"முரளி, இனிமேல் நீ School க்கு வரவேமாட்டியா டா"
"வரமாட்டேன் டா"...."எனக்கு எங்கேயும் வேலை கிடைக்கலையே, அதுவே கஷ்டமா இருக்கு"
"நீ வேலைக்கெல்லாம் போக வேணாம் டா, school க்கே வந்து சேர்ந்துடு டா"
"வீட்டுல காசே இல்லையே டா விமல் , எங்க அப்பா இருந்த வரைக்கும் நானும் என் தங்கச்சி பாப்பாவும் நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்னு சொல்லுவாரு, அப்பா செத்துபோனப்ப, "அப்பா செத்து போய்ட்டாரு முரளி, அவரு சம்பாதிச்சதால, நாம சாப்பிட்டுகிட்டு ஒண்டு குடித்தனம் பண்ணினோம் ..இனிமேல் காசு கொண்டுவர அப்பா இல்லையே டா...." அம்மா என்ன கட்டிபிடிச்சு அழுதத நீயே பார்த்தியே டா"
"உங்க அம்மா தான் வீட்டு வேலைக்கு போறாங்களே டா, நீயும் தங்கச்சி பாப்பாவும் school க்கு வந்துடுங்க"
"அம்மாவுக்கு வர சம்பளம் சாப்பாட்டுக்கு தான்டா போதுமானதா இருக்கும் ..வீட்டு வாடகையெல்லாம் அம்மா கடன் சொல்லிருக்கு....."
"ஹ்ம்ம் தங்கச்சி என்னடா பண்ணுது"
"நம்ம maths miss வீட்டுல வேலை பார்க்குது "
"அதுக்கு வேலையே தெரியாதேடா"
"ஆமாடா பாவம், miss school க்கு போனதும் அவங்க குழந்தைய பார்த்துக்கிற வேலை "...."நான் தான் டா சும்மா இருக்கேன்....அப்பா லாரி ஓட்டின கம்பெனியில இரண்டு நாள் தான் டா வேலைக்கு போனேன் முதலாளி என்ன நல்லா நடத்தினாரு ..என்ன ஆச்சுன்னே தெரியல திடீர்னு கூப்பிட்டு நாளைல இருந்து வேலைக்கு வராதப்பான்னு சொல்லிட்டார்"
"..."
"நாளைக்கு அம்மா, அண்ணாச்சி மளிகை கடையில சேர்த்து விடறேன்னு சொல்லிச்சு டா"
"எந்த கடைடா?"
"முருகர் கோவிலுக்கு பக்கத்தில இருக்கே அந்த கடை"
"சரிடா அடுத்த வாரம் 1st term test இருக்கு, prepare பண்ணனும் நான் வீட்டுக்கு போறேன்"
"உன்கூட போட்டி போட நான்தான் இல்லையே அப்பறம் என்னடா நீ தான் 1st rank எடுப்ப :) போய் நல்லா படி"
நண்பனிடமிருந்து சோகமாய் விடைபெற்று வீட்டிற்கு சென்றான்.
விமலின் அப்பா அப்பொழுது தான் Duty முடிந்து வந்திருந்தார். மெதுவாய் அவர் அருகில் சென்றான்,
"என்ன விமல், முரளியை பார்த்தியா இன்னைக்கு"
"ஆமாப்பா"
"சொல்லு, எதையோ சொல்ல நினைக்கிற மாதிரி இருக்கு"
"அந்த Transport owner கிட்ட சொன்ன மாதிரி, முருகன் கோவில் பக்கத்தில இருக்கிற annachi கடயிலையும்முரளியை வேலைக்கு வைக்க வேணாமின்னு சொல்லணும்பா"
"முரளி அங்க வேலைக்கு போகபோறானா?"
