Saturday, August 9, 2008

மழைக்காலம் ....


நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் என்னுடன் சேர்ந்து உன்னை பார்பதற்காக ஒற்றை காலில் நிற்கின்றன. என்னுடைய CAB 8 மணிக்குத்தான் என்றாலும், உன்னை பார்ப்பதற்கென்றே 7 மணிக்கே stopping க்கு வந்துவிடுகிறேனே. என்ன ஆயிற்று எனக்கு, 10 நாட்களுக்கு முன் நீ பார்த்த பார்வைக்கு இவ்வளவு சக்தியா. கல்லூரியில் நண்பர்கள்கூறிய போது கேலி செய்தேன், நூற்றுகணக்கில் கவிதைகளை படித்தும் நம்பவில்லை, முதல் பார்வை முதல் காதல் என்பதெல்லாம் திரைப்படத்தில் commercial க்காக மட்டுமே உபயோகிக்கிறார்கள் என்று நினைத்தேன். அத்தனையும் பொய்யடா அனுபவித்து பாரடா என்று மின்னல் பார்வையை வீசினாயே. ஆயிரம் megawatt இந்த சில 100 கிராமேயுள்ள சின்ன இருதயம் தாங்குமா என்று நினத்துப்பார்தாயா !!

கவி பாட எனக்கு தெரியாது. என்னை கவிஞனாக்கி விடுவாயோ? என்னுள் நிகழும் இந்த மாற்றம் என்னை எங்கு கொண்டு செல்லும் என்று தெரியவில்லை ஆனால் இதனை அனுபவிக்கத்தோன்றுகிறது.
பெண்ணுக்குள் இத்தனை நளினமா,
Oh Gaaadd!! gashhh!! என்னும் பெண்களிலிருந்து தனித்து நிற்கிறாயே, இந்த மென்பொருள் மாயை உன்னை பிடிக்கவில்லையா??

கண்டமேனிக்கு அலையாத வகுடெடுத்து வாரிய கூந்தல், மிக நேர்த்தியான உடை, மெல்லிய புன்னகை, Friday Casual wear அன்று கூட எந்த ஆர்ப்பாடமுமில்லாத ஜீன், குர்த்தா......... கட்டிப்போட்டுவிட்டாய் என்னை.

இத்தனை நாட்கள் எப்படி உன்னை பார்க்காமல் போனேன். ஆமாம் 2-3 வருடமாக இரவு பகல் என்று பாராமல் கணினி கணினி என்று அதன் பின்னால் தானே சுற்றிக்கொண்டிருந்தேன், அன்றைக்கு நான் கால் இடரும்போது "பாத்து" என்று நீ கூறாமல் போயிருந்தால் இதுநாள் வரை சத்தியமாக உன்னை பார்த்திருக்க மாட்டேன். பெரிய மாற்றத்தை என்னுள் ஏற்படுத்திவிட்டாய். என்ன வண்ணமயமான 10 நாட்கள். ஞாயிற்றுக்கிழமைக்காக காத்துக்கிடந்த காலங்கள் போக, உன்னை காணமுடயாத ஞாயிற்றுக்கிழமையை பிடிக்கவில்லை இப்பொழுது.



அதிகாலை வானம், மலைச்சாரல் , மண் வாசனை , சாலையோர பூக்கள் , பூக்களில் படிந்திருக்கும் பனித்துளி , இந்த காளானைக்கூட ரசிக்க வைத்து விட்டாயே :)

ஏன் நீ இன்னும் வரவில்லை , உனக்கு துணையாக ஆனால் உனக்கு நேர்மாறான இந்த ultra modern girl வந்துவிட்டாளே. இன்றைக்கு நீ வரமாட்டாயோ, உன்னை காணமல் எப்படி என் நாள் தொடங்கப்போகிறது.
அவளுடைய cab சென்று விட்டது. இந்த நாள் என்னைபொருத்தவரை கருப்பு நாள்.



நாளைக்கு தானே பார்க்க முடியும், கடிகார முள் நகருவேனா என்று அடம் பிடிக்கிறது.



..........




மூன்று நாட்களாகிவிட்டதே அவளுக்கு என்ன ஆயிற்று.. அவள் தோழியிடம் கேட்கலாமா, அவள் என்ன நினைப்பாள். என்ன நினைத்துக்கொண்டால் நமக்கென்ன கேட்டுவிடலாம்

அருகில் கூட செல்லவில்லை அனால் அவளின் செண்டின் நெடி ஆளையே தூக்கியது... English ல வேற பேசணும்..

