Tuesday, September 2, 2008

கிறுக்கல்கள் !!

தொடர் பதிவு போடுவது சிறிது கால தாமதம் ஆகுமென நினைக்கிறேன் (நிஜமாகவே ஆபீஸ் ல கொஞ்சம் பிஸி...... OB அடிச்சு பதிவு எழுத முடியாத நிலை)

அதற்காக இந்த சும்மா பதிவு ..... (கொஞ்சம் பொறுத்துக்கோங்க :)))))

ரசனை ...

ரசிக்கவே தோன்றுகிறது விளைவுகளை பற்றி எண்ணாமல் ..
எனக்காகவே சிலவற்றை நீ செய்வதும்
உனக்காகவே சிலவற்றை நான் செய்வதும்
ரசிக்கவே தோன்றுகிறது..
........................................................................

உன்னை பிரிந்தேனே !!

இரவும் எனக்கு பகலாகிப்போகும் என நினைக்கவில்லை
உன்னை பார்க்காத வரை ..
உன்னிடம் இருந்து விலகிய பின்பு ...
என் இரவுகள் அனைத்தும் நிரந்தரமாக பகலாகிப்போனதே !!

...........................................................

கண்ணீர் !!

நீ என்னை பிரியும் வேளையில்
அதை காண முடியாமல் செய்த
கண்ணீருக்கு நன்றி கூறுகிறேன் !!
..............................................................................

உன் பிரிவில் ....

எனக்கும் கவிதை எழுதத்தெரியுமென
கற்றுக்கொடுத்தாய் !!
நான் எழுதிய கவிதைகளை
நானே மறந்தாலும் நீ எனக்கு
நினைவுபடுத்தினாய் !!
இதை பற்றி எழுது அதை பற்றி எழுது
என ஊக்கப்படுதினாய் !!
நான் எப்பொழுதும் உன்னை பற்றியே
கவிதை எழுத வேண்டுமென
என்னை பிரிந்தாயோ ??


18 comments:

Anonymous said...

//இரவும் எனக்கு பகலாகிப்போகும் என நினைக்கவில்லை
உன்னை பார்க்காத வரை ..
உன்னிடம் இருந்து விலகிய பின்பு ...
என் இரவுகள் அனைத்தும் நிரந்தரமாக பகலாகிப்போனதே !!//

டச்சிங்கா இருக்கு.

ஃஃஃ
நீ என்னை பிரியும் வேலையில்
ஃஃஃஃ

இங்கு ”வேலையில்” என்பது ”வேளையில்” என்றா எழுதினீர்கள்?
தவறாக சொல்லியிருந்தா மன்னிக்கவும்.

OB என்னா என்ன????

Anonymous said...

மீ த பஷ்டுனு நினைக்கிறேன்.!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

///நான் எப்பொழுதும் உன்னை பற்றியே
கவிதை எழுத வேண்டுமென
என்னை பிரிந்தாயோ ??///

அருமையான வரிகள்..
அனைத்து கவிதைகளுமே அருமை..
மனதில் நிற்கும் எழுத்து நடை..

JSTHEONE said...

enna busy ah iruken solli ippadi kavidhai polinchuteengale.... awesome....

situation ellame super.... g8 narration..kalakunga

neraya ethirpaakurom

Vapurdha said...

//இங்கு ”வேலையில்” என்பது ”வேளையில்” என்றா எழுதினீர்கள்?
தவறாக சொல்லியிருந்தா மன்னிக்கவும்.
//

கண்ணீர் கண்ணை மறைத்ததினால் எழுத்து தவறிவிட்டது .. சுட்டியதற்கு நன்றி

OB என்ன தெரியாதா ??

:) நீங்க தான் First...

Vapurdha said...

//அருமையான வரிகள்..
அனைத்து கவிதைகளுமே அருமை..
மனதில் நிற்கும் எழுத்து நடை..//


மிக்க நன்றி :)

Vapurdha said...