"ஆமா நாளைக்கு அவன் அம்மா அந்த கடையில சேர்க்கபோறாங்க"
"இங்க பாரு விமல், நீ கஷ்டபடுறது எனக்கு புரியுது. அதுக்காக அவன் எங்கேயெல்லாம் வேலைக்கு போகிறானோ அங்க போய் என்னோட sub-inspector அதிகாரத்தை வைச்சு பேச முடியாது. இந்த ஊரில எத்தனையோ factory, company னு சின்ன பசங்கள வேலைக்கு வெச்சிருக்காங்க. நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் இதை ஒழிக்க முடியல. சின்ன குழந்தைங்க அவங்க வீட்டு கஷ்டத்திற்காக தான் வேலைக்கு போறாங்களே தவிர, அவங்களா விருப்பப்பட்டு போகல. ஏன் உன் நண்பன் முரளி கூட அதுக்காக தான போறான்..."சரி நான் இதுக்கு ஒரு வழி சொல்றேன் கேட்கறியா?"
"சொல்லுங்கப்பா"
"எனக்கு தெரிஞ்ச அமைப்பின் மூலமா முரளி அப்பறம் அவன் தங்கையோட படிப்பு செலவுக்கு ஏற்பாடு பண்ணிடலாம். அது தவிர இருக்கிற செலவுகள நான் பார்த்துகிறேன்"..."உன் முரளி உன்கூட school க்கு வருவான், அப்பறம் நீங்க ரெண்டு பேரும் போட்டி போட்டு படிக்கலாம்"
"நிஜமாவா சொல்றீங்கப்பா :)"
"ஆமா விமல், இது நானும் உன் அம்மாவும் சேர்ந்து எடுத்த முடிவு தான், school விட்டு வந்ததும் உன்கிட்ட சொல்லனும்னு இருந்தோம், முரளியோட அம்மாவை நாளைக்கு கூட்டிட்டு வா இதை பத்தி சொல்லிடலாம்"
"இப்பவே கூட்டிட்டு வரேன், சொல்லிடுங்க" என்று நிற்காமல் முரளியின் வீட்டிற்கு ஓடினான் விமல்.
சமுதாய சீர்கேடுகளை ஒவ்வொரு தனி மனித முயற்சியின் மூலம் திறுத்தலாம் என்கிற சிறு நம்பிக்கை தான் இச்சிறுகதை
6 years ago
52 comments:
அருமையான கருத்து..
சிறு சிறு துளிகள் சேர்ந்துதானே பெருவெள்ளம் ஆகனும்..
அருமை...
இதே போல் பல அருமையான சமூக விழிப்புணர்வு கதைகள் எழுத வேண்டும்..
வாழ்த்துக்கள்
கருத்தாழம் மிக்க கதை..
தொடரட்டும்...
மொக்கை குழுவில் இருந்து வெளியேறி விட்டீர்களா??
நல்ல கருத்து
நல்ல கருத்து.
வாழ்த்துக்கள்!
மீண்டும் உங்களிடம் இருந்து மொக்கைகள் வரவேற்கபடுகிறது...
எதை மறந்தாலும் மொக்கை போட மறந்துடாதீங்க.
// அசோக்.எஸ்.குமார் said...
அருமையான கருத்து..
சிறு சிறு துளிகள் சேர்ந்துதானே பெருவெள்ளம் ஆகனும்..
//
வாங்க அசோக்.எஸ்.குமார் !!
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
//உருப்புடாதது_அணிமா said...
அருமை...
இதே போல் பல அருமையான சமூக விழிப்புணர்வு கதைகள் எழுத வேண்டும்..
வாழ்த்துக்கள்//
வாங்க உருப்படாதண்ணா !!
கண்டிப்பாக எழுதுகிறேன் .. மிக்க நன்றி
// உருப்புடாதது_அணிமா said...
கருத்தாழம் மிக்க கதை..
தொடரட்டும்...//
நன்றி நன்றி நன்றி !!!!!!!! :)
// உருப்புடாதது_அணிமா said...
மொக்கை குழுவில் இருந்து வெளியேறி விட்டீர்களா??//
அடடா நாம அந்த குழுவில ஆயுட்கால உறுப்பினராக்கும்... அப்ப அப்ப சமூக நலனும் தேவைதான :) அதற்காகத்தான் இந்த பதிவு ..
