Saturday, September 6, 2008

உனை யாம் அறியேன் ம‌ன‌மே! - மழைக்காலம் III

மழைக்காலம் I


மழைக்காலம் II

"தீனா அங்க பாரு டா, ஒரு பொண்ணு உன்னையே பார்த்துட்டு இருக்கா.."

"எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் ஏன்டா வம்புக்கு இழுக்கற"

"இல்ல டா உன்னையே உத்து உத்து பார்த்துட்டு இருக்கா, நீ பாரு உனக்கு தெரிஞ்ச பொண்ணா இருக்கப்போகுது"

"பேசமா சாப்பிடு பாலா , ஒரு Burger a இரண்டு மணி நேரமா வைச்சுகிட்டு இருக்க. இதுக்கு தான் உன்கூட இங்கெல்லாம் வரக்கூடாது"

"டேய் அந்த பொண்ணு நம்ம டேபிள் கிட்ட வரா டா"

"........."

அந்த பெண் வந்து தீனாவிற்கு அருகே உள்ள சேரில் அமர்ந்தாள் ..

"Excuse me, Im Sharon .. உங்களுக்கு என்ன நியாபகம் இருக்கா?"
....................

"எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு, .............but Im not able to recall"

"நான் Satyam ல work பண்றேன், என் வீடு அயனாவரமில் தான் இருக்கு ... அயனாவரம் சிக்னல் ல காலைல ஏழு மணிக்கு என்னோட CAB ல ஏறுவேன்..உங்க CAB உம் அதே timing தான...ஞாபகம் வரலையா, என்னோட friend உமாவையாவது ஞாபகம் இருக்கா?

விருட்டென்று மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது தீனாவிற்கு, போன வருடம் இதே மழைக்காலத்தில் பத்து நாள் தேவதை போல தோன்றி சிலுவையில் அறைந்துவிட்டு சென்றாளே. இன்னும் அந்த மாற்றம் என்னுள்ளே இருக்கிறதே எப்படி மறப்பேன் அவளை. தான் நிதானமிழந்து போவதை வெளிக்காட்டாமல் சுதாரித்துக்கொண்டான்.

" ஆ ... ஆமா ஞாபகம் இருக்கு, நீங்களும் உங்க friend உம் CAB க்கு வெயிட் பண்ணுவீங்க , பார்த்திருக்கேன். .......பரவைல்லையே நீங்க என்னை நல்லா ஞாபகம் வைச்சுருக்கீங்க :)"

"நான் மட்டுமா, உமாவும்தான் ...."

என்ன சொல்கிறாள் இவள். வேறொருவனோடு திருமணம் முடித்து சென்றவள் என்னை ஏன் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்..

"எனக்கு புரியல, நீங்க என்ன சொல்லறீங்கன்னு"

"நான் பண்ணின ஒரு கலட்டாவால தான் இந்த நிலைமை, ஹ்ம்ம் கேட்க மறந்துட்டேன்....உங்க பேரு என்ன?"

"தீனா...தினகரன்"

"தீனா, கடைசியா நீங்க என்கிட்ட பேசினது ஞாபகம் இருக்கா, நான் கூட உமாவுக்கு கல்யாணம்னு சொன்னேனே"


மெல்லிய புன்னகையோடு, "சொல்லுங்க ஞாபகம் இருக்கு"

"Actual எ நான் அன்னைக்கு சும்மா விளையாட தான் அப்படி பொய் சொன்னேன் ..... "


"பொய்யா ?? அப்படின்னா அவங்களுக்கு கல்யாணம் நடக்கலையா?"

"இல்லை, அதோட ஒரு பெரிய உண்மை அவ இன்னும் உங்களை தான் நெனைச்சுட்டு இருக்கா "

"................"

