேனப்பா"
"என்ன டா நீ வாரத்துக்கு ஒரு முறை தான் பேசற அப்பவாது எல்லாரும் பேலாமில்லையா?? நீ இத்தன நேரமா ஏன் தூங்காம இருக்க ??"
"வேலையெல்லாம் இப்ப தான் முடிஞ்சுது... பத்மா ஆபீஸ் வேலையா காலிபோர்னியா போயிருக்கா , இரண்டு நாள்ல வந்துடுவா வந்ததும் பேச சொல்றேன்"
"சரிப்பா ....."
"நீண்ட உடம்பை பாத்துக்கோங்கப்பா.. நான் அப்பறம் பேசறேன்"
"சரிப்பா .. நீயும் பாத்துக்க"
வருத்தத்துடன் ரிசீவரை வைத்து விட்டு ஈசி சேரில் சாய்ந்தார்..
"பாத்தியா காமு அவ்வளவு தான் இரத்த பந்தம்... நீ இறந்து போனபோதே அவன் கடமையை செய்யறதுக்கு வரமுடியாம நாலு நாள் கழிச்சு தான் வந்தான்... எனக்கு மட்டும் எல்லாம் பண்ணிடபோரானா என்ன... எனகென்ன விதியோ !!"
"என் நண்பன் அய்யாசாமி இருக்கற முதியோர் இல்லத்துக்கு போயிடலாமா காமு ??"
போட்டோ மேல் போட்டிருந்த மலர்மாலை சோமசேகரின் காலருகில் விழுந்தது.
கண்ணாடியை போட்டுக்கொண்டு அய்யாசாமியின் மொபைல் நம்பரை தேடினார்.
6 years ago
16 comments:
பொதுவா, "போனா வந்தா உறவு!
கொண்டா கொடுத்தா உறவு"ன்னு சொல்லுவாங்க!
ஆனா பெத்தவங்களுக்கும் மக்களுக்குமுள்ள
உறவுகளும் அப்பிடி மறந்து போகும் உறவுதானோ?
அன்புடன்,
தங்கமணி.
பின்றீங்க துர்கா.. கதை குட்டியா, நச்சுன்னு இருக்கு..
மிக அருமை.. மிக மிக அருமை.
தலைப்பும் நல்லா இருக்கு..
இந்த popup commnet box வேண்டாமே.. fullpage comment box நல்லா இருக்கும்..
//Thangamani said...
பொதுவா, "போனா வந்தா உறவு!
கொண்டா கொடுத்தா உறவு"ன்னு சொல்லுவாங்க!
ஆனா பெத்தவங்களுக்கும் மக்களுக்குமுள்ள
உறவுகளும் அப்பிடி மறந்து போகும் உறவுதானோ?//
அப்படி தான் போலிருக்கு !!
//அன்புடன்,
தங்கமணி.//
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி !!
// Saravana Kumar MSK said...
பின்றீங்க துர்கா.. கதை குட்டியா, நச்சுன்னு இருக்கு..//
நிஜமாவா ??
//Saravana Kumar MSK said...
மிக அருமை.. மிக மிக அருமை.
தலைப்பும் நல்லா இருக்கு..//
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சரவணன்!!
மகிழ்ச்சியும் கூட :)
// Saravana Kumar MSK said...
இந்த popup commnet box வேண்டாமே.. fullpage comment box நல்லா இருக்கும்..//
மாத்தியாச்சு :)
// Vapurdha said...
நிஜமாவா ??//
நிஜமாவேதான்.. :) செம.. செம.. :))
Chanceless awesome story... kalakureenga ponga... keep going...
கதை ரொம்ப நல்லா இருக்கு....Very touching in the end....
ஆனால் எனக்கு அதுல ஒரே ஒரு சந்தேகம்.... "... நானும் அம்மாவும் நல்லா இருக்கோம் .. " என்று சோமசேகரன் சொல்லுறார்....
இறந்து போன மனைவி கிட்ட பேசுறது பரவாயில்ல.... போன் வரும்போது நான் எடுக்குறேன்-ன்னு அவர் சொல்லறது கூட ஏத்துக்கலாம்.... ஆனா மகன் கிட்ட அப்படி சொல்லறது என்னால ஏத்துக்க முடியல.... :).... நீங்க அப்படி சொன்னதுல எதாவுது significance இருக்கா.... Sorry எனக்கு அது மட்டும் புரியல.... :)
ஆனாலும் கதை சூப்பர்....Light twist towards the end was very good....
ஆளையும் காணோம்.. பதிவுகளையும் காணோம்..
ஆளையே காணோம்.. :)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி..
Its fine.
கதை சூப்பருங்க..!
Onsite போகலாமான்னு குட்டியா ஒரு யோசனை இருந்துச்சு ... இபோ போய்டுச்சு ..!
{ அப்பாவுக்கு கால் பண்ண போறேன் }
Post a Comment