Excuse me...


yeah !!


What happened to you friend? I am not able to see her for past 3 days


Do u know her?


...


She is on leave..she gonna get married man !! tomorrow is her wedding..

நெஞ்சு முட்டியது வார்த்தைகள் வரவில்லை...ஊமையாகி நின்றேன்..எனக்கு சொந்தாமான நினைவுகளில் அவளை வைத்திருந்ததால் அவள் எனக்கே சொந்தம் என்று நினைத்துவிட்டேன்

who r U?


.......


hallooo cud u hear me??

அவளிடமிருந்து விலகி நடந்தேன்.

Oh Gaadd....this guy must be mad !!

இயந்திர வாழ்கையிலிருந்து என்னை விலக்கி, பெண்மையையும் இயற்கையையும் ரசிக்க கற்றுகொடுத்தவள், என்னுள் வேதியல் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு , வேறொருவனுக்கு சொந்தமாகப்போகிறாள் கொடுத்துவைத்தவன்.

மெல்லிய காற்று என்னை வருடி ஆறுதல் தந்தது, இயற்கையை ரசிக்கத்தான் கற்றுக்கொண்டேனே :)



10 comments:

Paul Rajan J said...

Part II

Apadiya meymaranthu sendra nan periya pallam irunthathu thriyathu villaponane..
apoluthu oru melliya kural enai parthu "aayoo pathu" endru solliyathu...

silaneram meymaranthu ponanen..oru alagiya sellaiyai en pakathil ninrirunthal athirchiyudan oru illampen.ennaku apoluthu suyaninayvu therumbavailay.aanal aval en valkayin thonayviyaga vanthuvital....

Unknown said...

Ithai paditha udan....ippozhuthu tharamani yil மழை aarambithu vittatthu...

Author romba anubavichi ezhuthi irukeenga pola ?

Innum inthu மழைக்காலம் topic, PART II vaaaga irukanum vendum endru vazthi ...enathu oraiyai mudithu kolkiren....

JSTHEONE said...

அருமை...சொல்லாத‌ காத‌ல் இய‌ற்கை போல் ர‌சிப்ப‌த‌ற்கு ம‌ட்டுமே .. உங்க‌ள் க‌தையின் நாய‌க‌ன் ர‌சிக்க‌க் க‌ற்று விட்டான்..... ச‌ற்று தைரிய‌ம் வ‌ந்துவிடில் அவ‌னுக்கும் ர‌சிக‌ர்க‌ள் கிடைப்பார்க‌ள்...

Vapurdha said...

@Paul, part II ezhudhuvadhe ungalukku velaya pochu...

kitta thatta oru page ezhudhirukken adha pathi onnum sollala e

@Anto, u also involved in my story thts y u left like raining in Taramani... :) thanks fr your comment

@ saravanan, thank u for your comment and encouragement.

Unknown said...

Super da, very nice... Nee romba theritta de... Apadiae story ulla poyiten.... Keep it up

Vapurdha said...

:) thank u thank u... Malli

MSK / Saravana said...

அருமை.. மிக அருமை..
:)

Vapurdha said...

@ Saravana Kumar MSK said... ஆஹா எல்லா போஸ்டையும் ஒரே நாளுல படிச்சுட்டு, கமெண்ட் போட்டிருகீங்களே .. மிக்க நன்றி

Anonymous said...

//இயந்திர வாழ்கையிலிருந்து என்னை விலக்கி, பெண்மையையும் இயற்கையையும் ரசிக்க கற்றுகொடுத்தவள், என்னுள் வேதியல் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு , வேறொருவனுக்கு சொந்தமாகப்போகிறாள் கொடுத்துவைத்தவன்.///

என்னால அப்படி வாழ்த்த முடியல.

Vapurdha said...

// hisubash said...
//இயந்திர வாழ்கையிலிருந்து என்னை விலக்கி, பெண்மையையும் இயற்கையையும் ரசிக்க கற்றுகொடுத்தவள், என்னுள் வேதியல் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு , வேறொருவனுக்கு சொந்தமாகப்போகிறாள் கொடுத்துவைத்தவன்.///

என்னால அப்படி வாழ்த்த முடியல.//

:))
அவனுக்கு அப்ப வேற வழி இல்லையே