Friday, August 22, 2008

மனித நேயம் இருக்கிறதா? இல்லையா?

மனித நேயம்னா என்ன, ஒருதருகொருத்தர் அனுசரணையா இருக்கணும், நம்மளால முடிஞ்சவரைக்கும் அடுத்தவங்களுக்கு உதவி பண்ணலாம்.. சின்ன வயசுல School ல Miss "Moral of the story, should be kind to everyone, etc., etc.,"சொல்லறப்ப மண்டைய மண்டைய ஆட்டிட்டு...இப்ப எப்படி எல்லாருமே சுயநலமா இருகாங்க ...


அதுக்காக இருக்கற வேலைய விட்டுட்டு சமூக சேவை பண்றதுக்கு கூப்பிடல, இயந்திரம் மாதிரி ஓடிகிட்டிடுருக்க வாழ்கையில மனித நேயத்த ஒரு புள்ளியா சேர்த்துக்கலாமில்லையா?
என்னோட கேள்வி, நம்ம சமுதாயத்துல மனித நேயம் இருகிறதா இல்லையா ?

இது கொஞ்ச நாளாகவே என் மனசுல இருக்கிற உறுத்தலான கேள்வி .. நேற்று நடந்த ஒரு சம்பவம் இப்படி எழுதற வரைக்கும் கொண்டு வந்து விட்டிருக்கு.

பொதுவாகவே தாம்பரம் - வேளச்சேரி ரொம்பவே Busy ஆன route ..அதுவும் காலைல சொல்லவே தேவையில்ல அவ்வளவு பரபரப்பா எல்லாரும் வேகமா நடந்துட்டு இருப்பாங்க (ரயில்வே station க்கு உள்ள போறவங்களா இருக்கட்டும் இல்ல வெளிய வரவங்களா இருக்கட்டும் எல்லாருமே அப்படிதான்.. இவங்களோட நடந்து வரதுனால நமக்கு வேலை இருக்கோ இல்லையோ நாமளும் வேகமா நடந்து தான் ஆகணும்) ரயில்வே station e இப்படினா பஸ் ஸ்டாண்ட பத்தி சொல்லவே வேணாம்.


இந்த வேலைக்குபோகிற கூடத்தில 22-30 வயதுள்ளவங்க தான் அதிகம்.

நேத்து அதிசயமா தாம்பரம் - திநகர் (சொகுசு பேருந்து)பஸ் ரொம்பவே Free a வந்தது. Ladies seat இல் இரண்டே பேர் தான் என்னையும் சேர்த்து. Gents seats கொஞ்ச நேரத்துல full ஆகிடுச்சு. Bus Terminus ல இருந்து கிளம்பின அப்பறம் 2 Physically challenged persons ஏறினாங்க, (தமிழ்ல தனித்திறன் கொண்டவர்கள், இவர்கள் கண்கள் இருந்து கண்ணிலாதவர்கள் ) ஒருத்தர் யாரோட உதவியுமில்லாம என் பக்கத்துல வந்து உட்கார்ந்து கொண்டார், மற்றொருவர் Gents side seats ல போய் தொட்டு பார்த்து seats எல்லாம் full என்று அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.


பக்கத்துல conductor tickets கொடுத்துட்டு இருந்ததால அவர் ladies seat ல உட்கார வைப்பாரென்று பார்த்தேன், இல்ல வேற யாரவது எழுந்து அவருக்கு இடம் கொடுப்பாங்க என்று நினைத்தேன் அதுவுமில்ல, எல்லாரும் எப்படி இத பாத்துட்டு சும்மா இருகாங்க? இல்ல இருக்க முடியுது. இது ஒரு சின்ன உதவி தானே ஏன் அவருக்கு உதவி பண்ணனும்னு யாருக்கும் தோனல ? இத 2 நிமிடம் பார்த்த என் மனது இப்படி உறுத்துதே? அந்த பஸ் ல 15 பேராவது அவரை பார்திருபாங்க, அவங்க யாருக்கும் உறுத்தலையா?

நான் அவரை போய் கூட்டிட்டு வந்து என்னோட seat ல உட்காரவெச்சுட்டேன்.