"என்னங்க சொல்றீங்க, எனக்கு குழப்பமா இருக்கு ....please கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க "

"ஆமா தீனா, உமா உங்களை தான் நெனைச்சுட்டு இருக்கா. நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்துகறீங்க, ரெண்டு பேருக்குமே பிடிச்சுருக்குன்னு எனக்கு தெரியும். அவ காய்ச்சலுக்காகத்தான் leave போட்டிருந்தா. அன்னைக்கு நீங்க வந்து அவளை பத்தி கேட்டதும், உங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கத்தான் அவளுக்கு கல்யாணம்ன்னு சும்மா சொன்னேன். ஆனா உங்களை அதுக்கப்பறம் பார்க்கவே முடியல, உங்களோட பேர் தெரியாததுனால எங்களால கண்டுபிடிக்க முடியல. உமா அப்படி upset ஆகிடுவான்னு நான் எதிர்பார்கல. கொஞ்ச நாள்ல அவ சரியாகிடுவான்னு நினைச்சேன், ஆனா அவ கடந்த ஒரு வருஷமா அவங்க வீட்ல பார்க்கிற alliance எல்லாம் வேணாம்ன்னு சொல்லிட்டு இருக்கா. எனக்கு அவ கிட்ட பேசறதுக்கே ஒரு மாதிரி இருக்கு, எல்லாம் என்னாலதானோ ங்கிற Guilty ஆ பீல் பண்றேன்.

உங்களை பார்த்தது எனக்கு அவ்வளவு பெரிய shock, நான் உங்களை பார்ப்பேன்னு சத்தியமா எதிர்பார்கலை. ............என்ன ஏதோ யோசிச்சுட்டு இருக்கீங்க.....நீங்க அவளை மறந்துடீங்களா?? நான் உங்களை disturb பண்ணிருந்தா so sorry ...."

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல...wait பண்ணுங்க நான் வரேன்"

இந்த நிலைமையில் என்ன பேசுவதென்று தெரியாததினாலேயே தீனா அங்கிருந்து எழுந்து வெளியே வந்தான்.

பாலாவும் தீனாவை பின்தொடர்ந்தான்.

"தீனா நீ onsite போறதுக்கு முன்னாடி ஒரு பொண்ண பத்தி சொன்னியே அவளா டா"

"ஆமா...ஆனா அவ ... எனக்கு பயங்கர shock a இருக்கு டா"

"இப்ப என்ன பண்ண போற"

"தெரியல...ஆனா எனக்காக ஒரு பொண்ணு அதுவும் எனக்கு பிடிச்ச பொண்ணு காத்துகிட்டுருக்கான்னு தெரிஞ்ச அப்பறம் நான் எப்படி அவள விட முடியும்"

"என்ன டா சொல்ற அடுத்த வாரம் உனக்கு நிச்சயதார்த்தம், விளையாடாத தீனா"

"நான் அவகிட்ட first பேசணும்"

"அறிவிருக்கா உனக்கு just 10days பார்த்த பொண்ணுக்காக இப்படி feel பன்றியே, think practical மச்சி. its just an infactuation அவ்வளவு தான். அந்த பொண்ணு தான் தப்பு பண்ணிட்டு இருக்கான்னா நீ அதுக்கு மேல இருக்கயே"



"உனக்கு தெரியாது டா, Its not just 10days, its something more than that. அவளும் நானும் நிறைய நாட்கள் பழகியது போல ஒரு உணர்வு. அவ்வளவு ஏன் நீ சொல்ற மாதிரி just 10days னு நான் நினைச்சுருந்தா, அவளுடைய முகம் ஏன் இன்னும் என்னுடைய நியாபகத்துல இருக்கணும், அவளை பத்தி அவ friend சொன்னதும் எனக்கு ஏன் மனசுல அப்படி ஒரு வலி வரணும்.

இதையெல்லாம் கூட விடு, நான் யாரு என்னன்னு தெரியாம இத்தனை நாள் என்னையே நினைச்சுட்டு இருந்திருக்காளே, உனக்கு புரியாது டா. Its something divine and she is born for me"

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல தீனா, ஆனா நீங்க இரண்டு பேரும் ஒன்னு சேருவது கடவுளோட சித்தம் என்றால் அதை யாராலும் மாற்ற முடியாது....சரி வா அந்த பொண்ணு wait பண்ணுறா "

"Sorry Sharon, எனக்கு கொஞ்சம் shock ஆ இருந்தது அதான் .... நான் உமாகிட்ட பேசணும், அவங்க மொபைல் நம்பர் கொடுக்கறீங்களா"

"சந்தோஷமா இருக்கு தீனா, எங்க நீங்க அவளை மறந்துடீன்களோன்னு நினைச்சேன், அவ இப்ப US இல் இருக்கா, deputation காக ஆறு மாசம் போயிருக்கா"

"US ஆ, US இல் எங்க ...."

"கலிபோர்னியா .."