// cable sankar said...
நல்ல கருத்து//
வாங்க cable sankar !!
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
// ராமலக்ஷ்மி said...
நல்ல கருத்து.
வாழ்த்துக்கள்!//
வாங்க ராமலக்ஷ்மி !!
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
// உருப்புடாதது_அணிமா said...
மீண்டும் உங்களிடம் இருந்து மொக்கைகள் வரவேற்கபடுகிறது...
எதை மறந்தாலும் மொக்கை போட மறந்துடாதீங்க.//
மொக்கைகள் தானா வரும், அதை எப்படி மறக்கறது :))))
நல்ல சிறுகதைங்க .. நல்ல கருத்து
ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப நல்ல கதை
ரொம்ப பிடிச்சிருக்கு...இப்படி எல்லாரும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்
//Saawariya said...
ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப நல்ல கதை
ரொம்ப பிடிச்சிருக்கு...இப்படி எல்லாரும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்//
ரிப்பீட்டேய்..
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க துர்கா..
:))
டச்சிங்கான கதை!!!
பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுடன் நல்ல உறவை பேணுபவர்களுக்கு தங்களின் பிள்ளைகளின் வகுப்பு பிரச்சனைகள் மற்றும் விருப்பு வெறுப்புகள் பற்றி அறிந்திருப்பது அவசியம்.
பெற்றோர்கள் இவ்வாறு முன்மாதிரியாக செய்வதன் மூலம் தங்கள் பிள்ளைகளையும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த மனிதனாக மாற்றலாம். கட்டாயம் இப்படியான பிள்ளைகள் தங்கள் பெற்றோரை முன்மாதிரியாகக் கொண்டால் நாடு தானாக முன்னேறிவிடும்.
இவ்வளவு நுண்ணிய விடயத்தை ஒரு சிறிய கதைக்குள் புகுத்தியிருப்பது உங்களின் திறமை!!!
நன்றி & வாழ்த்துக்கள்!!
// அதிஷா said...
நல்ல சிறுகதைங்க .. நல்ல கருத்து//
நன்றி அதிஷா..
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி !!
// Saawariya said...
ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப நல்ல கதை
ரொம்ப பிடிச்சிருக்கு...//
நன்றி Saawariya..
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி !!
//இப்படி எல்லாரும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்//
இதுதான் என்னுடைய ஆதங்கமும்
// Saravana Kumar MSK said...
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க துர்கா..
:))
//
நன்றி MSK :) :)
//டச்சிங்கான கதை!!!//
நன்றி Subash
//பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுடன் நல்ல உறவை பேணுபவர்களுக்கு தங்களின் பிள்ளைகளின் வகுப்பு பிரச்சனைகள் மற்றும் விருப்பு வெறுப்புகள் பற்றி அறிந்திருப்பது அவசியம்.//
இக்கருத்தினை நீங்கள் மட்டுமே சுட்டியுள்ளீர்கள்.... என் பெற்றோர் இதற்கு எடுத்துக்காட்டு என்பதில் எனக்கு சிறு பெருமை உண்டு
//பெற்றோர்கள் இவ்வாறு முன்மாதிரியாக செய்வதன் மூலம் தங்கள் பிள்ளைகளையும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த மனிதனாக மாற்றலாம். கட்டாயம் இப்படியான பிள்ளைகள் தங்கள் பெற்றோரை முன்மாதிரியாகக் கொண்டால் நாடு தானாக முன்னேறிவிடும்.//
உண்மை !!!
//இவ்வளவு நுண்ணிய விடயத்தை ஒரு சிறிய கதைக்குள் புகுத்தியிருப்பது உங்களின் திறமை!!!
நன்றி & வாழ்த்துக்கள்!!
//
மிக்க நன்றி சுபாஷ் !!
//உருப்புடாதது_அணிமா said...
