Tuesday, September 30, 2008

பத்து வயதில் ....

"முரளி, இனிமேல் நீ School க்கு வரவேமாட்டியா டா"

"வரமாட்டேன் டா"...."எனக்கு எங்கேயும் வேலை கிடைக்கலையே, அதுவே கஷ்டமா இருக்கு"

"நீ வேலைக்கெல்லாம் போக வேணாம் டா, school க்கே வந்து சேர்ந்துடு டா"

"வீட்டுல காசே இல்லையே டா விமல் , எங்க அப்பா இருந்த வரைக்கும் நானும் என் தங்கச்சி பாப்பாவும் நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்னு சொல்லுவாரு, அப்பா செத்துபோனப்ப, "அப்பா செத்து போய்ட்டாரு முரளி, அவரு சம்பாதிச்சதால, நாம சாப்பிட்டுகிட்டு ஒண்டு குடித்தனம் பண்ணினோம் ..இனிமேல் காசு கொண்டுவர அப்பா இல்லையே டா...." அம்மா என்ன கட்டிபிடிச்சு அழுதத நீயே பார்த்தியே டா"

"உங்க அம்மா தான் வீட்டு வேலைக்கு போறாங்களே டா, நீயும் தங்கச்சி பாப்பாவும் school க்கு வந்துடுங்க"

"அம்மாவுக்கு வர சம்பளம் சாப்பாட்டுக்கு தான்டா போதுமானதா இருக்கும் ..வீட்டு வாடகையெல்லாம் அம்மா கடன் சொல்லிருக்கு....."

"ஹ்ம்ம் தங்கச்சி என்னடா பண்ணுது"

"நம்ம maths miss வீட்டுல வேலை பார்க்குது "

"அதுக்கு வேலையே தெரியாதேடா"

"ஆமாடா பாவம், miss school க்கு போனதும் அவங்க குழந்தைய பார்த்துக்கிற வேலை "...."நான் தான் டா சும்மா இருக்கேன்....அப்பா லாரி ஓட்டின கம்பெனியில இரண்டு நாள் தான் டா வேலைக்கு போனேன் முதலாளி என்ன நல்லா நடத்தினாரு ..என்ன ஆச்சுன்னே தெரியல திடீர்னு கூப்பிட்டு நாளைல இருந்து வேலைக்கு வராதப்பான்னு சொல்லிட்டார்"

"..."

"நாளைக்கு அம்மா, அண்ணாச்சி மளிகை கடையில சேர்த்து விடறேன்னு சொல்லிச்சு டா"

"எந்த கடைடா?"

"முருகர் கோவிலுக்கு பக்கத்தில இருக்கே அந்த கடை"

"சரிடா அடுத்த வாரம் 1st term test இருக்கு, prepare பண்ணனும் நான் வீட்டுக்கு போறேன்"

"உன்கூட போட்டி போட நான்தான் இல்லையே அப்பறம் என்னடா நீ தான் 1st rank எடுப்ப :) போய் நல்லா படி"

நண்பனிடமிருந்து சோகமாய் விடைபெற்று வீட்டிற்கு சென்றான்.


விமலின் அப்பா அப்பொழுது தான் Duty முடிந்து வந்திருந்தார். மெதுவாய் அவர் அருகில் சென்றான்,

"என்ன விமல், முரளியை பார்த்தியா இன்னைக்கு"

"ஆமாப்பா"

"சொல்லு, எதையோ சொல்ல நினைக்கிற மாதிரி இருக்கு"

"அந்த Transport owner கிட்ட சொன்ன மாதிரி, முருகன் கோவில் பக்கத்தில இருக்கிற annachi கடயிலையும்முரளியை வேலைக்கு வைக்க வேணாமின்னு சொல்லணும்பா"

"முரளி அங்க வேலைக்கு போகபோறானா?"