இதை கேட்டதும் தீனாவிற்கு சிரிப்பு வந்தது

"ஏன் சிரிக்கறீங்க"

"நான் பத்து மாதமா அங்க தான் இருந்தேன், இந்தியா வந்து ஒரு மாதம் ஆகுது"

"அட கடவுளே அப்படியா.. நான் அவளோட நம்பர் தரேன் நீங்க பேசுங்க அப்படியே உங்க நம்பரையும் தாங்க........... எனக்கு இப்பதான் மனநிம்மதியா இருக்கு, நீங்க உமாகிட்ட பேசின அப்பறம் எனக்கு call பண்ணுங்க. I will be waiting for your call"

"கண்டிப்பா பண்றேன்..."

"சரி நான் கிளம்பறேன், Good luck :) சீக்கிரமே உங்க இரண்டு பேரையும் ஒன்னா பார்க்கணும். will pray GOD"

நிறைந்த புன்னகையோடு வழியனுப்பி வைத்தான் ....

"எப்ப தீனா அந்த பொண்ணோட பேசப்போற??" என பாலா மிகுந்த எதிர்பார்ப்புடன் கேட்டான்

"இன்னைக்கு ராத்திரி 8.30 க்கு, அதுக்கு முன்னால அம்மாகிட்ட உமாவை பத்தி சொல்லணும். நிச்சையதார்தத்தை எப்படி நிறுத்தப்போறேன்னு தெரியல, குழப்பமா இருக்கு"

"தீனா, நீ first உமாகிட்ட பேசு அதுக்கப்பறம் அம்மாகிட்ட சொல்றத பத்தியும், நிச்சையதார்தத்தை பத்தியும் யோசிக்கலாம்"

"ஏண்டா..."

"எல்லாம் காரணமாதான் சொல்றேன், over excitment ஆல நீ தப்பா எதுவும் செய்துடக்கூடாது, so first அவகிட்ட பேசு"

"ஹ்ம்ம் சரி..."

"சரி அவ கிட்ட பேசினதும், எனக்கும் call பண்ணுடா"

"Sure டா, Bye"

இரவு 8.30 ....

தீனாவின் மனது படபடத்தது, எப்படி ஆரமிப்பது, என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பிப்போயிருந்தான். இந்த தவிப்பு அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு உமாவின் நம்பருக்கு டயல் செய்தான்.

ரிங் அடிக்கிறது ..

மறுமுனையில், "ஹலோ.."

"ஹலோ... உமாவா"

"ஆமா நீங்க .."

"நான் தீனா, அயனாவரமில் இருக்கேன்....நீங்க என்னை பார்த்திருக்கீங்க. உங்களுக்கு ஞாபகம் இருக்கா.... நான் கூட ...." என்று அவன் சொல்லி முடிப்பதிற்குள்

"sorry எனக்கு அப்படி யாரையும் ஞாபகமில்ல, நான் office க்கு போய்கிட்டிருக்கேன்...அப்பறம் கூப்பிடுங்க, BYE என்று இணைப்பை துண்டித்தாள்"

எந்த இணைப்பை ?????????? (தொடரும்......)






34 comments:

MSK / Saravana said...

Me the first??

MSK / Saravana said...

அதுக்குள்ள ஒரு வருஷம் ஆயிடுச்சா??

MSK / Saravana said...

//"sorry எனக்கு அப்படி யாரையும் ஞாபகமில்ல, நான் office க்கு போய்கிட்டிருக்கேன்...அப்பறம் கூப்பிடுங்க, BYE என்று இணைப்பை துண்டித்தாள்"

எந்த இணைப்பை ?????????? (தொடரும்......)//

என்னங்க காமெடி பண்ணுறீங்களா??

இப்பதான் அந்த பொண்ணு வெயிட் பண்ணுதுன்னு சொல்லிட்டு, மறுபடியும் கொளப்புறீங்க..

MSK / Saravana said...

ஒரு வருஷம் இடைவெளி ஏன்??

கொஞ்சம் லாஜிக்கா இல்லையே..

Vapurdha said...

அடுத்த மழைக்காலத்தில கதை start பண்ணலாம்ன்னு தான் ஒரு வருட இடைவெளி .... உமாவுக்கு தீனாவோட பெயரே தெரியாதே, அதுவும் அவள் ஆபீஸ் செல்லும் அவசரத்தினால் தான் இணைப்பை துண்டித்தாள். உங்கள் எதிர்பார்ப்பை குறைத்திருந்தால் - EXCUSE ME :))))

Vapurdha said...