//enna busy ah iruken solli ippadi kavidhai polinchuteengale.... awesome....

situation ellame super.... g8 narration..kalakunga//

:) Thank you for d comment..

//neraya ethirpaakurom//

Sure will give my best

Anonymous said...

\\கிறுக்கல் அல்ல செதுக்கல்//\

Vapurdha said...

//கிறுக்கல் அல்ல செதுக்கல்//

உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி மணி ....

Vishnu... said...

உங்கள் கிறுக்கல்களை படித்து இல்லை
இப்போது தான் படிக்கிறேன் ...
உருப்படாதவர் அவர்கள்
வலைதளம் மூலம் இங்கு வந்தேன் ...
கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்..

கிறுக்கல்கள் என்று சொல்லி நீங்கள் எழுதிய கவிதைகள் மிக அருமை ..


எல்லாம் அனுபவித்து
எழுதியவை என்று தெரிகிறது
எளிமையாக இருந்தாலும் ..
உள்மனதின் வார்த்தைகள்
என புரிகிறது... அதில்
உயிரோட்டமும் தெரிகிறது ..

கவலைகளை
கவிதைகளில் கரையுங்கள் ...
காலம்
உங்களை கரைசேர்க்கும் ...


என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ...

Vapurdha said...

//உங்கள் கிறுக்கல்களை படித்து இல்லை
இப்போது தான் படிக்கிறேன் ...
உருப்படாதவர் அவர்கள்
வலைதளம் மூலம் இங்கு வந்தேன் ...//

வருகைக்கு மிக்க நன்றி !!

Vapurdha said...

//கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்..

கிறுக்கல்கள் என்று சொல்லி நீங்கள் எழுதிய கவிதைகள் மிக அருமை ..//

நான் கவதை என்கிற பெயரில் கிறுக்கிட்டு இருக்கேங்க .. என்னையும் பாராட்டியதற்கு நன்றி !!

Vapurdha said...

//எல்லாம் அனுபவித்து
எழுதியவை என்று தெரிகிறது
எளிமையாக இருந்தாலும் ..
உள்மனதின் வார்த்தைகள்
என புரிகிறது... அதில்
உயிரோட்டமும் தெரிகிறது ..//

:))

Vapurdha said...
This comment has been removed by the author.
Anonymous said...

//நான் கவதை என்கிற பெயரில் கிறுக்கிட்டு இருக்கேங்க ..//
கிறுக்கிதா கண் கலங்கியதா?

இப்படி சொன்ன பிறகு திரும்ப வாசிக்க ஒரு மாதிரியா ஆகிட்டுது.

OB னா என்ன??????????????????

Vapurdha said...

//// hisubash said...
//நான் கவதை என்கிற பெயரில் கிறுக்கிட்டு இருக்கேங்க ..//
கிறுக்கிதா கண் கலங்கியதா?

இப்படி சொன்ன பிறகு திரும்ப வாசிக்க ஒரு மாதிரியா ஆகிட்டுது.////

இது எனக்கு புரியல, நான் கவிதைய கவதை ன்னு தப்பா குறிப்பிட்டதற்கா ??

Vapurdha said...

//OB னா என்ன??????????????????//


ஆபீஸ் ல தலைக்கு மேல வேலை இருந்தாலும், அதையெல்லாம் மதிக்காம நம்ம வேலைய சைடுல பார்க்கறது இல்ல சும்மா இருக்கறதைதான் OB ன்னு சொல்லுவாங்க. இது எப்படி பழக்கத்தில வந்ததுநெல்லாம் தெரியாது. ஆனா OB means Organizational Behaviour.

யாரோ said...

அனைத்து கவிதைகளுமே அருமை.வாழ்த்துக்கள் ...நானும் ஒரு வலைபூ வளர்க்கிறேன்
பாருங்களேன் ...valaikkulmazhai.wordpress.com
-கார்த்தி