Tuesday, September 30, 2008

பத்து வயதில் ....

"முரளி, இனிமேல் நீ School க்கு வரவேமாட்டியா டா"

"வரமாட்டேன் டா"...."எனக்கு எங்கேயும் வேலை கிடைக்கலையே, அதுவே கஷ்டமா இருக்கு"

"நீ வேலைக்கெல்லாம் போக வேணாம் டா, school க்கே வந்து சேர்ந்துடு டா"

"வீட்டுல காசே இல்லையே டா விமல் , எங்க அப்பா இருந்த வரைக்கும் நானும் என் தங்கச்சி பாப்பாவும் நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்னு சொல்லுவாரு, அப்பா செத்துபோனப்ப, "அப்பா செத்து போய்ட்டாரு முரளி, அவரு சம்பாதிச்சதால, நாம சாப்பிட்டுகிட்டு ஒண்டு குடித்தனம் பண்ணினோம் ..இனிமேல் காசு கொண்டுவர அப்பா இல்லையே டா...." அம்மா என்ன கட்டிபிடிச்சு அழுதத நீயே பார்த்தியே டா"

"உங்க அம்மா தான் வீட்டு வேலைக்கு போறாங்களே டா, நீயும் தங்கச்சி பாப்பாவும் school க்கு வந்துடுங்க"

"அம்மாவுக்கு வர சம்பளம் சாப்பாட்டுக்கு தான்டா போதுமானதா இருக்கும் ..வீட்டு வாடகையெல்லாம் அம்மா கடன் சொல்லிருக்கு....."

"ஹ்ம்ம் தங்கச்சி என்னடா பண்ணுது"

"நம்ம maths miss வீட்டுல வேலை பார்க்குது "

"அதுக்கு வேலையே தெரியாதேடா"

"ஆமாடா பாவம், miss school க்கு போனதும் அவங்க குழந்தைய பார்த்துக்கிற வேலை "...."நான் தான் டா சும்மா இருக்கேன்....அப்பா லாரி ஓட்டின கம்பெனியில இரண்டு நாள் தான் டா வேலைக்கு போனேன் முதலாளி என்ன நல்லா நடத்தினாரு ..என்ன ஆச்சுன்னே தெரியல திடீர்னு கூப்பிட்டு நாளைல இருந்து வேலைக்கு வராதப்பான்னு சொல்லிட்டார்"

"..."

"நாளைக்கு அம்மா, அண்ணாச்சி மளிகை கடையில சேர்த்து விடறேன்னு சொல்லிச்சு டா"

"எந்த கடைடா?"

"முருகர் கோவிலுக்கு பக்கத்தில இருக்கே அந்த கடை"

"சரிடா அடுத்த வாரம் 1st term test இருக்கு, prepare பண்ணனும் நான் வீட்டுக்கு போறேன்"

"உன்கூட போட்டி போட நான்தான் இல்லையே அப்பறம் என்னடா நீ தான் 1st rank எடுப்ப :) போய் நல்லா படி"

நண்பனிடமிருந்து சோகமாய் விடைபெற்று வீட்டிற்கு சென்றான்.


விமலின் அப்பா அப்பொழுது தான் Duty முடிந்து வந்திருந்தார். மெதுவாய் அவர் அருகில் சென்றான்,

"என்ன விமல், முரளியை பார்த்தியா இன்னைக்கு"

"ஆமாப்பா"

"சொல்லு, எதையோ சொல்ல நினைக்கிற மாதிரி இருக்கு"

"அந்த Transport owner கிட்ட சொன்ன மாதிரி, முருகன் கோவில் பக்கத்தில இருக்கிற annachi கடயிலையும்முரளியை வேலைக்கு வைக்க வேணாமின்னு சொல்லணும்பா"

"முரளி அங்க வேலைக்கு போகபோறானா?"

"ஆமா நாளைக்கு அவன் அம்மா அந்த கடையில சேர்க்கபோறாங்க"

"இங்க பாரு விமல், நீ கஷ்டபடுறது எனக்கு புரியுது. அதுக்காக அவன் எங்கேயெல்லாம் வேலைக்கு போகிறானோ அங்க போய் என்னோட sub-inspector அதிகாரத்தை வைச்சு பேச முடியாது. இந்த ஊரில எத்தனையோ factory, company னு சின்ன பசங்கள வேலைக்கு வெச்சிருக்காங்க. நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் இதை ஒழிக்க முடியல. சின்ன குழந்தைங்க அவங்க வீட்டு கஷ்டத்திற்காக தான் வேலைக்கு போறாங்களே தவிர, அவங்களா விருப்பப்பட்டு போகல. ஏன் உன் நண்பன் முரளி கூட அதுக்காக தான போறான்..."சரி நான் இதுக்கு ஒரு வழி சொல்றேன் கேட்கறியா?"