//Me the first??//

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி !!

JSTHEONE said...

So adhu dha part ku pullaiyaar suzhi pottu teenga.. nice flow.. interesting ah irundhuchu..kalakiteenga....

aaga moththam theena total confuse la iruppaaan....

seri paarppom eagerly awaiting for next part

Anonymous said...

நல்லாதா கொண்டு போறீங்க
வாழ்த்துக்கள்
4ம் பாகத்திற்கு வெயிட்டிங்.
(கடைசியில் ஷந்டீதோஷமான முடிவு வருமென்ற நம்பிக்கையுடன்)))

Vapurdha said...

//So adhu dha part ku pullaiyaar suzhi pottu teenga.. nice flow.. interesting ah irundhuchu..kalakiteenga....//

ரொம்ப நன்றி ... நான் கரெக்ட்ஆ கொண்டுபோறேனான்னு எனக்கே ஒரு டவுட் ... clear பண்ணிடீங்க

Vapurdha said...

//aaga moththam theena total confuse la iruppaaan....

seri paarppom eagerly awaiting for next part//

அடுத்த part ல தெளிவாகிடுவான் :))

Vapurdha said...

// hisubash said...
நல்லாதா கொண்டு போறீங்க
வாழ்த்துக்கள்
4ம் பாகத்திற்கு வெயிட்டிங்.
(கடைசியில் ஷந்டீதோஷமான முடிவு வருமென்ற நம்பிக்கையுடன்)))//

மிக்க நன்றி சுபாஷ் ....

சந்தோஷமான முடிவைக்கொடுக்க முயற்சி செய்கிறேன்

Vapurdha said...

@ Saravanan

நீங்க மழைகாலம் II தந்த தலைப்பை தான் இந்த பாகத்திற்கு வைத்துள்ளேன் ... கவனிக்கலையோ ?

http://urupudaathathu.blogspot.com/ said...

///"தீனா அங்க பாரு டா, ஒரு பொண்ணு உன்னையே பார்த்துட்டு இருக்கா.."///

என்னை யாரும் பாக்கலையே ???

http://urupudaathathu.blogspot.com/ said...

//////பத்து நாள் தேவதை போல தோன்றி சிலுவையில் அறைந்துவிட்டு சென்றாளே. /////

வார்த்தையில பூந்து விளையாடுறீங்க??

http://urupudaathathu.blogspot.com/ said...

எந்த இணைப்பை ?????????? (தொடரும்......)////////


நல்ல தான்யா வெக்குறாங்க சஸ்பென்சு ??

http://urupudaathathu.blogspot.com/ said...

அருமையான கதை...

நேரில் பார்ப்பது போன்ற உணர்வு..

வாழ்த்துக்கள்..

http://urupudaathathu.blogspot.com/ said...

தலைப்புகேற்ற கதை...

இன்னும் எத்தனை பாகங்கள் வரும் ??

http://urupudaathathu.blogspot.com/ said...

அடுத்த பாகம் என்று ரிலீஸ் ஆகும் ??

http://urupudaathathu.blogspot.com/ said...

அடுத்த பாகத்துக்கு நானும் வெயிட்டிங்..

சீக்கிரம் போடுங்க...

http://urupudaathathu.blogspot.com/ said...

சேருவாங்களா?? இல்ல பிரிஞ்சுடுவாங்களா?? ( எனக்கு மட்டும் சொல்லுங்க)))

http://urupudaathathu.blogspot.com/ said...

/////சந்தோஷமான முடிவைக்கொடுக்க முயற்சி செய்கிறேன்//////


என்னது முயற்சியா??

எதுக்கு இப்படி கொளுத்தி போடுறீங்க...


சந்தோசம் மட்டுமே என்றும் நிலைக்கும்..

http://urupudaathathu.blogspot.com/ said...

////அடுத்த part ல தெளிவாகிடுவான் :))////


ஆகலனா, ஆக்கிடுங்க

http://urupudaathathu.blogspot.com/ said...

//////ரொம்ப நன்றி ... நான் கரெக்ட்ஆ கொண்டுபோறேனான்னு எனக்கே ஒரு டவுட் ... clear பண்ணிடீங்க/////

டவுட்டே வேணாம்...

நல்ல தான் கொண்டு போறீங்க..

நல்ல முடிவாகவே முடிங்க..

