Monday, August 25, 2008

காதலெனும் கடலில் ..

மனம் போல் மாங்கல்யம் என்கிற பழமொழியின் முழு அர்த்தம் தெரியாது ஆனால் தனக்கு அமைந்த மன வாழ்க்கையை எண்ணி பூரித்துப்போயிருந்தாள் வாணி. திருமணம் முடிந்து நான்கு நாட்களாகி விட்டது. இரண்டு நாட்கள் பிறந்த வீட்டிலும் இரண்டு நாட்கள் புகுந்த வீட்டிலும் கழித்தாகி விட்டது. இனி கணவரோடு மும்பை செல்ல வேண்டியது தான்.

பிறந்து, வளர்ந்து, படித்து, வேலை பார்த்த சென்னையை விட்டு செல்ல வேண்டும். இதை நினைக்கும் போதே சிறு கவிதை தோன்றிற்று வாணிக்கு.

என் வீடு, என் அறை,
என் கட்டில், என் அலமாரி,
என் நாய்குட்டி, எத்தனை மமதை
உன் ஒற்றை உறவுக்காக அத்தனையையும்
விட்டுவிட்டு வா என்கிறாயே !!
இளவரசியாக இருந்த என்னை
ராணியாக வாழ கூப்பிடுகிறாய்
இது புரியவில்லையே இந்த பேதைக்கு !!

அப்பாவின் அறிவுரை, அம்மாவின் கண்ணீர், தம்பியின் சந்தோஷ தழுவல், நாய்குட்டியுடன் கடைசி நேர கொஞ்சல், எல்லாம் முடிந்து கிளம்புகிற நேரம் வந்திற்று. அனைத்து உறவினர்களின் வாழ்த்து பெற்று ரயிலில், இனி கணவன் தான் எல்லாம் என்று ஏறினாள்.

கணவனிடம் பேச தோன்றவில்லை அவளுக்கு, கண்கள் கலங்கியது, வாழ்கையில் இது வரை அனுபவித்திடாது ஒரு வெறுமையை உணர்ந்தாள். "வாணி ! என்ன மா ஆச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்க.." மதன் கேட்க..
"ம்ம் ஒண்ணுமில்ல " என்று மூழ்கிய சிந்தனையிலிருந்து வெளிப்பட்டாள்.

"என்ன வாணி எல்லாரையும் விட்டுட்டு புது ஊர், புது இடத்துக்கு போகபோறோமேனு நினைச்சுட்டு இருக்கியா. எனக்கு புரியுது உனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு. எல்லாம் கொஞ்ச நாள்ல சரி ஆயிடும், U can take your own time. உடனே Job search பண்ணனும்னு அவசியம் இல்ல, உனக்கு அங்க நல்ல set ஆன அப்பறம் பாத்தா போதும். "

வாணி அவன் கண்களையே பார்த்து அவன் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தாள்.

"என்ன வாணி, நான் இருக்கேன் மா உனக்கு.. நீ எதுக்காகவும் கவலைப்படகூடாது" என்று கூறி அவள் வலது கரத்தை இருக்க பிடித்துக்கொண்டான். அத்தனை ஆறுதலான வார்த்தைகள், லேசாக புன்னகைத்து அவன் தோல் மேல் சாய்ந்து கொண்டாள்.

மதன் மிகவும் அமைதியானவன், அதிர்ந்து கூட பேசமாட்டான். தான் ME முடித்தவன் MNC யில் Director ஆக பணிபுரிகிறோம் என்ற தோரணை ஏதும் இல்லாமல் எளிமையாகவே தோன்றினான். அதனாலேயோ என்னவோ வாணியின் அப்பாவிற்கு மதனை பார்த்ததும் பிடித்துவிட்டது.

மற்றவர்களைப்போல் கல்யாணத்திற்கு முன்பு கைபேசியில் மணிக்கணக்கில் பேசியது கிடையாது, பேச நேரமும் கிடைக்கவில்லை. வாணியின் அப்பா பதினைந்தே நாட்களில் திருமனத்தேதி குறித்து விட்டார் . தடபுடலாக திருமணம் நடந்தது.சென்ற மாதம் வரை மதனுடன் தன் வாழ்கை இணையப்போகிறது என்று வாணி நினைத்துப்பார்கவில்லை.

