Friday, September 12, 2008

பாட்டி சொன்ன கதை..

ஒரு ஊரில ஒரு ராஜா இருந்தாராம் (எப்படி நம்ம startup) . அவருக்கு நிறைய நாள் குழந்தை செல்வம் இல்லாததால மனமுடைந்து கஷ்டப்பட்டாராம். ஒரு நாள் அவர் காட்டிற்கு செல்லும்போது ஒரு முயல் அடிபட்டு கிடந்துதாம், அதை பார்த்த ராஜாஅந்த முயலுக்கு மூலிகை இலைய அரைச்சு ஊத்தி குணப்படுத்தினாராம். திடீர்னு அந்த முயல் அழகிய தேவதையா உருவெடுத்ததாம். அதிசயப்பட்ட ராஜா, அந்த தேவதை சாப விமோசனம் அடைந்த கதைய கேட்டு தெரிஞ்சுகிட்டாரம். Asusual அந்த தேவதை என்ன வரம் வேண்டும் என கேட்க. நம்ம ராஜா என்ன கேட்டிருப்பார், வேறென்ன குழந்தயைதான். அந்த தேவதையும் "உனக்கு அழகிய பெண் குழந்தை பிறக்கும்" என வரம் தந்து மறைந்ததாம் .

தேவதை வரத்தின் படியே ராஜாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்ததாம். நிறைய நாள் கழித்து பிறந்ததினாலும், அவ்வளவு பெரிய ராஜாங்கத்திற்கு ஒற்றை வாரிசு என்பதினாலும், அனைவராலும் சீரும் சிறப்புமாக வளர்க்கபெற்றாள்

தன் மகள் திருமண வயதை அடைந்துவிட்டாள் , தகுந்த இடத்தில் வரன் பார்க்குமாறு ராணி ராஜாவிடம் கூறினாளாம். தனக்கு இருப்பது ஒரே மகள், தனக்குப்பின் தன் நாட்டை ஆள்கிற பொறுப்பும் தன் மருமகப்பிள்ளையையே சேரும் என்பதால், சுற்று வட்டாரத்தையே புரட்டிப்போட்டு மாப்பிள்ளையை தேடினாராம் ராஜா.

தான் தேர்ந்தெடுத்த இளவரசர்கள், ராஜாக்கள் அனைவரையும் அழைத்து பெரிய அளவில் சுயம்வரம் நடத்தினாராம். தன் மகளிடம் மாலையை கொடுத்து சுயம்வர திடலுக்கு அழைத்து வந்தாராம். இளவரசி மாலையுடன் நடந்து வந்த அழகைப்பார்த்து அனைவரும் மயங்கிப்போனார்களாம்.

இளவரசி தனக்கே மாலைடவேண்டுமென ஒவருவரும் மனதிற்குள்ளே பிராத்தனையே நடத்தினராம். இளவரசி விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களுடன் தேர் போல மெல்ல நடந்து ஒவ்வரு அரசனையும், இளவரசனையும் பார்வையிட்டாளாம். திடலில் கூடியிருந்த ஊர் மக்கள் அனைவரும் தங்களுக்கு வரப்போகும் புது அரசன் யார் என மிகுந்த ஆர்வத்தோடு பார்த்திருந்தனராம்.

ஆனால் இளவரசியோ வந்திருந்த யாரையும் பிடிக்காதலால் மாலையுடன் அப்படியே அவளுடைய அறைக்கு சென்றுவிட்டாளாம். வந்திருந்த அனைவரும் வருத்தத்தோடு சென்றுவிட்டனராம்

மிகவும் செல்லமாக வளர்த்த பெண் என்பதால் ராஜா கோபம் கொள்ளாமல் அதே போல் மற்றுமொரு சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தாராம். அதிலும் இளவரசிக்கு யாரையும் பிடிக்கவில்லை. இருந்தாலும் ராஜா சோர்வாகாமல் தன் மகளுக்கு பிடித்தவாறு மணமகனை தேடிக்கொண்டே இருந்தாராம்.