"சொல்லுங்கப்பா"

"எனக்கு தெரிஞ்ச அமைப்பின் மூலமா முரளி அப்பறம் அவன் தங்கையோட படிப்பு செலவுக்கு ஏற்பாடு பண்ணிடலாம். அது தவிர இருக்கிற செலவுகள நான் பார்த்துகிறேன்"..."உன் முரளி உன்கூட school க்கு வருவான், அப்பறம் நீங்க ரெண்டு பேரும் போட்டி போட்டு படிக்கலாம்"

"நிஜமாவா சொல்றீங்கப்பா :)"

"ஆமா விமல், இது நானும் உன் அம்மாவும் சேர்ந்து எடுத்த முடிவு தான், school விட்டு வந்ததும் உன்கிட்ட சொல்லனும்னு இருந்தோம், முரளியோட அம்மாவை நாளைக்கு கூட்டிட்டு வா இதை பத்தி சொல்லிடலாம்"

"இப்பவே கூட்டிட்டு வரேன், சொல்லிடுங்க" என்று நிற்காமல் முரளியின் வீட்டிற்கு ஓடினான் விமல்.

சமுதாய சீர்கேடுகளை ஒவ்வொரு தனி மனித முயற்சியின் மூலம் திறுத்தலாம் என்கிற சிறு நம்பிக்கை தான் இச்சிறுகதை

Friday, September 12, 2008

பாட்டி சொன்ன கதை..

ஒரு ஊரில ஒரு ராஜா இருந்தாராம் (எப்படி நம்ம startup) . அவருக்கு நிறைய நாள் குழந்தை செல்வம் இல்லாததால மனமுடைந்து கஷ்டப்பட்டாராம். ஒரு நாள் அவர் காட்டிற்கு செல்லும்போது ஒரு முயல் அடிபட்டு கிடந்துதாம், அதை பார்த்த ராஜாஅந்த முயலுக்கு மூலிகை இலைய அரைச்சு ஊத்தி குணப்படுத்தினாராம். திடீர்னு அந்த முயல் அழகிய தேவதையா உருவெடுத்ததாம். அதிசயப்பட்ட ராஜா, அந்த தேவதை சாப விமோசனம் அடைந்த கதைய கேட்டு தெரிஞ்சுகிட்டாரம். Asusual அந்த தேவதை என்ன வரம் வேண்டும் என கேட்க. நம்ம ராஜா என்ன கேட்டிருப்பார், வேறென்ன குழந்தயைதான். அந்த தேவதையும் "உனக்கு அழகிய பெண் குழந்தை பிறக்கும்" என வரம் தந்து மறைந்ததாம் .

தேவதை வரத்தின் படியே ராஜாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்ததாம். நிறைய நாள் கழித்து பிறந்ததினாலும், அவ்வளவு பெரிய ராஜாங்கத்திற்கு ஒற்றை வாரிசு என்பதினாலும், அனைவராலும் சீரும் சிறப்புமாக வளர்க்கபெற்றாள்

தன் மகள் திருமண வயதை அடைந்துவிட்டாள் , தகுந்த இடத்தில் வரன் பார்க்குமாறு ராணி ராஜாவிடம் கூறினாளாம். தனக்கு இருப்பது ஒரே மகள், தனக்குப்பின் தன் நாட்டை ஆள்கிற பொறுப்பும் தன் மருமகப்பிள்ளையையே சேரும் என்பதால், சுற்று வட்டாரத்தையே புரட்டிப்போட்டு மாப்பிள்ளையை தேடினாராம் ராஜா.

தான் தேர்ந்தெடுத்த இளவரசர்கள், ராஜாக்கள் அனைவரையும் அழைத்து பெரிய அளவில் சுயம்வரம் நடத்தினாராம். தன் மகளிடம் மாலையை கொடுத்து சுயம்வர திடலுக்கு அழைத்து வந்தாராம். இளவரசி மாலையுடன் நடந்து வந்த அழகைப்பார்த்து அனைவரும் மயங்கிப்போனார்களாம்.

