Thursday 28 August 2008

எங்க கிட்டயே வா ...

Hero: அப்படியா பண்ணினான் அவன், அவனுக்கு தெனாவட்டு அதிகமாஆகிடுச்சு அதான் இப்படி எல்லாம் பண்ணிட்டு திரியறான். நான் யாருனு ஒரு காட்டு காட்டினா தெரியும்.


Heroine: வேணாம் விடு, இத பெரிய பிரச்சனையா போய் சண்டையெல்லாம் போடாத . அப்பறம் உன்ன எதாவது பண்ணிடபோறான்


Hero: உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சுருக்கா? இந்த ஏரியா ல நான் எப்படி பட்டவன்னு உனக்கே தெரியும். தெரிஞ்ச நீயா இப்படி பேசற.


Heroine: எனக்கு தெரியாதா உன்ன பத்தி. ஆனா அவன் இந்த ஏரியா வுக்கு புதுசு, அவனுக்கு எப்படி உன்ன பத்தி தெரியும். அதோட அவன் GYM வேற வைச்சு நடத்தறான். ஆள் பலம் உன்ன விட அதிகம் அதனால தான் சொல்றேன். எனக்கு நீ முக்கியம், ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற.


Hero: நா சொல்றது எதையும் நீ கேக்காத, ஆனா நீ சொல்றத மட்டும் நா கேக்கனுமா? உன்ன அவன் இருக்கற பக்கம் போகாத, அவன் ஒரு மாதிரினு போன வாரமே சொன்னேன். பின்ன ஏன் போன?


Heroine: Lousie தான் கூப்பிட்டா, அந்த Bakery க்கு போகலாம்னு. நீ திட்டுவ போகவேணாம்னு சொன்னேன் அவ தான் Compell பண்ணி கூட்டிட்டு போய்ட்டா.


Hero: அவனோட Bakery னு தெரிந்தே போயிருக்க நீ. இனிமேல் அவளோட சேராத

Hero Friend Entry......


Friend: என்ன டா மச்சான் கடுப்பா இருக்க? உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா sister?


Hero: அவன் அடங்கமாட்டான் போல டா, இன்னைக்கு என் ஆளு மேலையே கை வெச்சுருக்கான்..


Friend: என்ன டா மாப்ள சொல்ற? யாருடா நம்ம sister மேலேயே கை வெச்சது? கதை கேட்டுட்டு இருக்கியா நீ, நான் போய் நம்ம பசங்கள கூட்டிட்டு வரேன். யாரா இருந்தாலும் போட்டுடலாம் இன்னைக்கு.


Hero: அந்த Flat ல புதுசா வந்துருக்கானே அவன் தான். Gym வெச்சுருந்தா பாயந்துடுவோமா நாம. Blood Boil ஆகுது மச்சி, நம்ம ராமு ஆளு மேல கைய வைச்சதுக்கே அவன போட்டுருக்கணும். தப்பு பண்ணிடோம் டா.


Heroine: வேணாம் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.


Hero: நீ வீட்டுக்கு போ. நாங்க பாத்துகறோம்.


Heroine: இல்ல ..


Hero: கெளம்பு னு சொல்றேன் ல. போ


Friend: இப்ப ஒன்னும் கெட்டுப்போகல டா. நீ tension ஆகாத மாப்ள இன்னைக்கு நாமா அவனா னு பாத்துடலாம். நான் போய் நம்ம பசங்கள கூட்டிட்டு வரேன், நீ வேணும்னா சொல்லு பக்கத்து ஏரியா பசங்களையும் support க்கு கூப்பிடுக்கலாம்.


Hero: ச்சிஅவனுக்கு நம்ம பசங்களே போதும் டா. ஏண்டா இவன் ஆளு மேல கைய வைச்சோம்னு அவன் நெனச்சு நெனச்சு feel பண்ணனும். உயிர மட்டும் உடம்புல விடனும் டா.


Friend: நீ இங்கேயே இரு, பசங்களோட வரேன்


Hero: ம் சரி சீக்கிரம் வா


.............................


Friend: வந்துடோம் டா. வா இப்ப போகலாம். அவன் Bakery a close பண்ணுற நேரம். இப்ப போனா correct a இருக்கும்.


அனைவரும் படைஎடுத்து Bakery முன் போய் நின்றனர்.


Bakery Owner: ச்சி நாய்களா, மிச்சம் மீதி தின்றதுக்குனே வந்துடுதுங்க, அந்த குச்சியை எடுமா. காலைல ரெண்டு நாய விரட்டினா, சாயுங்காலம் இத்தனை வந்து நிக்குது. இந்த area ல நாய்கள் தொல்லை இவ்வளவு அதிகமா இருக்கே. தே ச்சி ஓடுங்க !!!

10 comments:

மித்ரா குட்டி said...

நல்ல மொக்கை....
தாங்க முடியலைங்க... :)

Saravana Kumar MSK said...

தாங்க முடியலை..

ஏன் இந்த கொலைவெறி??
;)

JSTHEONE said...

nalla narration.... semayaa build up kodudhu last ah asaalta mokkaiya thelichu vittuteenga.... good entertaining....

உருப்புடாதது_அணிமா said...

தாங்க முடியல...
ஏன் இப்படி???
நல்ல இருங்க (வேற என்னத்த சொல்றது)
கழுத்துல வருது ஸேம் ப்ளட்..

Vapurdha said...

@ மித்ரா குட்டி, Saravana Kumar MSK and உருப்புடாதது_அணிமா ... என்னங்க பண்றது எவ்வளவு நாள் தான் செண்டிமெண்ட் ஆகவே எழுதறது....

அட இந்த பதிவுக்கு கிடைச்ச மரியாதையப்பாருங்க மூன்று பேர் புதுசா வந்து கம்மென்டிட்டு போயிருக்கீங்க ...... :)

வருகைக்கும் கம்மென்டிட்டு போனதுக்கும் நன்றிங்கோ ....

Vapurdha said...

@ Saravanan :) naanga build up ellam semaiya kudupom la ...

Thanks for ur comment..

க விக்னேஷ் said...

பயங்கரமான மொக்கை.... இருந்தாலும் மிகவும் ரசிக்கும்படிய்யாக இருந்தது.... உங்கள் நகைச்சுவை உணர்வை நன்றாக காட்டியுள்ளீர்கள்....

Vapurdha said...

மிக்க நன்றி விக்னேஷ் :))))... _/\_

hisubash said...

ஆஹா. சூப்பரு. நல்லா நகைச்சுவையில விழையாடியிருக்கீங்க.
உங்களை அறிமுகம் செய்த உருப்படாதண்ணாவுக்கு தாங்ஸ்!!!
தொடர்ந்து கலக்குங்க.
வாழ்த்துக்கள்

Vapurdha said...

//அறிமுகம் செய்த உருப்படாதண்ணாவுக்கு தாங்ஸ்!!!//

romba thanks anna

//ஆஹா. சூப்பரு. நல்லா நகைச்சுவையில விழையாடியிருக்கீங்க//

//தொடர்ந்து கலக்குங்க.
வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி சுபாஷ் !!