இதே போல் பல அருமையான சமூக விழிப்புணர்வு கதைகள் எழுத வேண்டும்..////
அணிமா!!!! நீங்களா?
உங்கள்ட இருந்து இப்படியொரு வேண்டுகோள் பின்னுட்டமா? இருக்காதே??? lol
ஒரு வேள நீங்க சொன்ன மாதிரி உங்க பேர்ல வேற யாரோ போடுராங்களோ??
//உருப்புடாதது_அணிமா said...
மீண்டும் உங்களிடம் இருந்து மொக்கைகள் வரவேற்கபடுகிறது...//
இதா இதா உங்க ஸ்டைல்!!
ஹிஹி
ஃஃ
கண்டிப்பாக எழுதுகிறேன் .. மிக்க நன்றிஃஃ
இப்படித்தா மொக்கைச்சங்கத்துக்கு விசுவாசமா நடந்துக்கணும்.
ஹாஹா
ஃஃSaawariya said...
ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப நல்ல கதை
ரொம்ப பிடிச்சிருக்கு...இப்படி எல்லாரும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்
ஃஃ
சரிதான். உண்மைதான்.
ஆனாலும் இப்படி பதிவெழுதவாவது ஒன்று வேணுமில்லையா?
( அடிக்கவராதீங்கப்பா!! )
ஃஃஇக்கருத்தினை நீங்கள் மட்டுமே சுட்டியுள்ளீர்கள்.... என் பெற்றோர் இதற்கு எடுத்துக்காட்டு என்பதில் எனக்கு சிறு பெருமை உண்டுஃஃ
எனது பெற்றோரும் இப்படியாக இருப்பதையிட்டு உண்மையில் நானும் பெருமைப்படுகிறேன். படிக்கும்போதும் இதேபோன்றதொரு சம்பவம் நடந்து அப்பாவிடம் சொல்லி உதவியது ஞாபகம். இன்றும் அவன் என் நெருங்கிய நண்பன்
good post..!
// சுபாஷ் said...
ஃஃ
கண்டிப்பாக எழுதுகிறேன் .. மிக்க நன்றிஃஃ
இப்படித்தா மொக்கைச்சங்கத்துக்கு விசுவாசமா நடந்துக்கணும்.
ஹாஹா//
:)))))
//எனது பெற்றோரும் இப்படியாக இருப்பதையிட்டு உண்மையில் நானும் பெருமைப்படுகிறேன். படிக்கும்போதும் இதேபோன்றதொரு சம்பவம் நடந்து அப்பாவிடம் சொல்லி உதவியது ஞாபகம். இன்றும் அவன் என் நெருங்கிய நண்பன்//
அப்படியா !! மிகவும் சந்தோஷமாக உள்ளது ......
// Balachander said...
good post..!//
வாங்க Balachander..
முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி !!!
////இவ்வளவு நுண்ணிய விடயத்தை ஒரு சிறிய கதைக்குள் புகுத்தியிருப்பது உங்களின் திறமை!!!
நன்றி & வாழ்த்துக்கள்!!
//
மிக்க நன்றி சுபாஷ் !!///
ஓஓஓஓஃஃஃஃஃஃ
அப்ப உண்மையிலேயே இப்படி புத்திசாலித்தனமா யோசிச்சுதா எழுதினீங்களா?
ஸஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ம்ம்ம் ஓகே ஓகே ஓகே ஓகே
:)
Wow very nice story... Keep up the good work... I liked the friendship between the boys...
awesome narration g8 one...theme thaan highlight sooooper
Wonderful....
அருமையான கதை....கதை என்பதை விட சொல்லப்பட்ட கருத்து, மிக அருமை....பாத்திரப்படைப்பும், Presentation - உம் மிக சிறப்பாக உள்ளது....
இந்த மாதிரி நாலு பேரு இருந்தா கண்டிப்பாக ஒரு மாற்றம் கொண்டு வர முடியும்.... படிப்பும் விவரமும் உள்ள நம்மை போன்ற இளைஞர்கள் மனது வைத்தால் கண்டிப்பாக ஓர் சீர்திருத்தம் சாத்தியம்....