இளவரசி தனக்கே மாலைடவேண்டுமென ஒவருவரும் மனதிற்குள்ளே பிராத்தனையே நடத்தினராம். இளவரசி விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களுடன் தேர் போல மெல்ல நடந்து ஒவ்வரு அரசனையும், இளவரசனையும் பார்வையிட்டாளாம். திடலில் கூடியிருந்த ஊர் மக்கள் அனைவரும் தங்களுக்கு வரப்போகும் புது அரசன் யார் என மிகுந்த ஆர்வத்தோடு பார்த்திருந்தனராம்.

ஆனால் இளவரசியோ வந்திருந்த யாரையும் பிடிக்காதலால் மாலையுடன் அப்படியே அவளுடைய அறைக்கு சென்றுவிட்டாளாம். வந்திருந்த அனைவரும் வருத்தத்தோடு சென்றுவிட்டனராம்

மிகவும் செல்லமாக வளர்த்த பெண் என்பதால் ராஜா கோபம் கொள்ளாமல் அதே போல் மற்றுமொரு சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தாராம். அதிலும் இளவரசிக்கு யாரையும் பிடிக்கவில்லை. இருந்தாலும் ராஜா சோர்வாகாமல் தன் மகளுக்கு பிடித்தவாறு மணமகனை தேடிக்கொண்டே இருந்தாராம்.

நாட்கள் செல்ல செல்ல ராஜா நோய்வகபட்டு படுக்கையில் விழுந்தாராம், தான் இறந்துவிடப்போகிறோம் என அறிந்து இளவரசியை அழைத்து அவளுக்கு திருமணம் ஆகாதது குறித்தும், தனக்கு பின் தன் நாட்டை ஆள்வது யார் என்பதை பற்றியும் கவலை தெரிவித்தாராம்.

தந்தை மரணப்படுக்கையில் துன்பப்படுவதை பார்த்த இளவரசி, தனக்கு திருமண ஆகும் வரை தானே நாட்டை ஆள்வதாக ராஜாவிடம் வாக்கு கொடுத்தாளாம். இறக்கும் தருவாயில், தெற்கே சோமனாதபுரத்தை ஆள்கிற மயிலவாணன் என்கிற இளவரசர் வருவார் என்றும், இளவரசிக்கு பிடித்த்ருந்தால் அவரை திருமணம் புரிந்து நீடூடி வாழ்க எனக்கூறி கண் மூடினாராம்.

அதன்பின் இளவரசி ஆட்சிப்பொறுப்பை ஏற்று திறம்பட செயலாற்றினாளாம். ஒரு நாள் சோமநாதபுர அரசர் ராணியை காணவந்திருக்கிறார் என காவலாளியிடமிருந்து செய்திவந்ததாம் ..

அப்பறம் அப்பறம் ....

அப்பறம் தான் நான் தூங்கிட்டேனே :)))

Saturday, September 6, 2008

உனை யாம் அறியேன் ம‌ன‌மே! - மழைக்காலம் III

மழைக்காலம் I


மழைக்காலம் II

"தீனா அங்க பாரு டா, ஒரு பொண்ணு உன்னையே பார்த்துட்டு இருக்கா.."

"எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் ஏன்டா வம்புக்கு இழுக்கற"

"இல்ல டா உன்னையே உத்து உத்து பார்த்துட்டு இருக்கா, நீ பாரு உனக்கு தெரிஞ்ச பொண்ணா இருக்கப்போகுது"

"பேசமா சாப்பிடு பாலா , ஒரு Burger a இரண்டு மணி நேரமா வைச்சுகிட்டு இருக்க. இதுக்கு தான் உன்கூட இங்கெல்லாம் வரக்கூடாது"

"டேய் அந்த பொண்ணு நம்ம டேபிள் கிட்ட வரா டா"

"........."

அந்த பெண் வந்து தீனாவிற்கு அருகே உள்ள சேரில் அமர்ந்தாள் ..

"Excuse me, Im Sharon .. உங்களுக்கு என்ன நியாபகம் இருக்கா?"
....................

"எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு, .............but Im not able to recall"

"நான் Satyam ல work பண்றேன், என் வீடு அயனாவரமில் தான் இருக்கு ... அயனாவரம் சிக்னல் ல காலைல ஏழு மணிக்கு என்னோட CAB ல ஏறுவேன்..உங்க CAB உம் அதே timing தான...ஞாபகம் வரலையா, என்னோட friend உமாவையாவது ஞாபகம் இருக்கா?

விருட்டென்று மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது தீனாவிற்கு, போன வருடம் இதே மழைக்காலத்தில் பத்து நாள் தேவதை போல தோன்றி சிலுவையில் அறைந்துவிட்டு சென்றாளே. இன்னும் அந்த மாற்றம் என்னுள்ளே இருக்கிறதே எப்படி மறப்பேன் அவளை. தான் நிதானமிழந்து போவதை வெளிக்காட்டாமல் சுதாரித்துக்கொண்டான்.

" ஆ ... ஆமா ஞாபகம் இருக்கு, நீங்களும் உங்க friend உம் CAB க்கு வெயிட் பண்ணுவீங்க , பார்த்திருக்கேன். .......பரவைல்லையே நீங்க என்னை நல்லா ஞாபகம் வைச்சுருக்கீங்க :)"

"நான் மட்டுமா, உமாவும்தான் ...."

என்ன சொல்கிறாள் இவள். வேறொருவனோடு திருமணம் முடித்து சென்றவள் என்னை ஏன் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்..

"எனக்கு புரியல, நீங்க என்ன சொல்லறீங்கன்னு"

"நான் பண்ணின ஒரு கலட்டாவால தான் இந்த நிலைமை, ஹ்ம்ம் கேட்க மறந்துட்டேன்....உங்க பேரு என்ன?"

"தீனா...தினகரன்"

"தீனா, கடைசியா நீங்க என்கிட்ட பேசினது ஞாபகம் இருக்கா, நான் கூட உமாவுக்கு கல்யாணம்னு சொன்னேனே"


மெல்லிய புன்னகையோடு, "சொல்லுங்க ஞாபகம் இருக்கு"

"Actual எ நான் அன்னைக்கு சும்மா விளையாட தான் அப்படி பொய் சொன்னேன் ..... "


"பொய்யா ?? அப்படின்னா அவங்களுக்கு கல்யாணம் நடக்கலையா?"

"இல்லை, அதோட ஒரு பெரிய உண்மை அவ இன்னும் உங்களை தான் நெனைச்சுட்டு இருக்கா "

"................"

"என்னங்க சொல்றீங்க, எனக்கு குழப்பமா இருக்கு ....please கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க "

"ஆமா தீனா, உமா உங்களை தான் நெனைச்சுட்டு இருக்கா. நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்துகறீங்க, ரெண்டு பேருக்குமே பிடிச்சுருக்குன்னு எனக்கு தெரியும். அவ காய்ச்சலுக்காகத்தான் leave போட்டிருந்தா. அன்னைக்கு நீங்க வந்து அவளை பத்தி கேட்டதும், உங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கத்தான் அவளுக்கு கல்யாணம்ன்னு சும்மா சொன்னேன். ஆனா உங்களை அதுக்கப்பறம் பார்க்கவே முடியல, உங்களோட பேர் தெரியாததுனால எங்களால கண்டுபிடிக்க முடியல. உமா அப்படி upset ஆகிடுவான்னு நான் எதிர்பார்கல. கொஞ்ச நாள்ல அவ சரியாகிடுவான்னு நினைச்சேன், ஆனா அவ கடந்த ஒரு வருஷமா அவங்க வீட்ல பார்க்கிற alliance எல்லாம் வேணாம்ன்னு சொல்லிட்டு இருக்கா. எனக்கு அவ கிட்ட பேசறதுக்கே ஒரு மாதிரி இருக்கு, எல்லாம் என்னாலதானோ ங்கிற Guilty ஆ பீல் பண்றேன்.

உங்களை பார்த்தது எனக்கு அவ்வளவு பெரிய shock, நான் உங்களை பார்ப்பேன்னு சத்தியமா எதிர்பார்கலை. ............என்ன ஏதோ யோசிச்சுட்டு இருக்கீங்க.....நீங்க அவளை மறந்துடீங்களா?? நான் உங்களை disturb பண்ணிருந்தா so sorry ...."

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல...wait பண்ணுங்க நான் வரேன்"

இந்த நிலைமையில் என்ன பேசுவதென்று தெரியாததினாலேயே தீனா அங்கிருந்து எழுந்து வெளியே வந்தான்.