நாட்கள் செல்ல செல்ல ராஜா நோய்வகபட்டு படுக்கையில் விழுந்தாராம், தான் இறந்துவிடப்போகிறோம் என அறிந்து இளவரசியை அழைத்து அவளுக்கு திருமணம் ஆகாதது குறித்தும், தனக்கு பின் தன் நாட்டை ஆள்வது யார் என்பதை பற்றியும் கவலை தெரிவித்தாராம்.

தந்தை மரணப்படுக்கையில் துன்பப்படுவதை பார்த்த இளவரசி, தனக்கு திருமண ஆகும் வரை தானே நாட்டை ஆள்வதாக ராஜாவிடம் வாக்கு கொடுத்தாளாம். இறக்கும் தருவாயில், தெற்கே சோமனாதபுரத்தை ஆள்கிற மயிலவாணன் என்கிற இளவரசர் வருவார் என்றும், இளவரசிக்கு பிடித்த்ருந்தால் அவரை திருமணம் புரிந்து நீடூடி வாழ்க எனக்கூறி கண் மூடினாராம்.

அதன்பின் இளவரசி ஆட்சிப்பொறுப்பை ஏற்று திறம்பட செயலாற்றினாளாம். ஒரு நாள் சோமநாதபுர அரசர் ராணியை காணவந்திருக்கிறார் என காவலாளியிடமிருந்து செய்திவந்ததாம் ..

அப்பறம் அப்பறம் ....

அப்பறம் தான் நான் தூங்கிட்டேனே :)))

42 comments:

JSTHEONE said...

Enna koduma sir idhu :-) nalla thaan kilapureenga build up ah :-) nalla yethi iruki vittuteengale..

http://urupudaathathu.blogspot.com/ said...

மொக்கை குழு தங்களை அன்புடன் வரவேற்கிறது..

தோழி said...

Sema Mokkai. Ipdiye ezuthunga. punniyama pogum ungalukku

தோழி said...

Sema Mokkai. Ipdiye ezuthunga. punniyama pogum ungalukku

http://urupudaathathu.blogspot.com/ said...
This comment has been removed by the author.
http://urupudaathathu.blogspot.com/ said...

வருக வருக...
வந்து இதே போல பல மொக்கைகள் தருக

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

நன்றாக தான் எழுதியுள்ளீர்கள் !
ஏன் பாதியிலேயே விட்டு விட்டீர்கள் ?
அன்புடன்
பாஸ்கர்

MSK / Saravana said...

சரி. விடுங்க.. நாங்களும் போய் தூங்கறோம் இப்போ..

நீங்க மிச்ச கதையை நாளைக்கு சொல்லுங்க..
:))

MSK / Saravana said...

சரி. விடுங்க.. நாங்களும் போய் தூங்கறோம் இப்போ..

நீங்க மிச்ச கதையை நாளைக்கு கேட்டு சொல்லுங்க..
:))

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அய்யோ அய்யோ...

தாங்க முடியல சாமியோவ்....

http://urupudaathathu.blogspot.com/ said...

மொக்கை பல எழுதி இந்த தமிழ் சங்கத்தை வளர்க்குமாறு கேட்டு "கொல்ல" படுகிறது

Vapurdha said...

// JSTHEONE said...
Enna koduma sir idhu :-) nalla thaan kilapureenga build up ah :-) nalla yethi iruki vittuteengale..//

கொஞ்சம் Terror ஆ பதிவ போடலாம்ன்னு தான் :)

Vapurdha said...

// உருப்புடாதது_அணிமா said...
மொக்கை குழு தங்களை அன்புடன் வரவேற்கிறது..//

தங்கள் அழைப்பிற்கு மிக்க நன்றி

Vapurdha said...

// தோழி said...
Sema Mokkai. Ipdiye ezuthunga. punniyama pogum ungalukku//

உங்களுக்காகவே இப்படியே எழுதறேன் :)

Vapurdha said...

// ARUVAI BASKAR said...
நன்றாக தான் எழுதியுள்ளீர்கள் !
ஏன் பாதியிலேயே விட்டு விட்டீர்கள் ?
அன்புடன்
பாஸ்கர்//

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி :)

Vapurdha said...