வாழ்த்துக்கள்....
hey durga.. great blog.. i loved to read it.. try to publish in some books to increase the readability...
happy thoughts...
????////இவ்வளவு நுண்ணிய விடயத்தை ஒரு சிறிய கதைக்குள் புகுத்தியிருப்பது உங்களின் திறமை!!!
நன்றி & வாழ்த்துக்கள்!!
//
மிக்க நன்றி சுபாஷ் !!///
ஓஓஓஓஃஃஃஃஃஃ
அப்ப உண்மையிலேயே இப்படி புத்திசாலித்தனமா யோசிச்சுதா எழுதினீங்களா?
ஸஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ம்ம்ம் ஓகே ஓகே ஓகே ஓகே
:)????
:) :) சரி சரி விடுங்க
//Malliga said...
Wow very nice story... Keep up the good work... I liked the friendship between the boys...//
Thanks Malli :)
//JSTHEONE said...
awesome narration g8 one...theme thaan highlight sooooper//
Thanks for your visit and comment Saravanan :)
// க விக்னேஷ் said...
Wonderful....
அருமையான கதை....கதை என்பதை விட சொல்லப்பட்ட கருத்து, மிக அருமை....பாத்திரப்படைப்பும், Presentation - உம் மிக சிறப்பாக உள்ளது....//
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விக்னேஷ் !!
//இந்த மாதிரி நாலு பேரு இருந்தா கண்டிப்பாக ஒரு மாற்றம் கொண்டு வர முடியும்.... படிப்பும் விவரமும் உள்ள நம்மை போன்ற இளைஞர்கள் மனது வைத்தால் கண்டிப்பாக ஓர் சீர்திருத்தம் சாத்தியம்....
வாழ்த்துக்கள்....//
நிச்சயமாக !! சமுதாயம் சமுதாயம் என்கிறோமே தவிர அதில் நாமும் ஓர் அங்கம் என்பதை உணர தவறிவிடுகின்றோம் ..
//Saravana said...
hey durga.. great blog.. i loved to read it..//
Thank you Saravana :)
// try to publish in some books to increase the readability...//
I dont know whether this story is upto the mark to publish..anyways will try :)...Thank you for your encouragement
//happy thoughts...//
:)
அழகான கதை ..
நல்ல கருத்துடன் ..
சொல்லிய விதம்
அனைத்தும் இனிமை ..
வாழ்த்துக்கள் ...
அழகான கதை ..
நல்ல கருத்துடன் ..
சொல்லிய விதம்
அனைத்தும் இனிமை ..
வாழ்த்துக்கள் ...
அழகான கதை ..
நல்ல கருத்துடன் ..
சொல்லிய விதம்
அனைத்தும் இனிமை ..
வாழ்த்துக்கள் ...
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஷ்ணு !!
hai,
உங்களின் அனுமதியில்லாமல் உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.
கலந்துகொள்வீர்களெனும் நம்பிக்கையில்!!!
தகவல்களுக்கு
http://hisubash.wordpress.com
நன்றி
// Subash said...
hai,
உங்களின் அனுமதியில்லாமல் உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.
கலந்துகொள்வீர்களெனும் நம்பிக்கையில்!!!
தகவல்களுக்கு
http://hisubash.wordpress.com
நன்றி
//
அதன் ஊரறிய கூப்பிடாச்சே கலந்துக்காம என்ன பண்றது ... ஆனா பதிவை போடுவதற்கு கொஞ்ச நாள் ஆகும்...
பதிவை போடுறது கூட கஷ்டமில்லை
நான் இரண்டு மூன்று பேரை tag பண்ணனுமே அது dhaan பெரிய தலைவலி ... யாரை கூப்பிடறது ??? யாரவது மாட்டாமலா போய்டுவாங்க
HI Durga...
Neenga Unga Sontha Karpanaila eluthunaum...
Its Niceeeeeeee
Post a Comment