புண்ணியமா போகும்

Vapurdha said...

// உருப்புடாதது_அணிமா said...
///"தீனா அங்க பாரு டா, ஒரு பொண்ணு உன்னையே பார்த்துட்டு இருக்கா.."///

என்னை யாரும் பாக்கலையே ???//

உங்க பேரு தீனாவா? :)

Vapurdha said...

// உருப்புடாதது_அணிமா said...
அருமையான கதை...

நேரில் பார்ப்பது போன்ற உணர்வு..

வாழ்த்துக்கள்..//

உங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க மகிழ்ச்சி...

Vapurdha said...

// உருப்புடாதது_அணிமா said...
தலைப்புகேற்ற கதை...

இன்னும் எத்தனை பாகங்கள் வரும் ??//

அடுத்த பாகம் கடைசி பாகம் ... :))))

Vapurdha said...

// உருப்புடாதது_அணிமா said...
அடுத்த பாகத்துக்கு நானும் வெயிட்டிங்..

சீக்கிரம் போடுங்க...//

கூடிய சீக்கிரமே போட்டுடவேண்டியது தான்

Vapurdha said...

//// உருப்புடாதது_அணிமா said...
/////சந்தோஷமான முடிவைக்கொடுக்க முயற்சி செய்கிறேன்//////


என்னது முயற்சியா??

எதுக்கு இப்படி கொளுத்தி போடுறீங்க...


சந்தோசம் மட்டுமே என்றும் நிலைக்கும்..////

இப்பவும் சொல்றேன் சந்தோஷமான முடிவைத்தர முயற்சி செய்கிறேன் :))

Vapurdha said...

// உருப்புடாதது_அணிமா said...
////அடுத்த part ல தெளிவாகிடுவான் :))////


ஆகலனா, ஆக்கிடுங்க//

நீங்க சொல்லிடீங்க, இதுக்காகவே தெளிவாக்கிடுவோம் :))))

Vapurdha said...

// உருப்புடாதது_அணிமா said...
//////ரொம்ப நன்றி ... நான் கரெக்ட்ஆ கொண்டுபோறேனான்னு எனக்கே ஒரு டவுட் ... clear பண்ணிடீங்க/////

டவுட்டே வேணாம்...

நல்ல தான் கொண்டு போறீங்க..

நல்ல முடிவாகவே முடிங்க..

புண்ணியமா போகும்//

உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி...
I will definitely give my best..

Anonymous said...

ஃஃ////அடுத்த part ல தெளிவாகிடுவான் :))////


ஆகலனா, ஆக்கிடுங்கஃஃ

ஹிஹி
கடசில உங்க கதை உங்க இஷ்டப்டி வர்றது எங்கள மாதிரி ஆளுங்கலால கெடாம பாத்துக்கோங்க.

ஆனாலும்......
தெளிவாக்கி சந்தோஷமாக முடிய வாழ்த்துக்கள்இ ஹிஹி நம்ம குணம் எப்ப நம்மள விட்டு போகும்???

Vapurdha said...

////hisubash said...
ஃஃ////அடுத்த part ல தெளிவாகிடுவான் :))////


ஆகலனா, ஆக்கிடுங்கஃஃ

ஹிஹி
கடசில உங்க கதை உங்க இஷ்டப்டி வர்றது எங்கள மாதிரி ஆளுங்கலால கெடாம பாத்துக்கோங்க.
////

உங்ககிட்ட கொஞ்சம் Carefull ஆ தான் இருக்கேன், so கதை கேடாதுன்னு நினைக்கிறேன்


////ஆனாலும்......
தெளிவாக்கி சந்தோஷமாக முடிய வாழ்த்துக்கள்இ ஹிஹி நம்ம குணம் எப்ப நம்மள விட்டு போகும்???////

:))

க விக்னேஷ் said...

Race, திரைப்படம் போல் எங்கும் ஒரே திருப்புமுனைகளாக உள்ளது.... Predictability இல்லாமல் நன்றாக Suspense ஆக உள்ளது....

Good Job....

Vapurdha said...

// க விக்னேஷ் said...
Race, திரைப்படம் போல் எங்கும் ஒரே திருப்புமுனைகளாக உள்ளது.... Predictability இல்லாமல் நன்றாக Suspense ஆக உள்ளது....

Good Job....//

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விக்னேஷ் !!

உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி ..