Thursday, August 7, 2008

நிவேதா

நிவேதா school விட்டு வந்ததும் அவள் வீட்டில் இருக்கும் நேரத்தை விட காதர் மாமா வீட்டில் இருக்கும் நேரம் தான் அதிகம். வீட்டுப்பாடம் எழுதுவதிலிருந்து பரீட்சைக்கு படிப்பது வரை அவர் வீட்டில் தான். மற்ற காலனி குழந்தைகளுக்கு காதரை பார்த்தாலே பயம் தொற்றிகொள்ளும். சவரம் செய்யாத தாடி, சுருக்கமான சட்டை, மிரட்சியான பார்வையுடன் இருப்பவனை பார்த்தால் எந்த குழந்தைக்கு தான் பயம் வராது. ஏன் அந்த காலனியில் உள்ள பெரியவர்களே காதரை விநோதமாகத்தான் பார்பார்கள். 24-25 வயதேயுள்ள இளைஞன் எங்கே போகிறான் என்ன செய்கிறான் என்று யாருக்குமே தெரியாது. அவன் தங்கிருக்கும் ஒற்றை அறையில் நிவேதா போகும்போது மட்டும் தான் விளக்கு கூட எரியும்.

நிவேதா மட்டும் எப்படி அவனுடன் பழகுகிறாள் என்று அனைவருமே ஆச்சரியபட்டுபோவார்கள். ஆரம்பத்தில் நிவேதாவின் அம்மா மிகவும் பயந்தது காதர் வீடிற்கு போகதே என்று கூறியதும் உண்டு, ஆனால் அவள் அப்பா தான் சின்ன குழந்தையை இந்த விஷயத்திற்கெல்லாம் கண்டிக்காதே அவள் இஷ்டம் போல விடு என்று கூறிவிட்டார்.

காதரை பொருத்தவரை தன் இருண்டு போன வாழ்வில் சிறு மெழ்குவர்த்தியாய் நிவேதா தோன்றினாள். அப்படி என்ன தான் பேசுவார்கள் இருவரும், நிவேதா தன் பள்ளிக்கூடம் மற்றும் வீட்டில் நிகழ்ந்த அத்தனை சம்பவங்களையும் ஒன்று விடாமல் காதரிடம் கூறி விடுவாள். மாமா இன்னைக்கு என்ன ஆச்சு தெரியுமா.... என்று அவள் ஆரம்பித்தால் 2 மணி நேரம் வரை பேசிக்கொண்டே தான் இருப்பாள். இந்த குழந்தை தன்னிடம் இப்படி ஒட்டிகொண்டதை நினைத்து காதரே ஆச்சரியப்பட்டதுண்டு.

இரண்டாம் வகுப்பு படிக்கும் நிவேதா படிப்பிலும் விளையாட்டிலும் வெகு சுட்டி. அவள் போட்டிகளில் வெற்றி பெற்றதை காதரிடம் கூறும்போது, தானே வெற்றிபெற்றதைப்போல் காதர் பெருமிதம் கொள்வான்.

அன்றும் அப்படித்தான் சுதந்திர தினத்தை யொட்டி நடந்த ஓவியப்போட்டியுலும் பேச்சுப்போடியிலும் தான் முதலிடம் பெற்றதை காதரிடம் கூற வேகமாக பள்ளியிலிருந்து ஓடி வந்தாள், வாசலில் தன் அம்மா நிற்பதையும் பொருட்படுத்தாது காதர் வீட்டை நோக்கி ஓடினாள், அந்த பிஞ்சு முகத்தில் பெருத்த ஏமாற்றம், காதர் வீடு பூட்டியிருந்தது. சோர்ந்து போய் தன் அம்மாவிடம் வந்தாள் "என்ன மா காதர் மாமா வீடு பூடியிருக்கு, நான் painting and speech competition லையும் first வந்ததை சொல்லலாம்னு பார்த்தா அவர் இல்ல, எங்க போயிருக்காருன்னு உனக்கு தெரியுமா?" , "தெரியல மா அவர் வந்ததும் சொல்லிக்கலாம் இப்ப வீட்டுக்கு போகலாம் வா" என்று தூக்கிக்கொண்டாள். தொடர்ந்து அவள் வெற்றி பெற்றதைப்பற்றி அம்மா கேட்ட கேள்விகளுக்கு சிரத்தயே இல்லாமல் பதில் கூறிக்கொண்டே போனாள்.

அரை மணி நேரத்திற்கு ஒருமுறை தன் வீட்டு வாசலிலிருந்து காதரின் பூட்டிய வீட்டை எட்டிபார்த்துக்கொண்டே இருந்தாள். 8 மணி போல காதர் வீடு திறந்திருந்ததை கண்டு சந்தோஷம் பொங்க தன் புத்தக பையை தூக்கிக்கொண்டு காதர் வீட்டிற்கு ஓடினாள்

"எங்க மாமா போய்டீங்க இவ்வளவு நேரமா உங்களுக்காக தான் காத்துட்டிருந்தேன், ஏன் மாமா சோகமா இருக்கீங்க என்ன அச்சு"



"ஒன்னும் இல்ல மா, நீ சொல்லு"

"மாமா Independence day celeberation காக நடந்த நான் painting and speech competition ல நான் தான் en class ல first"

"அப்படியா டா very good"

"ஆமா அப்பறம் இந்த test notes அ பாருங்க, I got above 90 in all 5 subjects, I think this time also I'll get first rank"

"எனக்கு தெரியுமே என் நிவி குட்டி படு smart girl னு"

" painting and speech competition prizes நாளைக்கு நடக்கபோற independence day celeberation ல தரப்போறாங்க, இந்த முறையாவது நான் prize வாங்கறத பார்க்க நீங்க வரணும் மாமா please மாட்டேனு சொல்லிடாதீங்க" ....."Y மாமா you are looking so dull யாரவது திட்டினாங்களா"

"ஆமா மா எனக்கு தந்த வேலைய நான் ஒழுங்கா செய்யல னு என் முதலாளி திட்டிடாரு"

"அச்சோ அப்படியா சரி நீங்க feel பண்ணாதீங்க மாமா நான் இருக்கேன் ல" .. "நான் speech competition la பேசினத உங்க கிட்ட பேசி காட்டறேன் நீங்க relax ஆகுங்க, சரியா ?" என்று கூறிவிட்டு நிவேதா பேசிக்கொண்டிருந்தாள்

காதரின் காதில் ஏதும் விழவில்லை, வேறு ஏதோ சிந்தனைகள் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. நிவேதா பேசிமுடித்ததை கூட அவன் கவனிக்க வில்லை. எப்படி பேசினேன் மாமா என்று அவள் கேட்டதிற்கு, "நல்ல பேசின மா" என்று மட்டும் முடித்துக்கொண்டான்.


நிவேதா தன் புத்தகபையில் test notes ஐ அடுக்கிகொண்டிருந்தாள். காதர் ஏதோ யோசனையிலிருந்து விடுபட்டவன் போல, "நிவி நாளைக்கு நானும் உன்னோட school க்கு வரேன் மா"

"ஹையா !! நிஜமாகவா மாமா"

"ம் ஆமா bag a இங்கேயே வெச்சுட்டுப்போ நான் notes அ அடுக்கி வெச்சுடறேன், time பாரு late ஆகிடுச்சு நீ போய் சாப்பிட்டு தூங்கு"

"Jolly என் friends கிட்ட உங்கள introduce பண்ணி வைக்கறேன் , நாளைக்கு காலைல பாக்கலாம், Good Night மாமா"

மறுநாள் காதர் கூறியது போலவே நிவேதாவுடன் பள்ளிக்கூடத்திற்கு சென்றான். அன்று நிவேதா வானத்தில் பறந்து கொண்டிருந்தாள், சரியாக 9 மணிக்கு விழா ஆரம்பமானது. அந்த வட்டாரத்திலே இது பெரி பள்ளி என்பதால் அந்த ஊர் MLA சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். பரிசு வாங்குபவர்களுக்காக ஒதுக்க பட்டிருந்த இடத்தில் நிவேதா அமர்ந்திருந்தாள். அங்கிருந்து காதரை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு காதரை அங்கு காணவிலலை, வேகமாக வீடிற்கு வநதான்.

அவனுடைய கைப்பேசி அழைத்தது, " என்ன காதர் வேலைய முடிச்சுட்டியா?"

"ம்"
"உனக்கு எப்படி டா school bag la BOMB வைக்கற idea வந்துது"
"......"
"எப்படியோ வேலைய சரியா செய்துட்ட , இனிமேல் நீ அங்கே இருந்தால் ஆபத்து, நம்ம கார் அனுப்பறேன் உடனடியா இங்க வந்திடு"

"சரி" அவன் இணைப்பை துண்டித்ததும் பெரிய வெடி சத்தம் கேட்டது..

நிவேதாவின் சத்தம் ஓய்ந்திருக்கும்... முதன் முறையாக தனக்கு கண்ணீர் வருவதை உணர்ந்து அதை துடைத்துக்கொண்டு புறப்பட்டான்..

"நீங்க feel பண்ணாதீங்க மாமா நான் இருக்கேன் ல" என்று நிவேதா கூறியதை தவறாய் அர்த்தம் பண்ணிக்கொண்டானே !!!

ADVANCE INDEPENDENCE DAY WISHES

13 comments:

Unknown said...

Very nice story... Correct ah independance day ku etha madiri irukku...

Anonymous said...

thats amazing story.

JSTHEONE said...

அந்த‌ காத‌ருக்கு க‌ண்ணீர் வ‌ருகிற‌தோ இல்லையோ...
சில‌ மென் நெஞ்ச‌ங்க‌ளுக்கு வ‌ந்துவிடும் போல் ஒரு முடிவு......
முத‌ல் பாதியில் நிவேதாவின் ம‌ழ‌லை மொழி கேட்ட‌ எம‌து செவிக‌ள் இறுதியில் அந்த‌ வெடி ச‌த்த‌தை கேட்ட‌ ஒரு அதிர்ச்சி !!! அருமை அருமை.....

may i know who u r? i cant get frm ur profile... how come u know abt my blog?

Vapurdha said...

Malli...Thank U...U understood my timing :)

"how to invest stocks" ... Thanks for ur coming and comments

jstheone..I myself dntknw hw i got 2 knw abt ur blog...I was jus browsing "tamizmanam.net".. என் படைப்பு நன்றாக இருகிறதோ இல்லையோ உங்கள் விமர்சனம் மிக நன்றாக உள்ளது .. எப்படி தான் எழுதறீங்களோ....தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி _/\_

Paul Rajan J said...

Part II

Kathar vituku vanthu parthal nivetha aluthukonda varugiral....

mamma nan functionla irukumpoluthu ennai parka en amma vanthargal.so avargalaii parka nan odiya poluthu nan utkarntha edathil irunthu periya satham..

Mayakam thelinthu ipoluthuthan hospitallil irunthu amma alaithukondu vanthargal. neenga ungaa kadavulidam kandipaga enakaga prayer seythu thanks soluvingala please.

kathar mayangi vilunthan...

JB said...

கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க... ஹ்ம்ம் கலக்குங்க... பார்ட் 2 கூட அருமை.

JSTHEONE said...

Oh G8...COntinue ur posting

Vapurdha said...

Paul............நான் என் கதையின் நலனுக்காகவே இப்படி ஒரு முடிவை எழுதினேன் (சற்று சுயநலத்தோடு). ஆனால் என் மன சஞ்சலத்தை உங்களது Part II மூலம் தீர்த்து வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி. என் அம்மாவிற்கு இக்கதையின் முடிவை விட தங்களின் முடிவு தான் மிகவும் பிடித்திருக்கிறது.

Vapurdha said...

John....எல்லாம் ஒரு முயற்சி தான், இன்னும் நிறைய முயற்சி செய்வேன். பொறுத்துக்கொள்ள தயாராக இருங்கள்.

JSTHEONE said...

u can also check if u find time http://momentsofjs.blogspot.com/

MSK / Saravana said...

ஏன் இப்படி ஒரு கொலைவெறி..???

நல்லா அழகாத்தானே கதை சென்றுகொண்டிருந்தது..
ஏன் இப்படி ஒரு முடிவு..?

எனக்கு பிடிக்கல..

Anonymous said...

//Mayakam thelinthu ipoluthuthan hospitallil irunthu amma alaithukondu vanthargal. neenga ungaa kadavulidam kandipaga enakaga prayer seythu thanks soluvingala please.

kathar mayangi vilunthan...//

:))))))))

Senthil Prabu said...

yenakullum vedithathu....

Gr8 thinking....