பாலாவும் தீனாவை பின்தொடர்ந்தான்.

"தீனா நீ onsite போறதுக்கு முன்னாடி ஒரு பொண்ண பத்தி சொன்னியே அவளா டா"

"ஆமா...ஆனா அவ ... எனக்கு பயங்கர shock a இருக்கு டா"

"இப்ப என்ன பண்ண போற"

"தெரியல...ஆனா எனக்காக ஒரு பொண்ணு அதுவும் எனக்கு பிடிச்ச பொண்ணு காத்துகிட்டுருக்கான்னு தெரிஞ்ச அப்பறம் நான் எப்படி அவள விட முடியும்"

"என்ன டா சொல்ற அடுத்த வாரம் உனக்கு நிச்சயதார்த்தம், விளையாடாத தீனா"

"நான் அவகிட்ட first பேசணும்"

"அறிவிருக்கா உனக்கு just 10days பார்த்த பொண்ணுக்காக இப்படி feel பன்றியே, think practical மச்சி. its just an infactuation அவ்வளவு தான். அந்த பொண்ணு தான் தப்பு பண்ணிட்டு இருக்கான்னா நீ அதுக்கு மேல இருக்கயே"



"உனக்கு தெரியாது டா, Its not just 10days, its something more than that. அவளும் நானும் நிறைய நாட்கள் பழகியது போல ஒரு உணர்வு. அவ்வளவு ஏன் நீ சொல்ற மாதிரி just 10days னு நான் நினைச்சுருந்தா, அவளுடைய முகம் ஏன் இன்னும் என்னுடைய நியாபகத்துல இருக்கணும், அவளை பத்தி அவ friend சொன்னதும் எனக்கு ஏன் மனசுல அப்படி ஒரு வலி வரணும்.

இதையெல்லாம் கூட விடு, நான் யாரு என்னன்னு தெரியாம இத்தனை நாள் என்னையே நினைச்சுட்டு இருந்திருக்காளே, உனக்கு புரியாது டா. Its something divine and she is born for me"

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல தீனா, ஆனா நீங்க இரண்டு பேரும் ஒன்னு சேருவது கடவுளோட சித்தம் என்றால் அதை யாராலும் மாற்ற முடியாது....சரி வா அந்த பொண்ணு wait பண்ணுறா "

"Sorry Sharon, எனக்கு கொஞ்சம் shock ஆ இருந்தது அதான் .... நான் உமாகிட்ட பேசணும், அவங்க மொபைல் நம்பர் கொடுக்கறீங்களா"

"சந்தோஷமா இருக்கு தீனா, எங்க நீங்க அவளை மறந்துடீன்களோன்னு நினைச்சேன், அவ இப்ப US இல் இருக்கா, deputation காக ஆறு மாசம் போயிருக்கா"

"US ஆ, US இல் எங்க ...."

"கலிபோர்னியா .."

இதை கேட்டதும் தீனாவிற்கு சிரிப்பு வந்தது

"ஏன் சிரிக்கறீங்க"

"நான் பத்து மாதமா அங்க தான் இருந்தேன், இந்தியா வந்து ஒரு மாதம் ஆகுது"

"அட கடவுளே அப்படியா.. நான் அவளோட நம்பர் தரேன் நீங்க பேசுங்க அப்படியே உங்க நம்பரையும் தாங்க........... எனக்கு இப்பதான் மனநிம்மதியா இருக்கு, நீங்க உமாகிட்ட பேசின அப்பறம் எனக்கு call பண்ணுங்க. I will be waiting for your call"

"கண்டிப்பா பண்றேன்..."

"சரி நான் கிளம்பறேன், Good luck :) சீக்கிரமே உங்க இரண்டு பேரையும் ஒன்னா பார்க்கணும். will pray GOD"

நிறைந்த புன்னகையோடு வழியனுப்பி வைத்தான் ....

"எப்ப தீனா அந்த பொண்ணோட பேசப்போற??" என பாலா மிகுந்த எதிர்பார்ப்புடன் கேட்டான்

"இன்னைக்கு ராத்திரி 8.30 க்கு, அதுக்கு முன்னால அம்மாகிட்ட உமாவை பத்தி சொல்லணும். நிச்சையதார்தத்தை எப்படி நிறுத்தப்போறேன்னு தெரியல, குழப்பமா இருக்கு"

"தீனா, நீ first உமாகிட்ட பேசு அதுக்கப்பறம் அம்மாகிட்ட சொல்றத பத்தியும், நிச்சையதார்தத்தை பத்தியும் யோசிக்கலாம்"

"ஏண்டா..."