// Saravana Kumar MSK said...
சரி. விடுங்க.. நாங்களும் போய் தூங்கறோம் இப்போ..

நீங்க மிச்ச கதையை நாளைக்கு சொல்லுங்க..
:))//

:))))

Vapurdha said...

// சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
அய்யோ அய்யோ...

தாங்க முடியல சாமியோவ்....//

:))))

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி :)

Vapurdha said...

// உருப்புடாதது_அணிமா said...
மொக்கை பல எழுதி இந்த தமிழ் சங்கத்தை வளர்க்குமாறு கேட்டு "கொல்ல" படுகிறது//

கண்டிப்பா!!! நீங்க சொல்லி செய்யாம இருப்போமா ??

Anonymous said...

//ஒரு ஊரில ஒரு ராஜா இருந்தாராம் (எப்படி நம்ம startup) . //

ஆஹா அட்வஞ்சரா?
வாவாவாவ்வ்வ்

Anonymous said...

//அதை பார்த்த ராஜாஅந்த முயலுக்கு மூலிகை இலைய அரைச்சு ஊத்தி குணப்படுத்தினாராம். //

அந்த ராஜா blue cross member ஆக இருந்திருப்பாரோ?

Anonymous said...

//அதிசயப்பட்ட ராஜா, அந்த தேவதை சாப விமோசனம் அடைந்த கதைய கேட்டு தெரிஞ்சுகிட்டாரம்.//

அதையே ப்ளாஷ்பேக்கா போடலாமே!!! ஹிஹி

Anonymous said...

//இளவரசி மாலையுடன் நடந்து வந்த அழகைப்பார்த்து அனைவரும் மயங்கிப்போனார்களாம்.//

அதுசரி மயங்குனா எப்படி மாலைய போடரது??
அதா போடல!!!

Anonymous said...

//ஆனால் இளவரசியோ வந்திருந்த யாரையும் பிடிக்காதலால் மாலையுடன் அப்படியே அவளுடைய அறைக்கு சென்றுவிட்டாளாம்.//

ஆக்ஷிவலி அவங்க என்னதா தேடியிருக்காங்கனு நினைக்கிறேன்.
ச்சி மிஸ்ஸாச்சே!!!

Anonymous said...

//அதன்பின் இளவரசி ஆட்சிப்பொறுப்பை ஏற்று திறம்பட செயலாற்றினாளாம். ஒரு நாள் சோமநாதபுர அரசர் ராணியை காணவந்திருக்கிறார் என காவலாளியிடமிருந்து செய்திவந்ததாம் ..//

ஆட்சிப்பொறுப்பை ஏற்று திறம்பட நடத்தி வர்ரதுனா கிட்டத்தட்ட ஒரு 10 வருடம் போயிருக்குமா?
இப்ப அந்தாளு வந்துதா என்னத்த கிழிக்கப்போறாருனுதானே துங்கிட்டீங்க??

Anonymous said...

ஆனாலும் செம மொக்கை!!!
மொக்கை வரலாற்றில் உங்களுக்கென ஒரு இடம் கண்டிப்பாக இருக்கும்!!!
ஹிஹி

Vapurdha said...

//// hisubash said...
//ஆனால் இளவரசியோ வந்திருந்த யாரையும் பிடிக்காதலால் மாலையுடன் அப்படியே அவளுடைய அறைக்கு சென்றுவிட்டாளாம்.//

ஆக்ஷிவலி அவங்க என்னதா தேடியிருக்காங்கனு நினைக்கிறேன்.
ச்சி மிஸ்ஸாச்சே!!!////

Next indha madhiri story na, ungalukku dhan first invitation :)

Vapurdha said...

//// hisubash said...
//அதன்பின் இளவரசி ஆட்சிப்பொறுப்பை ஏற்று திறம்பட செயலாற்றினாளாம். ஒரு நாள் சோமநாதபுர அரசர் ராணியை காணவந்திருக்கிறார் என காவலாளியிடமிருந்து செய்திவந்ததாம் ..//

ஆட்சிப்பொறுப்பை ஏற்று திறம்பட நடத்தி வர்ரதுனா கிட்டத்தட்ட ஒரு 10 வருடம் போயிருக்குமா?
இப்ப அந்தாளு வந்துதா என்னத்த கிழிக்கப்போறாருனுதானே துங்கிட்டீங்க??////

Exactly.... naanum ilavarasikku kalyaanam nadakkum nadakkum nu wait pannen adhu onnum nadakara madhri theriyala :) adhan silent a thoooooongitten

Vapurdha said...