அவங்ககிட்ட தன்னம்பிக்கை நம்ம எல்லாரையும் விட நிறையவே இருக்கு, நாம உதவி பன்னனும்னோ இல்ல எழுந்து இடம் கொடுக்கனும்னோ அவங்க எதிர்பார்கலை. சந்தோஷமா ஒரு மணி நேரம் கூட நின்னுகிட்டே travel பண்ணுவாங்க, ஆனா "அவங்களுக்கு இடம் தரலாமா வேணாமா, நாம இன்னும் ஒரு மணி நேரம் போகணுமே, கூட்டதில எப்படி நின்னுட்டு போறது, சரி வேற யாரவது எழுந்து இடம் கொடுப்பாங்க" என்று இந்த மன உருத்தலோடtravel பண்ணுகிற மனிதர்கள் தான் "ஊனமுற்றவர்கள்".
அவங்களை ஒப்பிட்டு பார்த்தா நமக்கு தான் ஆயிரம் குறைகள் இருக்கிறது. "முதியோர்/ஊனமுற்றோர்" இப்படி அவங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தருவதற்கு மனதிற்குள் இத்தனை போராட்டமா இல்லை அத்தனை சுயநலமா ?


நான் வருகிற மற்றொரு route லையும் இப்படி தான் நடக்குது. கணவன், மனைவி இரண்டு பேருமே தனித்திறன் கொண்டவர்கள் தான் (நான் முதலிலேயே கூறியது போல கண்கள் இருந்தும் கண்ணிலாதவர்கள்), Daily ஒரே bus ல தான் parrys வரைக்கும் போவாங்க. அவங்க ஏறினதும் 1st seat ல உட்கார்ந்திருகிரவங்களோட முகம் எப்படி மாறும் தெரியுமா? என்னமோ இவங்க சொத்தை அவங்களுக்கு தாரைவார்க்கிற மாதிரி, எழுந்து இடம் விடுவாங்க...இப்படி பட்டவங்க கூட பரவாயில்லை அவங்க ஏறுவதை பார்த்தே தூங்குவது போல நடிப்பாங்க, சீ எத்தனை கேவலம்.


சக மனிதனோட உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாத ஒருவன் அல்லது புரிந்து கொண்டு சுயநலத்திற்காக மட்டுமே வாழ்கிற ஒருவனை எப்படிங்க ஆறு அறிவுள்ள மனிதன்னு சொல்ல முடியும். விழுந்து விழுந்து சமூக சேவை பண்ண வேணாம் ஆறறிவுள்ள மனிதனா இருக்கலாமே!!

24 comments:

JSTHEONE said...

ஊனமுற்றவர்கள் என்ற‌ வார்த்தையை மிக‌ க‌வ‌ன‌மாக‌ கையாண்டு தனித்திறன் கொண்டவர்கள் என்ப‌தை நிலை நிறுத்தி உங்க‌ள் ம‌ன‌தில் உள்ள‌ க‌வ‌லை ம‌ட்டும் அல்ல‌ ப‌ல‌ரது ம‌ன‌க் க‌ஷ்ட‌த்தை மிக‌ அழ‌காக‌ விவ‌ரித்து எழுதிய‌த‌ற்கு ஒரு ச‌பாஷ் ...............

சண்முகம் said...

மிக சிறந்த நல்ல கட்டுரை

Unknown said...

in english same as what u r telling.. its not handicapped... it is physically challenged person... even some times i curse god like why he shows difference making people to born as physically challenged...

காஞ்சனை said...

உங்க பதிவில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் எல்லா இடங்களிலுமே நடந்து கொண்டுதானிருக்கிறது. சின்ன வயசுல படிச்சதெல்லாம் மறந்துருப்பாங்க. அதப்பத்தி இப்போ கேட்டா. 'அது ச்ச்சின்ன வயசுல படிச்சதுன்னு' தன்னோட அறிவுத்(!!??)திறமைய காட்டுவாங்க.
//சீ எத்தனை கேவலம்// இப்படித்தான் நினைக்கத் தோணும் இந்த மாதிரியானவங்களை பார்க்கும் போது. நன்றி அவர்களுக்கு நீங்கள் எழுந்து இடம் கொடுத்தமைக்கு

Anonymous said...