"மதன் நீங்க கவிதை எழுதுவீங்களா?" என சட்டென்று மதனை கேட்டாள்

" :) என்ன திடீர்னு கேக்கற?"

"இல்ல நா சும்மா நேரம் கிடைக்கும் போதுஏதாவது எழுதுவேன் அதான் கேட்டேன்"
"அப்படியா !! எனக்கு கவிதை கதை எதுவும் எழுதத்தெரியாது", என்று புன்னகைத்தான்

மும்பை - ...................

திங்கட்கிழமை காலை,புதிதாக கட்டப்பட்டிருந்த 2HBK flat ட்டில் புதுக்குடித்தனம், Packers and Movers மூலம் வந்த பொருட்கள் பாதி பிரித்தும் பிரிக்காமலும் இருந்தது.மதன் அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தான். வாணி அப்போது தான் எழுந்தாள்.....

"Ready ஆயிடீங்களா மதன்?"
"ஆமா வாணி உனக்கு Breakfast வாங்கி வெச்சுருக்கேன், சாப்பிட்டு rest எடு. அப்பறம் நீ இதெல்லாம் தனியா arrange பண்ணிட்டு இருக்காத. Evening சீக்கிரம் வந்துடுவேன், நா வந்தப்பறம் பாத்துக்கலாம், Mess ல lunch சொல்லிருக்கேன் வந்துடும், ஒரு சின்ன பையன் தான் கொண்டு வருவான் பாத்துக்க"

"சரி evening எப்ப வருவீங்க?"

"ஹ்ம்ம் 4 மணிக்குள்ள வந்துடுவேன், சொல்ல மறந்துட்டேன் அந்த பெரிய Box open பண்ணாத, அதெல்லாம் என் room ல இருந்து vacate பண்ண things , நா வந்து arrange பண்றேன்"

"ஹ்ம்ம் ok, Good day!!"
அருகே வந்து அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான், Take care da என்று கூறிவிட்டு கிளம்பினான்

அன்று -

உன்னை நேருக்கு நேர் காண கண்கள் தயங்கின
கடைக்கண்ணே தக்க உதவியாய் இருந்தது
உன்னிடம் பேச வார்த்தைகள் வரவில்லை
வெறும் காற்றின் உச்சரிப்பை வைத்தே அர்த்தம் கண்டாய்
நாணம் என் சீலையுடன் என்னை சேர்த்து கட்டிக்கொண்டது !!

இன்று -

இரண்டு கண்களும் ஒன்றை ஒன்று ஆட்கொண்டது
ஈருடல் ஓருயிர் என்பதன் அர்த்தம் புரிந்தது
பேச வார்த்தைகள் தெரிந்தும் - இது
பேசுவதற்கான நேரம் இல்லையென உணர்ந்தேன்
எனக்குள் இருந்த நாணம் எடுபடாமல் போய்விட்டதே !!

தன்னை நினைத்து சிரித்துக்கொண்டே படுக்கையில் சாய்ந்தாள்

எவ்வளவு நேரம் தான் படுத்துக்கொண்டிருப்பது என்று வாணி Packing பொருட்களை அடுக்கிவைத்தாள். பெண்களுக்கே உரித்தான ஆர்வம் மதன் எந்த பெட்டியை திறக்க வேண்டாம் என்று கூறினானோ அதை திறப்பதற்காக பெட்டியை இறக்கி Dining table மீது வைத்தாள். Packing மிகவும் strong ஆக இருந்ததால் தன்னிடமிருந்த கத்திரிக்கோலால் அதை பிரிக்க முடியவில்லை. கத்தியை தேடிப்பிடித்து packing labels ஐ கிழித்தாள். தலையணை அளவிற்கு நிறைய புத்தகங்கள். எல்லா புத்தகங்களையும் study room யில் உள்ள கண்ணாடி அலமாரியில் அடுக்கிவைத்தாள். இரண்டு tennis bat கள், சுவாமி படங்கள், சில project files .. எல்லாவற்றையும் சீர் படுத்தினாள். பிறகு தான் அந்த பெட்டியின் அடியில் ஒரு Briefcase இருப்பதை பார்த்தாள். அதை வெளியே எடுத்து வைத்து விட்டு அந்த இடத்தை சுத்தப்படுத்தினாள்.