// hisubash said...
ஆனாலும் செம மொக்கை!!!
மொக்கை வரலாற்றில் உங்களுக்கென ஒரு இடம் கண்டிப்பாக இருக்கும்!!!
ஹிஹி//

அந்த இடத்தை பிடிக்கத்தான் இவ்வளவு BUILD UP, success நான் ஜெய்சுட்டேன் :))))

Vapurdha said...

//// hisubash said...
//அதிசயப்பட்ட ராஜா, அந்த தேவதை சாப விமோசனம் அடைந்த கதைய கேட்டு தெரிஞ்சுகிட்டாரம்.//

அதையே ப்ளாஷ்பேக்கா போடலாமே!!! ஹிஹி////

:))

Anonymous said...

//
Next indha madhiri story na, ungalukku dhan first invitation :)//

romba nanringa :)

Anonymous said...

//அந்த இடத்தை பிடிக்கத்தான் இவ்வளவு BUILD UP, success நான் ஜெய்சுட்டேன் :))))//

இதுக்கு பதிலா,
” அம்மாமாமா, நா பாஸாயிட்டன்ன்ன்ன்ன்ன்ன்” னுடு ஓடிருக்கலாம்
:)

க விக்னேஷ் said...

மொக்க தாங்க முடியல.... வலிக்குது.... ஷபா....

எப்பிடிங்க.... எப்பிடி முடியுது உங்களால மட்டும்....

Vapurdha said...

//// hisubash said...
//அந்த இடத்தை பிடிக்கத்தான் இவ்வளவு BUILD UP, success நான் ஜெய்சுட்டேன் :))))//

இதுக்கு பதிலா,
” அம்மாமாமா, நா பாஸாயிட்டன்ன்ன்ன்ன்ன்ன்” னுடு ஓடிருக்கலாம்
:)///

:)) neenga solradhu old style..

Vapurdha said...

// க விக்னேஷ் said...
மொக்க தாங்க முடியல.... வலிக்குது.... ஷபா....

எப்பிடிங்க.... எப்பிடி முடியுது உங்களால மட்டும்....//

:)) எல்லாம் தானா வருது, ஏதோ என்னால முடிந்த சமூக சேவை ..

MSK / Saravana said...

ஹலோ.. எங்கே ஆளையே காணோம்??

மழைகாலம் எப்போது தொடரும்??

MSK / Saravana said...

ஹலோ.. எங்கே ஆளையே காணோம்??

மழைகாலம் எப்போது தொடரும்??

MSK / Saravana said...

ஹலோ.. எங்கே ஆளையே காணோம்??

மழைகாலம் எப்போது தொடரும்??

http://urupudaathathu.blogspot.com/ said...

எங்க ரெம்ப நாளா ஆள காணும்??
பதிவு ஒன்னும் போடலையா ??



((())))பாட்டி இன்னொரு கதை சொல்லுங்க ((())

Vapurdha said...

// உருப்புடாதது_அணிமா said...
எங்க ரெம்ப நாளா ஆள காணும்??
பதிவு ஒன்னும் போடலையா ??



((())))பாட்டி இன்னொரு கதை சொல்லுங்க ((())
//

போட்டாச்சு போட்டாச்சு !!! :))

Vapurdha said...

// Saravana Kumar MSK said...
ஹலோ.. எங்கே ஆளையே காணோம்??

மழைகாலம் எப்போது தொடரும்??//

கொஞ்சம் BC அதான் இந்த பக்கம் வரமுடியல ...

விரைவில் மழைகாலம் IV வரும் :)).. உங்கள் எதிர்பார்பிற்கு மிக்க நன்றி MSK

Unknown said...

eppo vilippeenga!!!????

Vapurdha said...

// Saravana said...
eppo vilippeenga!!!????//

:) :)