"எல்லாம் காரணமாதான் சொல்றேன், over excitment ஆல நீ தப்பா எதுவும் செய்துடக்கூடாது, so first அவகிட்ட பேசு"

"ஹ்ம்ம் சரி..."

"சரி அவ கிட்ட பேசினதும், எனக்கும் call பண்ணுடா"

"Sure டா, Bye"

இரவு 8.30 ....

தீனாவின் மனது படபடத்தது, எப்படி ஆரமிப்பது, என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பிப்போயிருந்தான். இந்த தவிப்பு அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு உமாவின் நம்பருக்கு டயல் செய்தான்.

ரிங் அடிக்கிறது ..

மறுமுனையில், "ஹலோ.."

"ஹலோ... உமாவா"

"ஆமா நீங்க .."

"நான் தீனா, அயனாவரமில் இருக்கேன்....நீங்க என்னை பார்த்திருக்கீங்க. உங்களுக்கு ஞாபகம் இருக்கா.... நான் கூட ...." என்று அவன் சொல்லி முடிப்பதிற்குள்

"sorry எனக்கு அப்படி யாரையும் ஞாபகமில்ல, நான் office க்கு போய்கிட்டிருக்கேன்...அப்பறம் கூப்பிடுங்க, BYE என்று இணைப்பை துண்டித்தாள்"

எந்த இணைப்பை ?????????? (தொடரும்......)






Wednesday, September 3, 2008

A for Apple தொடர் பதிவு..

உருப்படாதன்னா அப்பறம் சுபாஷோட தயவுல தொடர் பதிவுல நாமளும் பங்கெடடுத்துக்காச்சு..என்னால முடிந்த வரைக்கும் Build up தந்துருக்கேன் :)

..................................................................

0-9 - http://www.5min.com/ - ஐந்து நிமிடத்தில் என்னவெல்லாம் செய்ய முடியும்னு இங்க போய் பாருங்க

..................................................................

A- http://www.arusuvai.com/
http://allrecipes.com/Default.aspx - இவை இரண்டும் - :) நளபாகத்துக்கு

..................................................................


B - www.bristos.com/ - நண்பர்களுக்கு Free Ecards அனுப்புவதற்கு, different ஆ இருக்கும் try பண்ணிபாருங்க

..................................................................

C - http://www.crazy4mobilez.com/ - நமக்கு கொஞ்சம் Mobile craze :)..இங்க தான் Mobile க்கு தேவையானதை download செய்யறது

http://www.chikka.com/ - Yahoo Messenger, MSN Messenger, Google Talk, AOL Instant Messenger, ICQ Messenger- இவை அனைத்திலும் ஒரே நேரத்தில் online chat செய்யலாம்

http://www.cnn.com/ - Latest news க்கு

..................................................................


D - http://www.doof.com/#/home - online Games களுக்கு

http://www.diet.com/ - எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு முறையை பற்றிய தகவல்கள் மற்றும் எடையை குறைக்க சில வழிமுறைகளுக்கு

..................................................................

E - http://www.ebooklobby.com/ - Ebooks

..................................................................

F- http://www.fastrack.in/ - Latest Fast track watches மற்றும் Eye gears களுக்கு இங்க தான் அடிக்கடி போய் பாக்கறது :)

..................................................................

G - http://www.google.com/analytics/ - நம்ம வலைபதிவு கடைக்கு யாரெல்லாம் எங்க இருந்து வந்துருக்காங்க, புது வரவா பழைய வரவா போன்ற statistics க்கு

http://gizmodo.com/ - Electronic gadgets பற்றிய தகவல்களுக்கு

http://www.guinnessworldrecords.com/ - World records information

..................................................................

H - http://www.healthfinder.gov/ - வளமாய் வாழ சில தகவல்களோடு

http://www.humanity.org/ - மனித நேயம் பதிவுக்கு பிறகு Browse செய்து கண்டுபிடித்த தளம்

..................................................................