மறுபடியும் தான் புத்தகங்களை அடுக்கி வைத்த அலமாரியை பார்த்து, மதன் இதன் பார்த்தால் சந்தோஷப்படுவான் என்று பெருமிதம் கொண்டாள்.திரும்பவும் வந்து Dining table லில் இருந்த Briefcase ஐ திறந்தாள்.

இரண்டு பெரிய கவர்கள் இருந்தன . முதல் கவரை பிரித்ததில் அதில் உள்ள அனைத்தும் Love Greeting Cards, சுமார் நூற்றி ஐம்பது கார்டுகள் இருக்கும், அத்தனையும் காதலை வெளிப்படுத்தும் வகையிராக்கள். ஒன்றும் புரியவில்லை வாணிக்கு இடிந்து போய் உட்கார்ந்திருந்தாள். எல்லாவற்றிலும் "என் அன்பு கலைக்கு" என்ற தலைப்பும் தேதியும் இருந்தது. ஏழு வருடங்களுக்கு முன்பிருந்து சேகரித்த கார்டுகள் ,கடந்த பதினைந்து நாட்கள் வரை தேடியிட்டிருந்தது. வாணியின் கண்கள் கலங்கின. கண்ணீரால் எல்லாமே மங்கலாய் தெரிந்தது.

"மதன் ஒரு பெண்ணை காதலித்திருக்கிறானா?"

"யாரையாவது Love பண்ணிருகீங்களா மதன் னு கேட்டதுக்கு, உன்னைத்தவிர வேற யாரும் என் மனதில் இல்லை வாணி என்று கூறினானே" ச்சே எத்தனை பொய்யான வார்த்தைகள். பதினைந்து நாட்களுக்கு முன்பு வரையுள்ள கார்டை பார்த்தால்அந்த பெண்ணின் நினைவோடு தான் தன்னை திருமணம் முடித்திருக்கிறான். ஏன் இப்பொழுது கூட அவளின் நினைவுகளோடு தான் இருக்கிறான்."

"கடவுளே எனக்கு ஏன் இப்படி நடக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லயே. இத்தனை பொய்யான மனிதனோடு வாழ்க்கையா? வேண்டவே வேண்டாம் எல்லாம் முடிந்தது. இப்பொழுதாவது இவனைப்பற்றி தெரிந்ததே." வாழ்க்கையை மீட்டுக்கொண்டு கிளம்ப வேண்டியது தான் என்று முடிவெடுத்தாள்.

மற்றொரு கவரையும் பிரித்தாள், மூன்று பெரிய Diary கள் இருந்தன. "என் கலைமகளுக்கு சமர்ப்பணம்" என்ற தலைப்பு வேறு . உள்ளே முழுக்க முழுக்க கவிதைகள். இதுவும் பொய் ,கவிதையே எழுதத்தெரியாது என்றானே. வாழ்க்கையே தேவையில்லை என்றாகி விட்டது இனி என்ன ஆராய்ச்சி. எல்லாவற்றையும் தூக்கிஎறிந்து எழுந்தாள்.

மதன் அலுவகத்திலிருந்து கிளம்பினான். வாணியின் அப்பாவிடமிருந்து அழைப்பு வந்தது.

"எப்படியிருக்கீங்க மாப்ள, வாணி எப்படியிருக்கா?"

"நாங்க நல்லாயிருக்கோம் மாமா, வீட்ல எல்லாரும் நல்லாயிருக்காங்களா?"

"எங்களுக்கென்ன தம்பி நல்லாயிருக்கோம், நீங்க வாணி கிட்ட சொல்லிடீங்களா மாப்ள, நா அத பத்தி கேக்கறதுக்காக தான் போன் பண்ணினேன்."

"இல்ல மாமா இன்னைக்கு தான் சொல்லபோறேன். அதுக்காக தான் office லருந்து சீக்கிரமாவே கிளம்பறேன்"

"அப்படியா, நீங்க அவ காலேஜ் சீனியர் , அவளுக்கு தெரியாமலே ஏழு வருஷமா தன்னையே நினைச்சுட்டு இருந்தவரை கல்யாணம் பண்ணிருக்கோம்னு தெரிஞ்சா அவளுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் அத வாணி சொல்லி நா கேக்கணும் தம்பி "

" :) சரி மாமா அவ கிட்ட சொன்னதும் நானே உங்களுக்கு போன் பண்றேன், போதுமா"

" என்ன தம்பி நீங்க, நா கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லலாம்னு சொன்னேன், நீங்க வேணாம்னு சொல்லிடீங்க.. இப்ப சொல்லிருபீங்கனு பார்த்தா...இன்னைக்கு சொல்லிடுங்க தம்பி"

"இல்ல மாமா கண்டிப்பா சொல்றேன்"

தன் வாணிக்கு இன்ப அதிர்ச்சியை தரப்போவதை நினைத்துக்கொண்டே காரில் சென்றான்.

வீடு பூட்டியிருந்தது, கீழ் வீட்டு மாமி சாவியை கொந்துவந்து தந்தார்கள்.

"ஏன்பா உன் ஆத்துகாரிக்கும் நோக்கும் ஏதாவது பிரச்சனையா? கையில பெட்டியோட மூக்க சிந்திண்டே வந்து சாவியை தந்துட்டு போனா."

"என்ன மாமி சொல்றீங்க காலைல நல்லா தான இருந்தா என்கிட்டே எதுவும் சொல்லலையே"

"நா எவ்வளவோ கேட்டு பாத்தேன், நீ வந்ததுக்கு அப்பறம் போகச்சொன்னேன், எதையும் கேக்ற மனநிலையில அவ இல்ல. அவ தோப்பனாருக்கு inform பண்ணிடு.நான் வரேன்"

"ஆயிரத்தெட்டு குழப்பங்களோடு வீட்டினுள் நுழைந்தான். "

" Briefcase லிருந்து வெளியே கிடந்த கார்டுகளையும் கவிதை புத்தங்களையும் பார்த்ததும் புரிந்து வீட்டது மதனுக்கு.

ஏழு வருடங்களாக புதைத்து
வைத்திருந்த புதையல் !!
வெளிப்படுத்தினால் நீ துண்பப்படுவாயோ
என்று மனதிற்குள் பூட்டிவைத்திருந்தேன்!!
நான் துண்பப்பட்டால் பரவாயில்லை என்று !!
புதையல் வெளிப்பட்டால்
கட்டியணைத்துக்கொள்வாய் என நினைத்தேன் !!
என்னை தனியே விட்டுச்சென்று கொன்றாயே !!
வாணியும் நீ தான், என் கலைமகளும் நீ தான்,
என் ஊன் உயிர் அனைத்தும் நீ தான்
புரியவில்லையா உனக்கு ?

தன் கவிதையை கண்ணீரால் எழுதினான். இன்று வாங்கி வந்த கார்டில் "என் அன்பு வாணிக்கு" என தேதியிட்டு அதன் மீது தலை சாயித்துக்கொண்டான்.


மயக்கத்திலிருந்து எழுவது போல கண்களை திறந்தான் மதன். நெடுநேரம் ஆகிவிட்டதோ வாணியின் அப்பாவிற்கு போன் பண்ணனுமே என எழுந்தான் .

அருகே வாணி !!?!!

இது கனவா? நினைவா?

"வாணி ? வந்துட்டியா....."