"ஆமா நாளைக்கு அவன் அம்மா அந்த கடையில சேர்க்கபோறாங்க"

"இங்க பாரு விமல், நீ கஷ்டபடுறது எனக்கு புரியுது. அதுக்காக அவன் எங்கேயெல்லாம் வேலைக்கு போகிறானோ அங்க போய் என்னோட sub-inspector அதிகாரத்தை வைச்சு பேச முடியாது. இந்த ஊரில எத்தனையோ factory, company னு சின்ன பசங்கள வேலைக்கு வெச்சிருக்காங்க. நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் இதை ஒழிக்க முடியல. சின்ன குழந்தைங்க அவங்க வீட்டு கஷ்டத்திற்காக தான் வேலைக்கு போறாங்களே தவிர, அவங்களா விருப்பப்பட்டு போகல. ஏன் உன் நண்பன் முரளி கூட அதுக்காக தான போறான்..."சரி நான் இதுக்கு ஒரு வழி சொல்றேன் கேட்கறியா?"

"சொல்லுங்கப்பா"

"எனக்கு தெரிஞ்ச அமைப்பின் மூலமா முரளி அப்பறம் அவன் தங்கையோட படிப்பு செலவுக்கு ஏற்பாடு பண்ணிடலாம். அது தவிர இருக்கிற செலவுகள நான் பார்த்துகிறேன்"..."உன் முரளி உன்கூட school க்கு வருவான், அப்பறம் நீங்க ரெண்டு பேரும் போட்டி போட்டு படிக்கலாம்"

"நிஜமாவா சொல்றீங்கப்பா :)"

"ஆமா விமல், இது நானும் உன் அம்மாவும் சேர்ந்து எடுத்த முடிவு தான், school விட்டு வந்ததும் உன்கிட்ட சொல்லனும்னு இருந்தோம், முரளியோட அம்மாவை நாளைக்கு கூட்டிட்டு வா இதை பத்தி சொல்லிடலாம்"

"இப்பவே கூட்டிட்டு வரேன், சொல்லிடுங்க" என்று நிற்காமல் முரளியின் வீட்டிற்கு ஓடினான் விமல்.

சமுதாய சீர்கேடுகளை ஒவ்வொரு தனி மனித முயற்சியின் மூலம் திறுத்தலாம் என்கிற சிறு நம்பிக்கை தான் இச்சிறுகதை

Friday, September 12, 2008

பாட்டி சொன்ன கதை..

ஒரு ஊரில ஒரு ராஜா இருந்தாராம் (எப்படி நம்ம startup) . அவருக்கு நிறைய நாள் குழந்தை செல்வம் இல்லாததால மனமுடைந்து கஷ்டப்பட்டாராம். ஒரு நாள் அவர் காட்டிற்கு செல்லும்போது ஒரு முயல் அடிபட்டு கிடந்துதாம், அதை பார்த்த ராஜாஅந்த முயலுக்கு மூலிகை இலைய அரைச்சு ஊத்தி குணப்படுத்தினாராம். திடீர்னு அந்த முயல் அழகிய தேவதையா உருவெடுத்ததாம். அதிசயப்பட்ட ராஜா, அந்த தேவதை சாப விமோசனம் அடைந்த கதைய கேட்டு தெரிஞ்சுகிட்டாரம். Asusual அந்த தேவதை என்ன வரம் வேண்டும் என கேட்க. நம்ம ராஜா என்ன கேட்டிருப்பார், வேறென்ன குழந்தயைதான். அந்த தேவதையும் "உனக்கு அழகிய பெண் குழந்தை பிறக்கும்" என வரம் தந்து மறைந்ததாம் .