I - www.indiaonrent.com/ - இது மொக்கை site ங்க .. இங்க போன நேரம் போறதே தெரியாது ...

http://www.icicibank.com/ - என்னுடைய online bills, credit card, debit card - எல்லா சேவையும் இந்த தளத்தில் தான்

http://www.infoworld.com/index.html - latest technology information

..................................................................

k - http://kea.metsite.com/ - வானிலை அறிக்கை , 20 நிமிடங்களுக்கு ஒரு முறை update செய்யப்படும்

..................................................................

L - http://www.linkedin.com/ - Professionals community

..................................................................

M- http://www.meebo.com/ - இதுவும் ஒரு Instant messaging service தளம்

http://www.mightyquiz.com/ - Quiz களுக்கு , இங்கேயும் அப்ப அப்ப போறதுண்டு

..................................................................

N- www.nokia.co.in/ - :) latest Nokia mobiles க்கு அப்பறம் Nokia labs க்கும்

..................................................................

Q - http://www.quotationspage.com/ - இங்க போய் தான் நாம Quotes எடுக்கறது

..................................................................

S - http://setctn.org/ - நம்ம போக்குவரத்து துறைக்கும் Site இருக்கு ல

..................................................................

T - http://www.tucows.com/ - free wares வகையிரா

http://www.thedailygreen.com/ - பசுமை புரட்சிக்கு நுகர்வோர் வழிகாட்டி

http://www.tamilbeat.com/ - latest தமிழ் mp3 பாடல்களுக்கு

..................................................................

V - http://www.visiblebody.com/ - நம் உடல் பாகங்கள் அனைத்தும் இங்க 3D ல பாக்கலாம்

..................................................................

Y - http://www.yogawiz.com/ - online யில் யோகா கற்க

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

விதிப்படி நாம மூன்று பேருக்கு கொக்கி போடனுமே ...
நமக்கு மாட்டி விடரதெல்லாம் ரொம்ப பிடிச்ச விஷயம் வேற
தோ வரேன்..


சரவணன் - வாங்க சரவணன், உங்க திறமையை இதுலேயும் கொஞ்சம் காட்டுங்க

விக்னேஷ் - வாங்க, வந்து தொடர் பதிவுல பங்கெடுத்து நம்ம சங்கத்துல சேர்ந்துடுங்க :)

அருணா - உங்களையும் வம்புக்கு இழுத்தாச்சு :) ஆட்டத்தில கண்டிப்பா பங்கேடுத்துக்கொங்க

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


Rule:The Tag name is A for ஆப்பிள்..
Give preference for regular sites
Ignore your own blogs, sites
Tag 3 People


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Tuesday, September 2, 2008

கிறுக்கல்கள் !!

தொடர் பதிவு போடுவது சிறிது கால தாமதம் ஆகுமென நினைக்கிறேன் (நிஜமாகவே ஆபீஸ் ல கொஞ்சம் பிஸி...... OB அடிச்சு பதிவு எழுத முடியாத நிலை)

அதற்காக இந்த சும்மா பதிவு ..... (கொஞ்சம் பொறுத்துக்கோங்க :)))))

ரசனை ...

ரசிக்கவே தோன்றுகிறது விளைவுகளை பற்றி எண்ணாமல் ..
எனக்காகவே சிலவற்றை நீ செய்வதும்
உனக்காகவே சிலவற்றை நான் செய்வதும்
ரசிக்கவே தோன்றுகிறது..
........................................................................

உன்னை பிரிந்தேனே !!

இரவும் எனக்கு பகலாகிப்போகும் என நினைக்கவில்லை
உன்னை பார்க்காத வரை ..
உன்னிடம் இருந்து விலகிய பின்பு ...
என் இரவுகள் அனைத்தும் நிரந்தரமாக பகலாகிப்போனதே !!

...........................................................

கண்ணீர் !!

நீ என்னை பிரியும் வேளையில்
அதை காண முடியாமல் செய்த
கண்ணீருக்கு நன்றி கூறுகிறேன் !!
..............................................................................

உன் பிரிவில் ....

எனக்கும் கவிதை எழுதத்தெரியுமென
கற்றுக்கொடுத்தாய் !!
நான் எழுதிய கவிதைகளை
நானே மறந்தாலும் நீ எனக்கு
நினைவுபடுத்தினாய் !!
இதை பற்றி எழுது அதை பற்றி எழுது
என ஊக்கப்படுதினாய் !!
நான் எப்பொழுதும் உன்னை பற்றியே
கவிதை எழுத வேண்டுமென
என்னை பிரிந்தாயோ ??