கண்களில் நீர் பெருக ஓடி வந்து மதனை கட்டிகொண்டாள்.."மன்னிச்சுடுங்க மதன் .. அப்பா சொன்ன அப்பறம் தான் எனக்கு புரிந்தது, Im so sorry..I hurted u alot..என்ன மன்னிச்சுடுங்க please"

"அன்பின் மலையின் அருகே
மடுகாகிப் போனேன் !!
விலை மதிக்க முடியாத மாணிக்கத்தை
இழக்க இருந்தேன் !!
ஈடு இணையில்லாத பொக்கிஷத்தை
உதாசினப்படுத்தி விட்டேன் !!
சிறு பிள்ளையின் தவறை தாய்
மன்னிப்பதில்லையா !!
காதல் கடலை கானல் நீராய்க்கூட
உணராமல் போனேன் !!
உன் அன்பிற்கு அடிமையாக வந்துள்ளேன்
ஏற்றுக்கொள்வாயா ??"


இந்த கவிதையுடன் நம் கதையும் முடிந்தது ...

"Love is not a business nor a give and take policy... Its like Bank account..whatever u deposit, one day u will get with interest"

இதைத் தான் இவ்வளவு நேரமாக சொல்ல வந்தேன் .. புரிந்திருந்தால் சரி .. பொறுமையாக படித்த தங்களுக்கும், தங்கள் நேரத்திற்கும் நன்றி !!

19 comments:

JSTHEONE said...

awesome narration chanceless.....

Story oda climax konjam guess panna mudinjaalum...narration superb excellent

Unknown said...

superb dear... Un talent engayooo poyeduchu da

Anonymous said...

its good.... but the story is bringing abt the the same old jealousy game in the name of love... marriage doesnt mean that u should open all...(even if the letters were not for her...)

Anonymous said...

Story narration is really good.
keep it up

Vapurdha said...

@ Saravanan, thanks for your comments.. I tried to manage the suspense to sum extent :)

Vapurdha said...

@ Malli... Thank u da..

Vapurdha said...

@ shivamtm.. Thank u vry mush for ur visit n comments...

I never explained about any jealous in my story..It is all about possessiveness.. In world there can be no luv without possessiveness..It creates the basic intimacy between 2 people

Just because of curiosity, Vanni opened that briefcase and not to do any investigation on Madan's character..

Thanks for your time, you had spent to post comment.

Vapurdha said...

@ anonymous.... Thank you for the comment.. :)

Anonymous said...

hi...thannx for ur excellent explanation...being somewhat possessive may be looking lookin attractive...in initial stage of what u call love... an after that...many breakups are happening coz of possessiveness...
And since in this case ...they got married..an more over.. u didnt mention whether its arraned or love marriage(meant from both side)... they wont breakup...coz..Indian culture...so they ll drag on...

But sad to accept that this is what is happening in most ppls cases...me too included... :)

Vapurdha said...

@ shivamtm.. What u said is true. "Too much of anything is Good for Nothing"..."Too much of possessivess may spoil Love"...

Its Love & arranged marriage for Madan and Arranged Marriage for Vanni... :) U dint get it..

//ME TOO INCLUDED//.... sorry about that..

anyways thanks for ur valuable comments about my story...

Unknown said...

Naaa Story ya padikum pozhuthu...

Enaku 2 film nyabagam vantha thu

1. Sillunu Oru Kadhal (bcos jothika used to read surya's dairy)
2. Mouna Ragam (revathi's intention after marriage)

But i really changed at last... But in my mind, this climax was a known one..

Awesome Vapurdha...Keep up the good Work...

Venkata Ramanan S said...

Good one :)

Vapurdha said...

@ ரமணன்...Thank you for your visit and comment

MSK / Saravana said...

வாவ். .
ரொம்ப ரொம்ப அழகான கதை..
கவிதைகளும் மிக அழகு..

தொடர்ந்து எழுதுங்கள்..
வாழ்த்துக்கள்..

http://urupudaathathu.blogspot.com/ said...

அருமையான நடை..
அழகான முடிவு.. (யூகிக்க முடிந்தாலும்)
வாழ்த்துக்கள் ...

Vapurdha said...

@ Saravana Kumar MSK .. Thank you very much for the comment and encouragement... will try to give my best

Vapurdha said...

@ உருப்புடாதது_அணிமா... வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி .. _/\_

Unknown said...

nice narration.. kinda liked the flow..

Vapurdha said...

//Nambi said...
nice narration.. kinda liked the flow..
//

Thanks Nambi