தேவதை வரத்தின் படியே ராஜாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்ததாம். நிறைய நாள் கழித்து பிறந்ததினாலும், அவ்வளவு பெரிய ராஜாங்கத்திற்கு ஒற்றை வாரிசு என்பதினாலும், அனைவராலும் சீரும் சிறப்புமாக வளர்க்கபெற்றாள்

தன் மகள் திருமண வயதை அடைந்துவிட்டாள் , தகுந்த இடத்தில் வரன் பார்க்குமாறு ராணி ராஜாவிடம் கூறினாளாம். தனக்கு இருப்பது ஒரே மகள், தனக்குப்பின் தன் நாட்டை ஆள்கிற பொறுப்பும் தன் மருமகப்பிள்ளையையே சேரும் என்பதால், சுற்று வட்டாரத்தையே புரட்டிப்போட்டு மாப்பிள்ளையை தேடினாராம் ராஜா.

தான் தேர்ந்தெடுத்த இளவரசர்கள், ராஜாக்கள் அனைவரையும் அழைத்து பெரிய அளவில் சுயம்வரம் நடத்தினாராம். தன் மகளிடம் மாலையை கொடுத்து சுயம்வர திடலுக்கு அழைத்து வந்தாராம். இளவரசி மாலையுடன் நடந்து வந்த அழகைப்பார்த்து அனைவரும் மயங்கிப்போனார்களாம்.

இளவரசி தனக்கே மாலைடவேண்டுமென ஒவருவரும் மனதிற்குள்ளே பிராத்தனையே நடத்தினராம். இளவரசி விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களுடன் தேர் போல மெல்ல நடந்து ஒவ்வரு அரசனையும், இளவரசனையும் பார்வையிட்டாளாம். திடலில் கூடியிருந்த ஊர் மக்கள் அனைவரும் தங்களுக்கு வரப்போகும் புது அரசன் யார் என மிகுந்த ஆர்வத்தோடு பார்த்திருந்தனராம்.

ஆனால் இளவரசியோ வந்திருந்த யாரையும் பிடிக்காதலால் மாலையுடன் அப்படியே அவளுடைய அறைக்கு சென்றுவிட்டாளாம். வந்திருந்த அனைவரும் வருத்தத்தோடு சென்றுவிட்டனராம்

மிகவும் செல்லமாக வளர்த்த பெண் என்பதால் ராஜா கோபம் கொள்ளாமல் அதே போல் மற்றுமொரு சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தாராம். அதிலும் இளவரசிக்கு யாரையும் பிடிக்கவில்லை. இருந்தாலும் ராஜா சோர்வாகாமல் தன் மகளுக்கு பிடித்தவாறு மணமகனை தேடிக்கொண்டே இருந்தாராம்.

நாட்கள் செல்ல செல்ல ராஜா நோய்வகபட்டு படுக்கையில் விழுந்தாராம், தான் இறந்துவிடப்போகிறோம் என அறிந்து இளவரசியை அழைத்து அவளுக்கு திருமணம் ஆகாதது குறித்தும், தனக்கு பின் தன் நாட்டை ஆள்வது யார் என்பதை பற்றியும் கவலை தெரிவித்தாராம்.

தந்தை மரணப்படுக்கையில் துன்பப்படுவதை பார்த்த இளவரசி, தனக்கு திருமண ஆகும் வரை தானே நாட்டை ஆள்வதாக ராஜாவிடம் வாக்கு கொடுத்தாளாம். இறக்கும் தருவாயில், தெற்கே சோமனாதபுரத்தை ஆள்கிற மயிலவாணன் என்கிற இளவரசர் வருவார் என்றும், இளவரசிக்கு பிடித்த்ருந்தால் அவரை திருமணம் புரிந்து நீடூடி வாழ்க எனக்கூறி கண் மூடினாராம்.

அதன்பின் இளவரசி ஆட்சிப்பொறுப்பை ஏற்று திறம்பட செயலாற்றினாளாம். ஒரு நாள் சோமநாதபுர அரசர் ராணியை காணவந்திருக்கிறார் என காவலாளியிடமிருந்து செய்திவந்ததாம் ..

அப்பறம் அப்பறம் ....

அப்பறம் தான் நான் தூங்கிட்டேனே :)))