Really thought provoking and its an awesome blog not only explains how a human should be but also making the physically challenged people encouraging......

Anonymous said...

Really thought provoking and its an awesome blog not only explains how a human should be but also making the physically challenged people encouraging......

Anonymous said...

நல்ல விசயத்தை அருமையா எழுதியிருக்கீங்க!

வாழ்க வளமுடன்!

Aruna said...

இது மாதிரி அடிக்கடி நிகழ்வதுண்டு...ரொம்ப யதார்த்தமான வருத்தம்..
அன்புடன் அருணா

Vapurdha said...

@ Saravanan..thank you bery much for your comment

Vapurdha said...

@ சண்முகம் தங்கள் வருகைக்கும் பாரடிற்கும் மிக்க நன்றி ...

Vapurdha said...

@ SARAVANA...EVEN I FELT LIKE U DAY B4 YEST AFTER THS INCIDENT

Vapurdha said...

@ சகாராதென்றல் .. என்னுடைய ஆதங்கத்தை இப்படி தான் வெளிப்படுத்த முடியுது !!

மனிதனாக பார்த்து திருந்தினால் தான் உண்டு ..வருகைக்கு நன்றி

Vapurdha said...

Thank u Rashu..for ur comments :)

Vapurdha said...

@ பாரதி and Aruna ..தங்கள் வருகைக்கும் பாரடிற்கும் மிக்க நன்றி ...

க விக்னேஷ் said...

உண்மையான கருத்துக்கள்.... மிகவும் சாதரணமாக நடக்கும் சம்பவம் தான் இது.... ஆனால் மக்கள் தங்கள் பக்கம் இருக்கும் தவறை உணரவே மாட்டார்கள்.... தாங்கள் கூறியுள்ளது போலவே Ladies Seat இல் அமரும் ஆண்களும், முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர் இருக்கையில் அமரும் ஆட்க்களும், அந்த இருக்கைக்கு உரியவர்கள் வரும்போது, தங்கள் சொத்தை பறித்தெடுக்க வந்தவர்களை பார்ப்பது போலவே பார்க்கிறார்கள்....

அருமையான இந்த வலைப்பதிவுக்கு என் வாழ்த்துக்கள்....

Unknown said...

Excellent narration of what is happening in our day to day life... Worth reading..... Good work dear

Vapurdha said...

@ க விக்னேஷ்.. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி !!

@ Malli...Thk U 4 d comment :)

MSK / Saravana said...

மிக சிறந்த நல்ல கட்டுரை..
:)

Vapurdha said...

@ Saravana Kumar MSK .. Thank you for the comment :)

http://urupudaathathu.blogspot.com/ said...

அருமையன் கட்டுரை..
தெளிவான உங்கள் பார்வை வியக்க வைய்கின்றது

Anonymous said...

மனிதர்கலெ இல்லை அப்புறம் எங்கெ மனித நேயம்?

Vapurdha said...

//அருமையன் கட்டுரை..
தெளிவான உங்கள் பார்வை வியக்க வைய்கின்றது//

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி ..... _/\_

Vapurdha said...

//மனிதர்கலெ இல்லை அப்புறம் எங்கெ மனித நேயம்?//

மிக சரியாக சொன்னீர்கள் !!

Unknown said...

உண்மை.மனித நேயம் அற்றவர்கள் அதிகம் வாழும் நாடு நம் நாடு என்று சொல்வதில் வெட்கப்படுகிறேன்.அனுபவம்.
வெளிநாடுகளில் பெரும்பாலும் வயதாவர்களுக்கும் மாற்றுத்திறனாளிக்கும் எல்லா இடங்களில் முன்னுரிமை என்ற விளம்பரம் அரசு சட்டம் . அதில் பழகிபோய் விட்டார்கள் !
என்றைக்கு பொது இடங்களில் வெக்கமே இல்லாமல் "அசிங்கம்" செய்வதை நிறுத்துகிறார்களோ, அன்று தான் உண்மையான மனித நேயம் இந்தியாவில் தழைக்கும்.... கவலையுடன் - சலீம்பாட்ஷா...!